தூக்கு தண்டனையை உறுதிப்படுத்தும் வகையில் டெல்லியில் இருந்து தமிழக அரசுக்கு முறைப்படியான தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. தூக்கு தண்டனை தொடர்பான உத்தரவு நகல்கள் வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரிடம் இன்று வழங்கப்படுகிறது.
மூவரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ள தகவலை முறைப்படி உள்துறை அமைச்சகம், வேலூர் சிறைக்கு அனுப்பி வைத்தது.
தூக்குத் தண்டனையை நிறைவேற்றலாம் என்ற உத்தரவு வந்த 7 நாட்களுக்குள் தண்டனைக்குரியவரை தூக்கிலிட வேண்டும். மூன்று தமிழர் விவகாரத்தில், நேற்று கடிதம் வந்ததாக கூறப்படுகிறது. எனவே இன்றிலிருந்து ஏழு நாட்களுக்குள் அதாவது செப்டம்பர் 2ம் தேதிக்குள் அவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் செப்டம்பர் 9ம் தேதி மூன்று பேரும் தூக்கிலிடப்பட உள்ளதாக வேலூர் சிறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.