இதுகுறித்து பிடிஐ வெளியிட்டுள்ள செய்தி:
மாநில கூடுதல் தலைமைச் செயலர் கே. ஜெயக்குமார் தலைமையிலான 14 பேர் கொண்ட குழு இப்பரிந்துரையை வழங்கியுள்ளது.
பாலக்காடு மாவட்டத்தில் பிளச்சிமடா என்னுமிடத்தில் கோகோ கோலா குளிர்பான நிறுவனத்தின் ஆலை அமைந்துள்ளது. அந்த ஆலையால் அப்பகுதியில் குடிநீர் மட்டம் வெகுவாக குறைந்துவிட்டதாகவும், ஆலைக் கழிவு காரணமாக விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இப்பிரச்னை குறித்து ஆராய கூடுதல் தலைமைச் செயலர் தலைமயில் குழு அமைத்தது கேரள அரசு.
இக்குழுவின் அறிக்கை இன்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் என்.கே. பிரேமசந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த அறிக்கைஅமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அப்போதுஅமைச்சர் உறுதியளித்தார். உலக தண்ணீர் தினமான இன்று, இத்தகைய அறிக்கை கேரள அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
விவசாய இழப்புக்காக ரூ. 84 கோடி, நீர்வளத்தை நாசப்படுத்தியதற்காக ரூ. 62 கோடி, சுகாதார இழப்புக்காக ரூ. 30 கோடி, ஊதியம் மற்றும் வேலைவாய்ப்பு இழப்புக்காக ரூ. 20 கோடி, ஆலைக்கு தண்ணீர் விநியோகத்திற்காக ரூ. 20 கோடி என மொத்தம் ரூ. 216 கோடி ரூபாயை கோகோ கோலா நிறுவனத்திடமிருந்து பெற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கேரள அரசின் ஆய்வுக்குழு பரிந்துரை செய்துள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
முல்லைப் பெரியாறூ அனையின் மூல வாய்க்காலாகவும் இருப்பது இந்த கோக கோலா பிரச்சனையே.
http://kalachuvadu.com/issue-89/pathi03.asp
மாயாவித் திருடர்கள்
சக்கரியா
பன்னாட்டு மூலதனங்களால் பிரபலமடைந்திருக்கிறது தமிழகம். முதலீட்டாளர்களில் பலரும் – உதாரணமாக பி.எம்.டபிள்யூ. கார் நிறுவனம் – கேரளத்துக்கு வந்து முதலீடு செய்வதற்கான சாத்தியங்களை விவாதித்தவர்கள். ஆனால் அவர்கள் உயிர் தப்பி ஓடிவிட்டார்கள். காரணம், கம்யூனிஸ்டுகளும் பிற அரசியல் கட்சியினரும் சேர்ந்து கேரளத்தில் உருவாக்கிவைத்திருக்கும் தொழிற்சூழல் பைத்தியக்கார விடுதிக்குச் சமமானது. தொழிலாளிகளின் மூளைகளை அரசியல் கட்சிகள் பொய்களால் மழித்துவைத்திருக்கின்றன. கம்பெனியைத் திறப்பதில் அல்ல; மூடுவதிலேயே அவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள் இடையில் நின்று இரு தரப்பினரின் சட்டைப் பைகளிலும் கை போடுகிறார்கள். இன்று கேரளத்தில் முதலீடு செய்வதும் அதைக் கடலில் வீசுவதும் ஏறத்தாழ ஒன்றுதான்.
இங்கே சின்ன அளவிலாவது முதலீடு செய்யத் துணிந்த ஒரு வெளிநாட்டு நிறுவனம் துரதிருஷ்டவசமாகக் கொக்கோகோலா மட்டுமே. அர்த்தமில்லாத ஒரு பானம். அதைக் குடிப்பதனால் தாகம்கூடத் தீராது. அது மட்டுமல்ல, குழந்தைகள் அதைக் குடிப்பதால் குண்டோ தரர்களாகவும் அகாலத்தில் நீரிழிவு நோயாளிகளாகவும் மாறக்கூடும். மதுவைப் போலவே கொக்கோகோலாவும் தீங்கானதுதான். மது நல்லதல்ல என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், கேரளத்தில் அரசே மது விற்பனையை நடத்துகிறது. மது அருந்து பவர்களின் எண்ணிக்கையோ கொக்கோகோலா குடிப்பவர்களின் எண்ணிக்கையைவிடப் பல மடங்கு.
கொக்கோகோலாவுக்குப் பாலக்காடு மாவட்டம் பிளாச்சிமடையில் தொழிற்சாலை தொடங்க அனுமதி அளித்தது அன்று ஆட்சியிலிருந்த இடது முன்னணி அமைச்சரவையே. 2000இல் அந்நிறுவனம் உற்பத்தியைத் தொடங்கியது. 2001இல் காங்கிரஸ் முன்னணி அதிகாரத்துக்கு வந்தது. அப்போதுதான் பழைய மார்க்சிஸ்ட் முன்னணியில் அங்கமாக இருந்த ஜனதா தளம் (எஸ்) கொக்கோகோலாவுக்கு எதிராகக் களமிறங்கியது………………
வங்கதேசத்தில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க வழி வகை செய்யப்பட வேண்டும் என்று பெருமெடுப்பபிலான பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்ற போதிலும், அங்கு வாழும் இரண்டு கோடி மக்கள் தொடர்ந்தும் ஆர்சனிக் நச்சுப் பொருள் கலந்த நீரையே அருந்திக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையும், வங்கதேச அரசாங்கமும் வெளியிட்ட ஒரு அறிக்கையில் இந்த தகவல் வெளிவந்திருக்கிறது.
கோடிக்கணக்கான வங்கதேச மக்களின் உடல்நலனுக்கு ஆர்சனிக் வேதிப்பொருளே தொடர்ந்தும் முக்கிய அச்சுறுத்தலாக இருந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அந்த நாட்டின் முக்கிய உணவுப் பொருளான நெல் மாசடைந்த நீரின் மூலம் விளைவிக்கப்படும் போது, அறுவடை செய்யப்படும் அரிசியில் கூட ஆபத்தான அளவுக்கு ஆர்சனிக் இருக்க முடியும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
ஆர்சனிக் நச்சுப் பொருள் புற்றுநோய் மற்றும் நுரையீரல் நோய்களுக்கு வழி செய்கிறது.
– BBC