ஐேர்மனியின் கொலோன் நகரில் புதுவருடக்கொண்டாட்டத்தின்போது பல ஐேர்மனியப்பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல்கள் , வழிப்பறிகள் போன்ற குற்றச்செயல்கள் நடைபெற்றன. இதனையே வலதுசார் ஊடகங்களும் சமூகவலைத்தளங்கள் பலவும் ஐரோப்பாவின் சிவில்யுத்தம் ஆரம்பமாகிவிட்டதாக வர்ணித்திருந்தன. இந்த குற்றச்செயல்கள் கண்டிக்கப்படுவதுடன், அவற்றில் ஈடுபட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படவும் வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் எதுவுமில்லை.
ஆனால் இதனையே சாட்டாகவைத்து அகதிகள் மீதான வெறுப்புணர்வாகவும், நிறவெறிப் பேச்சாகவும் மேற்குலகில் சில அரசியல்வாதிகளும், பல ஊடகவியலாளரும் கருத்துத்தெரிவித்துவருகின்றனர். அத்துடன் கொலோன் நகரில் சில ஆர்ப்பாட்டங்களும் நடைபெறுகின்றன.
இக்குற்றச்செயலில் ஈடுபட்டவர்களின் உடை, மொழிநடையினைக்கொண்டு அவர்கள் அரபு, ஆபிரிக்க பிரதேசத்தினைச் சேரந்த முஸ்லீம்கள் என்றே கூறப்படுகிறது. இந்த ஊகம் சரியாகவிருக்கலாம் என்றால்கூட அவர்கள் ஐேர்மனிக்கு புதிதாக அனுமதிக்கப்பட்ட அகதிகள் என்பதற்கு எந்த ஆதாரமில்லை. ஒரு வாதத்திற்கு இக்குற்றவாளிகள் எல்லோரும் புதிதாக வந்த அகதிகள் என்று எடுத்துக்கொண்டாலும் அவர்களின் தொகை புதிதாக வந்த மொத்த அகதிகளின் தொகையில் ஒரு வீதம் கூடவில்லை, எனவே எவ்வாறு இதனைச்சாட்டாகக்கொண்டு அகதிகள் பிரச்சனையினை அணுகமுடியும் .
ஐேர்மனிய காவல்துறையால் முதற்கட்டமாக கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 18 பேரில் சில ஐேர்மனியப்பிரசைகளும், ஒரு அமெரிக்கபிரசையும் கூட அடங்குகிறார்கள். இந்த நிலையில் இச் சம்பவத்திற்கும், அகதிகள் விவகாரத்தினையும் தொடர்புபடுத்துவது பொருத்தமற்றது. சிரியாவில் யுத்தநிலமை மோசமடைந்து அங்குள்ளவர்கள் புல்களையும் வளர்ப்புப் பிராணிகளையும் சாப்பிடும் நிலையில் அங்கிருந்து வரும் அகதிகளிற்கெதிராக இவ்வாறு கூச்சல் போடுவது நிலமையினை மேலும் சிக்கலாக்கி பலரினை மேலும் IS தீவிரவாதத்தினை நோக்கியே தள்ளும்.
இதில் வேடிக்கை என்னவென்றால் சில தமிழ் ஊடகங்களும் சிரிய அகதிகளை அனுமதித்த அஞ்சலோ மேர்ச்சலிற்கு இந்த சம்பவம் நல்லபாடம் என தலையங்கம் தீட்டி செய்திவெளியிட மற்றைய தமிழ் ஊடகங்கள் கள்ள மௌனம் காத்தன. இவ் ஊடகங்களிற்கு நாளையே இந்த நிறவெறி தமக்கு எதிராகவும் திரும்பும் என்ற அடிப்படை விளக்கம்கூட இருக்கவில்லை.
இன்றைய மத்தியகிழக்குப்பிரச்சனைக்கு மேற்குலகின் (குறிப்பாக மேற்கிலுள்ள சில கார்ப்பிரேட் கம்பனிகளின்) சுயநல நடவடிக்கைகளே அன்று முதல் இன்றுவரை காரணமாகவுள்ள நிலையில் அகதிகள் சுமையினையும் ஏற்கவேண்டிய தார்மீகக்கடமையுள்ளது.
இன்று இப்பிரச்சனை கண்டம்விட்டு கண்டம்பாய்ந்து கனடாவில்கூட அதிர்வினை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் சிரிய அகதிகளை வரவேற்கும் நிகழ்வில் அகதிகள் மீது தாக்குதல் நடாத்துமளவிற்கு சென்றுள்ளது. அங்குள்ள வலதுசாரிகளிற்கு குடியேற்றத்தின் விளைவு பற்றிய சந்தேகங்கள் ஏதாவது இருக்குமாயின் அங்கு இன்னும் செவ்விந்தியர்கள் யாராவது எஞ்சியிருந்தால் அவர்களிடம் கேட்டு தெளிந்துகொள்ளலாம்.
