இலங்கை, பதுளை மாவட்டத்திலுள்ள கொஸ்லந்தை, ஹல்தும்முல்லை, மீரியபெத்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வசித்து வந்த ஒரு முழுக் கிராமமே மண்ணுக்குள் புதையுண்டு போயுள்ளது.
கிட்டத்தட்ட இருநூறுக்கும் அதிகமான மக்களை, அவர்கள் நேசித்த மண்ணே உயிருடன் விழுங்கிக் கொண்டுள்ளது. சடலங்கள் மீட்கப்படுகின்றன. 2004 இல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்திற்குப் பிறகு, இலங்கையில் பல நூறு உயிர்களைக் காவுகொண்ட இயற்கை அனர்த்தம் இதுவாகும். அதே போல இலங்கை, மலையக வரலாற்றில் இதுவரை இடம்பெற்றுள்ள மண் சரிவு அனர்த்தங்களில், இப்போது நிகழ்ந்துள்ள இந்த அனர்த்தத்தை மிகவும் மோசமான ஒன்றாகவும், பாரிய அழிவுகளை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிடப்படலாம்.
மலையத்தில் இலங்கை அரசின் திட்டமிட்ட புறக்கணிப்பால் ஏற்பட்ட கொஸ்லந்த பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ்ப்பணப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் அனைத்துப் பீடங்களுடனும் இணைந்து மனிதாபிமான உதவித் திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர்களில் இப்பணி வரவேற்கத்தக்கது மட்டுமன்றி மலையக மக்களின் அவலங்களை ஏனைய தமிழ்ப் பேசும் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் நடவடிக்கையாகும். மனிதாபிமானத்திலிருந்தே மக்க்கள் பற்றும் சமூகத்தின் மீதான நம்பிக்கையும் ஆரம்பிக்கும். கற்பதற்காக போராடும் யாழ்ப்பாண பல்கலைக்கழ மாணவர்கள் போராடுவதற்காகவும் கற்கிறார்கள் என்பதை உலகத்திற்குக் கூறுவார்கள்.
உலகம் முழுவதிலிருந்து யாழ்பல்கலைக் கழக மாணவர்களுக்கு உதவிகளை வழங்க முன்வருவரவேண்டும்.
மாணவர் ஒன்றியத்தின் அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.
Also you can help though…
“Centre for Hope”
Counselling & Community centre
Department of Philosophy & Psychology
University of Jaffna
Jaffna
Sri Lanka
Contact:
94 77 637 2458
94 77 633 6611
94 77 920 1344