மகிந்த அரசின் மிகப்பெரிய துணை இராணுவக் குழுவான மேர்வின் சில்வாவின் அடியாள் படை தலைமை நீதிபதிக்கு ஆதரவான நீதித்துறை சார்ந்தவர்களை மிரட்டுவதற்கும் தாக்குதல் நடத்துவதற்கும் கொழும்புத் தெருக்களில் வலம்வருகின்றன. அரசின் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்திற்கு எதிராக நீதித்துறையைச் சார்ந்த அனைவரும் ஆர்பாட்டம் செய்தபோது, அவர்களுக்கு எதிராக இந்த அரச வன்முறைக் கும்பல் தெருக்களில் விதைக்கப்பட்டது. தலைமை நீதிபதியின் இருப்பிடத்திற்கு முன்னால் இந்தக் கும்பல் முகாமிட்டிருந்தது.
கொழும்பு, விஜயராம மாவத்தையிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாகவே எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.இங்கு பெருமளவிலானோர் கூடி நின்று பிரதம நீதியரசருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தற்போது அங்கே பாற்சோறு, வாழைப்பழம், இனிப்பண்டங்கள் என்பவரைத் தயார் நிலையில் வந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
இவை அனைத்தையும் மீறி, தலைமை நீதிபதி மற்றும் நீதித்துறை சார்ந்தோரின் உறுதிமிக்க போராட்டம் மகிந்த அரசை முதல்தடைவையாக நிலை குலையச் செய்துள்ளது.
அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்:
/////நிலை குலையச் செய்துள்ளது./// மகிந்தவுக்கு எதிராக திரளுகிற கூட்டம் மகிந்தாவை விட எந்த வகையிலும் மேலானது அல்ல .
மகிந்தா , மங்கள , பொன்சேகா , ரணில் இப்படி …..கூட்டம் தமிழர்களுக்கு கேடுவிளைவிக்கும் கூட்டம் மட்டுமல்ல . சிங்கள மக்களுக்கும் தான் .
இதனை நாம் புரிந்த கொண்டால் மகிழ்வதற்கு அங்கு எதுவும் இல்லை .
இரண்டு ஓநாய்கள் கடிபடுகின்றன அவ்வளவுதான் .
அங்கே உரிமைகளுக்காக அல்ல ஆட்சியை கைப்பற்ற இன்னொரு கொடிய மிருகம் செய்யும் வேலை இது .
ஆடு நனைகின்றது என்று ஓநாய்கள் அழுகின்றன
இரண்டு ஓநாய்கள் கடிபடுகின்றன அவ்வளவுதான் .
அங்கே உரிமைகளுக்காக அல்ல ஆட்சியை கைப்பற்ற இன்னொரு கொடிய மிருகம் செய்யும் வேலை இது .
//external ஓநாய்கள்… agree with Mouli
. what about internal ஓநாய்கள்.. we had one big ஓநாய். ஆடு நனைகின்றது என்று internal ஓநாய்கள் அழுகின்றன
“உறுதிமிக்க போராட்டம் மகிந்த அரசை முதல்தடைவையாக நிலை குலையச் செய்துள்ளது” இதனைத் தமிழர் நம்பினால்! அது ஆடு நடந்து செல்லும்போது ஆடும் அதன் விதை விழுந்துவிடும், விழுங்கிவிடலாம் என்று நாக்கில் வீணீர் வழிய பின்செல்லும் ஓநாயின் செயல்போன்றது.
‘எனது மகள் ரிசானாவை அல்லாஹ் தான் தந்தான். இப்போது அவன்தான் எடுத்துள்ளான். இதுதான் என் உறுதியான நம்பிக்கை’ என்று சுவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பணிப்பெண் ரிசானா நபீக்கின் தயார் ரஸீனா நபீக் தெரிவிக்கவேண்டிய நிலையில் உள்ளது போன்று, மகிந்த அரசை நம்பும் சிங்களரின் நிலையும் உள்ளது. மகிந்த அரசு வீழும் என்பது???????