இது ஒரு பக்க நியாயம் மட்டுமே, மறுபுறத்தில் இவர்கள் புதிய அகதிகள் அல்ல நீண்டகாலமாக யேர்மனியில் தங்கியிருக்கும் அராபியர்கள் என்பது மேலும் பிரச்சனையின் தீவிரத்தினை அதிகரிக்கும், ஏனெனில் நீண்டகாலமாகவிருந்தும் பெண்களுடன் நாகரீகமாக எவ்வாறு நடக்கத்தெரியாது என்றால் புதியவர்கள் எவ்வாறு நடாப்பார்கள். இவர்களின் மதமே பெண்களை மதிப்பதில்லை. உதாரணமாக பலதார திருமணம், பர்கா, விவாகரத்து. ஒரு இஸ்லாமியநாட்டில் வேற்று மதத்தினர் இவ்வாறு செய்தால் என்ன நடக்கும். இனியொருவின் முற்போக்கு உளறல்களிற்கு அளவே இல்லையா?
In the name of progressive dialogue Inioru takes side with criminality. Probably they too have abused their host nations in similar fashion, who knows.
எல்லா மதங்களும் பெண்அடிமைத்தனத்தினை நியாயப்படுத்துபவையே. இதற்குள் இஸ்லாமும் விதிவிலக்கல்ல. ஆனால் இங்கு அந்த மதத்தினைச் சேர்ந்த சிலர் செய்த குற்றத்தினை பொதுமைப்படுத்தி எல்லோரையும் பாதிப்படையச்செய்யமுடியாது.
No one is doing that here. Islam is a step ahead in subjugating women though.
மேலே கூறப்பட்டுள்ள அத்தனையும் உண்மை ஆனால் நம்மில் பலா் மேற்குலகின் தயவில் வாழ்கின்றோம் என்ற நன்றி உணா்வோ என்னவோ அடிக்கடி இந்த மேற்குலகின் குள்ளநாித்தனத்தை மறந்துபோகின்றனா் நாடுகளை தமது நலன்களுக்காக நசுக்கி அஙகு வாழும் மக்களை அகதிகளாக அலையவிட்டு பின்பு ஆதரவு கொடுப்பதுபோல் வேசமிட்டு குற்றம் செய்யத்தூண்டி மறுபடியும் சொந்த நாட்டிற்கே அனுப்பிவிடும் முறை தற்சமயம் ஏறக்குறய அத்தனை நாடுகளிலுமே அறிமுகப்படுத்தப்படுகின்றது.We are living in a bloody stereotype world.
You are suggesting those animals were induced to do what they did to those women by the German government ? I am all for the plight of the refugees and asylum seekers but let us admit that there are some bad people too among them. Success is not going to be given in a plate to those who have arrived. Over time they and their children will do well if they choose to do so. Look at yourself and the ones around you first before you make judgement on the ones who have given a status for to live in your respective country.
உதாரணமாக இன்னொரு நாட்டிலிருந்து வந்த அகதிகளில் சிலர் குழுக்களாக கள்ள மட்டை (கடனட்டை மோசடி) போடுகிறார்கள் என்று வைப்போம், அதற்காக அந்த நாட்டிலிருந்து வரும் எல்லா அகதிகளையும் தண்டிக்கலாமா? இல்லைத்தானே. அதேவிதிதான் இங்கும் பொருந்தும். இந்த உதாரணம் யாவும் கற்பனையே, யாரையும் குறிப்பாக குறிப்பிடவில்லை.
நாட்டாமை இனியொரு தீர்ப்பினை மாற்றி எழுது பாலியல்சேட்டையில் ஈடுபட்டவர்கள் நல்லவர்கள், அதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்பவக்கள் கெட்டவர்களா?
நீதியின் அடிப்படையே ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் பரவாயில்லை, ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது என்பதே. ஆனால் இங்கு சிலர் சில குற்றவாளிகளிற்காக முழு சமுதாயத்தினையும் குற்றவாளியாக்குகிறார்கள்.
