கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குற்றவியல் பிரேரணைக்கு ஆதரவான சட்டத்தரணிகளுக்கும், எதிரான சட்டத்தரணிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
குற்றவியல் பிரேரணைக்கு எதிரான நாடாளுமன்ற விவாதங்களை ரத்து செய்யக் கோரி பிரதம நீதியரசருக்கு ஆதரவாக சட்டவுரைஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டப் பேரணியை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டு மற்றுமொரு தொகுதி சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
இந்தப் போராட்டங்களின் காரணமாக புறக்கோட்டைப் பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதன் காரணமாக புறக்கோட்டை, மிஹிந்து மாவத்தையில் இருந்து புதுக்கடை உயர்நீதிமன்ற வளாகத்திற்குச் செல்லும் அனைத்து வீதிகளும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.