ஜேர்மனியில் புத்தாண்டு தினத்தன்று ஜேர்மனிய பெண்கள் மீது ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரபு அகதி குடியேற்றவாசிகளால் மேற்கொள்ளபட்ட திட்டமிட்ட பாலியல் துஷ்பிரயோகங்களும் தாக்குதலகளும் ,சிலநாட் களுக்கு முன் பாரிசில்நடைபெற்ற முஸ்லிம் பயங்கரவாதிகளினால்நடாத்தப்பட்ட தாக்குதல்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை . பயங்கராவத தாக்குதல் என்றால் வெறுமனே ஆய்தங்களினால் தாக்கி கொல்வது மட்டுமல்ல , ஒருநாட்டு இன , மத பெண்கள் மீது பாலியல் தாக்குதலை நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணக்கில் திட்டமிட்டு திரண்டு மேற்கொண்டால் அது பயங்கரவாதிகளின் ஆய்த தாக்குதலை விட மோசமானதாகவே கொள்ள வேண்டும்.
அங்கொன்றும் இங்கொன்றுமாக அல்லது குறைவான தொகையை கொண்ட கடையர்களினால் இந்த பாலியல் கலாசார தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அதற்கு அந்த சமூகத்தின் மீது நடவடிக்கை எடுப்பது சரியானதல்ல .
ஆனால் இங்கு அப்படி நடைபெறவில்லை.குறிப்பட்ட மதத்தை சேர்ந்த அகதி குடியேற்ற வாசிகள் ஆயிரக்கணக்கில் திரண்டு அடைக்கலம் கொடுத்து உணவும் , உறைவிடமும் கொடுத்து ஆதரித்த ஜேர்மனிய பெண்கள் மீது கலாசார பாலியல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதற்கு அந்த சமூகமே பொறுப்பேற்க வேண்டும்.
இதெல்லாம் அந்த பசங்களுக்கு ரொம்ப சாதாரணமப்பா.
லாலா அவர்கட்கு ஆயிரக்கணக்கில் என்பது மிகைப்படுத்தப்பட்டது. காவல்துறையோ , நகர மேயரோ இக் குற்றத்திலீடுபட்டவர்களை ஆயிரக்கணக்கில் குறிப்பிடவில்லை. முழுச் சமுதாயமே பொறுப்பு என்பது குற்றவாளிகளிற்கே அனுகூலம். சுமார் நூறு பேர் ஈடுபட்ட குற்றச்செயல்(organised gang crime).எனும் போது தண்டனை அதிகம். மாறாக முழுச் சமுதாயமே எனும் போது அது கலவரமாகக்கருதப்படும் போது தண்டனை ஒப்பீட்டளவில் குறைவு.
பாபர் மசூதி இடிப்பின்போது ஆயிரக்கணக்கில் இந்துக்கள் ஈடுபட்டனர். அது இந்திய நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட ஒரு குற்றம். அதற்கு முழு இந்துச்சமுதாயமும் பொறுப்பா இல்லைத்தானே? அதேமாதிரி இங்கும் இஸ்லாமிய சமுதாயமும் பொறுப்பல்ல. குறித்த குற்றவாளிகள் மட்டுமே பொறுப்பு.
பாலியல் தாக்குதலாளிகள் 500 இலிருந்து 1000 வரை இருக்கலாம் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது .
எப்படி பார்த்தாலும் பத்து பதினைந்து பேர்களை கொண்ட ஒரு சில குழுக்கள் எனக்கூறி அவர்களை ஒரு மத இனக்குழுவிடமிருந்து தனிமைப்படுத்தி விட முடியாது.
மேலும் அந்த இனத்தை , மதத்தை சேர்ந்தவர்கள் அனைவருக்கு தண்டனை வழங்க வேண்டுமென்று கூறவில்லையே ? தக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்த் தண்டனைக்கு உட்படுத்தும் அதேநேரம், அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள்நடந்த குற்ற செயல்களுக்கு தார்மீக பொறுப்பேற்க வேண்டும்.
மேலும் இதனை நீங்கள் சொல்வதுபோல் கலவரமாக பார்க்க முடியாது .கலவரமென்றால் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தாக்குதலில் ஈடுபட்டிருக்க வேண்டும் . இங்கு அப்படி ஏதும் நடைபெறவில்லை . மொரொக்கோ வட ஆபிரிக்க முஸ்லிம்கள், ஜெர்மனியநாட்டு பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல்களை குறிப்பிட்டநேரத்துக்குள் குறிப்பிட்ட இடத்தில் நூற்றுக்கணக்கில் மேர்கொண்டிருக்கிறார்கள்.எனவே இது ஒரு மத இனக்குழுவினரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட பாலியல் கிரிமினல் குற்றம்தான்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு அபோதிருந்த காங்கிரஸ் அரசுதான் காரணம் . அதற்கு பொறுப்பேற்று அந்த அரசும் பிரதமரும் பதவி விலகியிருக்க வேண்டும் . அப்படி நடைபெறவில்லை. அந்தளவுக்கு உயர் விழுமியங்களை இந்திய அரசியல்வாதிகளிடம் எதிர்பார்க்க முடியாது . அதனால் இந்திய குறிப்பாக இந்துக்களின் தார்மீக பொறுப்பு இருப்பதென்பதை தட்டி கழிக்க முடியாது.
ஆனால் ஜேர்மனியில் உள்ள முஸ்லிம் குடியேற்றவாசிகளை பொறுத்தவரை அவர்களுக்கு அரசு கிடையாவிட்டாலும் அங்கிருக்கும் மதத்தலைவர்கள் , உலாமாக்கள் எங்கே போனார்கள் ? முஸ்லிம் பெண்கள் முக்காடணிவதற்கு தடை வந்தால் , குடியேற்றநாடுகளின் மொழியை கற்க வேண்டுமன்றால் துள்ளி குதிப்பவர்கள் , இத்தகைய பாவச்செயல்களுக்கு தார்மீக பொறுப்பேற்காமல் எங்கே போனார்கள் ?
“லாலா அவர்கட்கு ஆயிரக்கணக்கில் என்பது மிகைப்படுத்தப்பட்டது. “, why are you defending what is not true. Please look up the news archives and you will know the exact numbers. Did you too participate in the groping ?
The one who defending those culprits may participate in the groping..
508 பாலியல் தாக்குதலகளும் , திருட்டுகளும் இது வரை பதிவாகியுள்ளன. இது நிச்சயமாக சிறிய தொகை கொண்ட சிறிய குழுக்களால் நடாத்தப்பட சாத்தியமில்லை. இது வரை கைது செய்யப்பட்டவர்களின் தொகையே சிறியளவாக உள்ளது . அதனை வைத்துக்கொண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்களே அவ்வளவுதான் என நினைத்துக்கொண்டால் அதற்குநான் பொறுப்பல்ல.
தாக்குதலாளிகள் 500 இலிருந்து 1000 வரை இருக்கலாம் என்றுதான் கூறப்பட்டது. அதனை ஆயிரக்கணக்கில் என்றுநான் சொன்னது உங்களுக்கு அலர்ஜியாக இருந்தால் ,நூற்றுக்கணக்கில் என்று சொல்லலாமே ? இதனால் அந்த பாலியல் குற்றங்களின் , பாவச்செயல்களின் வீரியம் என்ன குறைந்தா போய் விட்டது.
குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பது கட்டுரையில் தெளிவாகக்கூறப்பட்டுள்ளது. (முழு சமுதாயமுமல்ல).
மற்றையது இதனை கலவரம் என்று பின்னூட்டத்தில் comment கூறப்படவில்லை, மாறாக குழு குற்றம் (organised gang crime) என்றே பின்னூட்டத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மீண்டுமொருமுறை படித்துப்பார்க்கவும்.
லாலா,
ஸ்நோடென், அசாஞ் உட்பட பலரின் ஆதாரபூர்வமான தகவல்கள் மற்றும் முன்னை நாள் பிரித்தானிய உளவுப் பிரிவின் பொறுப்பதிகாரி ஒருவரின் ஆவணங்கள் உட்பட பாரிசில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் உள்வீட்டு செயல் என்பதில் பலருக்கும் சந்தேகமில்லை. தவிர, கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தவர் சிலரும் இச் சந்தேகங்களை வெளியிட்டிருந்தனர். ஐ.எஸ்.எல் அமைப்பை அமெரிக்காவும் அதன அடிமை நாடான சவூதி அரேபிராவுமே உருவாக்கிப் பாதுகாக்கின்றன. உலகை ஆயுதமயப்படுத்தி ஆக்கிரமிக்க இஸ்லாமியத் தீவிரவாதம் அமெரிக்காவிற்குத் தேவைப்பட்டது, இந்தப் பின்னணியிலிருந்தே ஜேர்மனிய சம்பவத்தைப் பார்க்க முடியும். இச் சம்பவத்தை இஸ்லாமியர்களின் பொதுவான இயல்பு எனக் அமெரிக்காவின் தேவையின் அடிப்படையிலிருந்து அதன் ஊதுகுழல் ஊடகங்களும் அமைப்புக்களும் பிரச்சாரம் செய்வதை கண்டனம் செய்வதே கட்டுரையின் நோக்கம். அது அவசியமானதும் தொடரப்பட வேண்டியதுமாகும்.
சிரியாவில் , லிபியாவில் ,ஈராக்கில் குண்டு வீசி அழிவுகளை மேற்கொள்வதும் மேற்குலகும் அதன் உளவுஸ்தாபனங்களும்தான் . அதற்கு பதிலடியாக இஸ்லாமிய பயங்கரவாதிகளால் ஐரோப்பாவில் மேற்கொள்ளப்படும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கும் அதே மேற்குலக நாடுகளே காரணமாக இருக்கின்றன. அண்மையில் ஜேர்மனியில் ஜேர்மனிய பெண்கள் மீது நடாத்தப்பட்ட பாலியல் வன்முறைகளுக்கும் அந்தநாட்டு அரசும் அமெரிக்காவுமே காரணம் . ஐ.எஸ் பயங்கரவாதிகள் மேற்குறிப்பிட்ட நாடுகளின் விரல் சூப்பும் செல்லப்பிள்ளைகள்.
சரி ,நீங்கள் சொல்வதை அப்படியே நம்பிட்டோம்…
Lala
எந்தப்பிரச்சனையாக இருந்தாலும் அதற்குக்காரணமான வோ்களை தேடிப்போனால் ஆணிவோ் என்று சொல்வாா்களே அது மேற்குலகிலேயே முடியும் இது வெறும் கறபனையோ பைத்தியக்காரத்தனமோ அல்ல அப்பட்டமான உண்மை ஆனால் இதை சாதாரண சாமானியனால் விளங்கிக்கொள்ளமுடியாது.
Terrace house ல் வசிக்கிறேன் என்பதை தவறாக Terrorist house என்று கூறியதற்காக ஒரு பத்து வயது முஸ்லீம் சிறுவன் பிாித்தானிய அதிகாாிகளால் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டான் இது இன்றய செய்தி.
இயற்கையில் மனிதகூட்டங்கள் யாவையுமே காட்டுத்தன்மை கொண்டவையே காலத்தின் ஓட்டத்தில் அவையில் சில பாிணாமம் அடைந்துவிட்டதைப்போல் வேஷம் போடும் ஆனால் நிலமைகள் மாறும்போது பழய நிலைக்கு திரும்பிவிடாதென்று எந்த உத்தரவாதமும் இல்லை.
இந்த உலகில் அதிகம் யுத்தங்களைப் புாிந்து உலகை நிா்மூலமாக்கிய பெருமை ஐரோப்பியா்களையே சாரும் இவா்கள் உலகமெங்கும் புாிந்த காட்டுமிராண்டித்தனத்தைப்போல் வேறு எந்த மக்கள் கூட்டங்களும் புாிந்ததில்லை இதில் இறுதியாக நாஸிகளை குறிப்பிடலாம் ஆனால் இன்று அவா்கள் சந்ததி உலகிற்கு பண்பைப்பற்றி பாடம் எடுக்கின்றது.
மேலே மது என்பவா் குறிப்பிடுவதைப்போன்று இவா்களே யாவையும் தயாாிக்கின்றாா்கள் என்பதை நாம் புாிந்துகொள்ளாத வரையில் நாம் அநீதிக்கு துணைபோவது தவிா்க்கமுடியாதது.
இங்கு பெரும்பாலனோரிற்கு குறித்த சமுதாயம் மீது ஏனிந்த வெறி?. முள்ளிவாய்க்கல் அழிவின்போது யாருமே எம்முடனில்லை. ஏனெனில் மற்றைய சமூகங்கள் ஒடுக்கப்படும்போது நாம் எப்போதும் ஒடுக்குபவர்களிற்கு செம்பு தூக்கும் குணமும், திமிர் போக்குமே எம்மிடம் காணப்படுகிறது. பின்பு எவ்வாறு எமக்காக மற்றையோர் குரல் கொடுப்பார்கள்.(உதாரணம்- நூறுவருடங்களிற்கு முன் நடைபெற்ற முஸ்லீம்- சிங்கள கலவரம்.)
No one hates Muslims here. Thank you for your bleeding heart for them.Just wondering if you have ever had a Muslim family for dinner at your place and have you ever been to their place for a meal. I am someone who has grown up with them and there are no personal grudges against them. As a community as Muslims they have to take responsibility instead of keeping mum any playing the victim game.
## எந்தப்பிரச்சனையாக இருந்தாலும் அதற்குக்காரணமான வோ்களை தேடிப்போனால் ஆணிவோ் என்று சொல்வாா்களே அது மேற்குலகிலேயே முடியும் ##
நல்ல வேளை மவுன்ட் பேட்டன் , காந்தி போன்றவர்களின் படுகொலைகளின் வேர்களை தேடி போகவில்லை . உளுத்துப்போன சித்தாந்தத்தின் பேரால் தனது சொந்த இன ,நாட்டு மக்களை இலட்சக்கணக்கில் கொன்றொழித்த ஸ்டாலின் , மாவோ , போல்பாட் போன்றவர்களின் செயல்களுக்கும் ஆணி வேர் மேற்குலகம்தானா ? இப்படி சொல்வதன் மூலமாக மேற்குறிப்பிட்ட சித்தாந்த வெறியர்களின் மனித குலத்துக்கெதிரான படுகொலைகளை மறைத்து விடலாம் அல்லது அந்த பழியையும் மேற்குலகத்தின் மீது போட்டுவிடலாம் என பகல் கனவு காண்கிறீர்கள் போலும்.
## ஸ்நோடென், அசாஞ் உட்பட பலரின் ஆதாரபூர்வமான தகவல்கள் மற்றும் முன்னை நாள் பிரித்தானிய உளவுப் பிரிவின் பொறுப்பதிகாரி ஒருவரின் ஆவணங்கள் உட்பட பாரிசில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் உள்வீட்டு செயல் என்பதில் பலருக்கும் சந்தேகமில்லை.##
இந்த வேலைகளை எல்லா நாட்டு உளவு நிறுவனங்ளும்தான் செய்து வருகின்றன. மேற்குலக உளவு நிறுவனங்கள் மட்டும் இதனை செய்யவில்லை . ரஷ்ய உளவு அமைப்பான கேஜிபி உளவாளிகள் கூட மேற்குலக நாடுகளில் ஊடுருவி இத்தைகைய காரியங்களை செய்து வருகிறார்கள்.எனவே நீங்கள் குறிப்பிடுவதுபோல் மேற்குலகை மட்டும் தனிமைபடுத்தி இவ்வாறான குற்றசாட்டுகளை கூற முடியாது.மேலும் இத்தகைய உளவு ஸ்தாபனங்கள் ஒரு சிலைரை , குழுக்களை பயன்படுத்தி நாச வேலைகளை செய்ய முடியுமே தவிர ஜேர்மனியில் நடந்ததைப்போல் நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணக்கில் அரபு குடியேற்றவாசிகளை திரட்டி ஜேர்மனிய பெண்கள் மீது பாலியல் வன்முறைகளை மேற்கொள்ள வைத்திருக்க முடியாது.
## குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பது கட்டுரையில் தெளிவாகக்கூறப்பட்டுள்ளது. ##
மாணவன் ஒருவன் அடுத்த நாள் பரீட்சைக்காக பசுவைப்பற்றி படித்துக்கொண்டு போனான் . ஆனால் பரீட்சையில் தென்னைமரத்தை பற்றி கூறும்படி கேட்டிருந்தது. மாணவன் தென்னை மரத்தில் பசு கட்டியிருந்தது என முதல் வரியை எழுதி விட்டு மிகுதி வரிகளை தான் படித்துக்கொண்டு போயிருந்த பசுவைப்பற்றி எழுதியிருந்தான் . அதுபோல்தான் கட்டுரையாளரும் ஒப்புக்கு வேறு வழியில்லாமல் வன்முறையாளர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென கூறி விட்டு ,நேரடியாகவும் மறைமுகமாகவும் அவர்களின் செயல்களை தாங்கு தாங்கென்று தாங்கியிருக்கிறார்.கட்டுரையை மீண்டுமொருமுறை பக்கசார்பில்லாது , மனித நேயத்துடன் படித்து பார்க்க வேண்டியது நீங்கள்தான்.
## பின்னூட்டத்தில் கலவரம் என்று கூறப்படவில்லை, மாறாக குழு குற்றம் (ஒர்கனிசெட் கங் ச்ரிமெ) என்றே பின்னூட்டத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.##
உங்களது பின்னூட்டத்தில் முழு சமுதாயம் என்று வரும்போது அது கலவரமாகும் என்று குறிப்பிட்டிருந்தீர்கள் . எந்த ஒரு கலவரத்திலும் அல்லது மாஸ் குழுத்தாக்குதல்களிலும் சரி முழு சமுதாயாமுமே ஈடுபடுவதில்லை . ஆனால் குறிப்பிட்ட சமுதாயத்தை, நாட்டை ,மதத்தை சேர்ந்தவர்கள் புகலிடம் பெற்ற நாட்டில் மாஸ் குழுக்களாக சேர்ந்து வன்முறையிலும் , பாலியல் பலாத்காரங்களிலும் திட்டமிட்டு ஈடுபடும்போது அவர்கள் கைது செய்யப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்படும்போது அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் , மத தலைவர்கள் தார்மீக பொறுப்பேற்று மன்னிப்பு கோர வேண்டுமென்றுதான் கூறினேனே தவிர முழு சமூகத்தையும் தண்டைக்குள்ளாக்க வேண்டுமென கூறவில்லை . எனவே பின்னூட்டத்தை மீண்டுமொருமுறை நீங்கள்தான் சரியாக படித்து பார்க்க வேண்டும்.
நல்ல காலம் முழு சமுதாயத்தினையும் தூக்கில் போட வேண்டும் எனக்கூறவில்லை. அந்தளவில் மகிழ்ச்சி லாலா.
வேண்டாப் பெண்டாட்டி கை பட்டால் கால் பட்டால் குற்றம்.
This fits you very well since you live in the West and keep blaming them !
அடடா என்ன அற்புதமான விளக்கம் புல்லாிக்கிறது லாலா.
அட சும்மா பேச்சுக்கு உண்மையே நீா் ஒரு தடவை கேட்டுப்பாரும் காந்தி என்ற ஒருவா் உருவாக காரணம் என்ன?? ரஸ்ஷயாவை ஆண்ட ஸாா் மன்னன் யாா்?? மாவோ உருவாகும் முன்பு சீனாவை ஆட்டிப்படைத்தவா்கள் யாா்?? ஓபியத்திற்கான(OPIUM) யுத்தத்தை நடத்தியவா்கள் யாா்?? இங்கு நாங்கள் யாரையும் தாங்கிப்பிடிக்க வரவில்லை காாியங்கள் நடப்பதற்கான அடிப்படைக்காரணங்கள் என்ன என்றே விவாதிக்கின்றோம்.கொலை புாிவதில் யாா் வல்லவா்கள் என்பதையிட்டல்ல
லாலா சாித்திரத்தை ஒரு தடவை படிக்க முயற்சி செய்யும். இனியொருவில் பங்கு கொள்பவா்கள் எல்லோருமே கம்யுனிஸ்ட்கள் என்று கணக்குப்போடும் முட்டாள்தனத்தை நிறுத்தவும்.ஆமா மவுண்ட் பேட்டனை கொன்றது யாா்?
சரி எனக்கு நானே கேட்டுப்பார்க்கிறேன் . காந்தி எவ்வாறு உருவானார் ? உருவாகி என்னத்தை சாதித்தார் ? காந்திதான் இந்தியாவுக்கு வெள்ளைக்காரர்களிடமிருந்து சுதந்திரத்தை வாங்கி கொடுத்தார் என சொல்லி விடுவீர்கள் போலிருக்கிறது. இரண்டாம் உலகப்போரில் இட்லர் பிரிட்டனுக்கு கொடுத்த மரண அடி இத்தனை நாடுகளை காலனியாதிக்கத்துக்குள் வைத்திருந்த பிரிட்டனின் பலவீனத்தை வெட்ட வெளிச்சமாக்கி விட்டது. அதனால் வேறு வழியில்லாமல் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்து வெளியேறினார்கள் . பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒபிய வர்த்தகத்தை சீனாவுடன் ஐரோப்பியர்கள் மேற்கொண்டார்கள் . அதனால் சீன ஆண்கள் போதைக்கு அடிமையாகிறார்கள் என விழிப்புணர்வடைந்த சீனர்கள் ஐரோப்பியர்களை விரட்டியடித்தார்கள் . அந்த வர்த்தகமும் நின்று போனது. அதன் பின்பு பல காலம் கழித்து பல படுகொலைகள் மூலம் அதிகாரத்துக்கு வந்த மாவோ அதிகாரத்தில் இருக்கும்போதும் பல மில்லியன் சீன மக்களை படுகொலை செய்தார் . இதற்கும் ஐரோப்பியர்கள் ஒபியம் வர்த்தகத்திற்கும் என்ன தொடர்பு ? மாவோ என்ன ஒபிய வர்த்தகம் செய்த ஐரோப்பியர்களையா மில்லியன் கணக்கில் படுகொலை செய்தார் ? ரஷ்யாவில் எப்போதோ சார் மன்னர் ஆண்டதற்கும் ஸ்டாலின் உளுத்துப்போன சித்தாந்ததின் பேரால் நடாத்திய படுகொலைகளுக்கும் என்ன தொடர்பு ? மொட்டைக்கும் முழங்காலுக்கும் அல்ல மொட்டைக்கும் பெரு விரலுக்கும் முடிச்சு போட எத்தனிக்கிறீர்கள் .அதுவும் ஜேர்மனியில் அரபு அகதிகள் நூற்றுக்கணக்கில் இணந்து அங்குள்ள பெண்கள் மீது நடாத்திய பாலியல் தாக்குதல் பற்றிய கட்டுரையில் இது பற்றிய பின்னூட்டங்கள் எல்லாம் ஏன் வர வேண்டும் ? எப்படியாவது இந்த பிரச்சனையை திசை திருப்பி பாலியல் வன்முறை ஒடுகாலிகளை பாதுகாத்து விட வேண்டுமென்பதுதானே ?
லாலு
காந்தி என்ற ஒரு கோமாளியை உருவாக்கியவா்களே ஆங்கிலேயா்தான் என்பது உலகம் அறிந்த உண்மை அந்த காந்தியையும் உமது தாத்தா மவுண்பேட்டனையும் நான் இங்கு அழைத்துவந்து உமது மொட்டைக்கும் முழங்காலிற்கும் முடிச்சுப்போடவில்லை.
இங்கு தெளிவாக ஒரு விடயத்தை கூறும் போது அதை விளங்கிக்கொள்ள திறனற்றோ அல்லது பாசாங்கு செய்தோ எப்போதும் போல பித்தலாட்டம் காட்டுகிறீா் உலகை அன்றும் இன்றும் ஆட்டிப்படைப்பவா்கள் மேற்குலகத்தினரே மேலே குறிப்பிட்ட விடயங்கள் அவா்களின் ஆட்சியின் உள்ளோ அல்லது அவா்களின் தலையீடுகளின் உள்ளே உருவான காரணிகள் காந்தி எப்படி உருவானாா் என்றால் அதன் அா்த்தம் ஆங்கிலேயா் இந்தியா என்ற நாட்டை பிடித்து அடக்கி ஆண்டிராவிட்டால் காந்தி,சுபாஸ் சந்திரபோஸ் போன்றவா்கள் தோன்றி இருக்கமாட்டாா்கள் தேவையும் இருந்திருக்காதல்லவா சிலவேளை உம்மைப்போன்றவா்கள் கூறுவதைப்போன்று மத்திய கிழக்கைச்சோ்ந்தவா்கள் ஓடுகாலிகள் என்றால் அவா்களின் நாடுகளின் மேல் குண்டுகளை கொட்டாமல் தீவிரவாதிகளை உருவாக்கி ஆயுதங்களை வழங்காது விட்டிருந்தாலோ அவா்கள் அங்கே தமது வாழ்க்கையை தொடா்ந்திருப்பாா்களல்லவா அத்தோது உம்மைப்போன்ற அகதியின் வெறுப்பிற்கும் ஆழாகியிருக்கமாட்டாா்கள் அல்லவா?
இலங்கையில் போினவாதிகள் என்ன கூறுகின்றாா்கள் புலிகளே தமது நாட்டில் இருந்த பிரச்சனை மற்றபடி இங்கு வேறு எதுவும் இல்லை என்று ஆனால் புலிகள் உருவாகுவதற்கு என்ன காரணம் என்பதை நாமறிவோமல்லவா அதாவது ஆரம்ப அடிப்படைக்காரணத்தை புலிகளின் தவறுகளிற்குள் மறைத்துவிட்டு புலிகளே இந்த நாடு அழிய காரணம் என்று கூறுபவா்களுக்கும் உமக்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது? இங்கே தனித்தனி சம்பவங்கள் அல்ல முக்கியம் மொத்த விளைவுகளையும் ஆராயவேண்டும் சிலவேளை ரோமா்,கிரேக்கா் காலம்வரைகூட நாம் செல்லவேண்டியுள்ளது..
எப்போதும் உமது பின்னூட்டத்தில் திசைதிருப்ப முயல்கிறீா்கள் திசைதிருப்ப முயல்கிறீா்கள் என்று புலம்புகிறீா் யாாிடமிருந்து யாருக்குப்பயந்து திசை திருப்பவேண்டும் என்று எனக்குப்புாியவில்லை.நாகபாம்புகள் படமெடுத்தாடுவதைப்பாா்த்து நாக்கிளிப்புழுவிற்கு ஆசை வருவதில் தவறில்லை ஆனால் ஆடமுடியமா என்று முதலில் யோசிப்பது நல்லதல்லவா?
மவுண்ட் பேட்டனை கொன்றவா்கள் வட அயா்ந்லாந்து போராட்டக்காரா்களான IRA. ஏன் இது உங்கள் விக்கிப்பீடியாவில் வெளியாகவில்லையா ஆமா எதற்காக மவுண்ட் பாட்டனை இங்கு கொண்டுவந்தீா்கள்?
அது எதுக்கும் எதுக்கும் முடிச்சு?
காந்தியையும் , மவுன்ட்பேட்டனையும் இழுத்து வந்தது , ஜேர்மனியில் அரபுக்குடியேற்ற அகதிகள்நூற்றுக்கணக்கில் திரண்டு அந்தநாட்டு பெண்களை பாலியல் வதை செய்த தலைப்பிற்கு சற்றும் சம்பந்தமில்லாமல் உலகின் எந்த பிரச்சனைக்குமான வேரை தேடி போனால் அது மேற்குலகில்தான் போய் முடியும் எனும் உமது மொட்டைக்கும் கால் பெருவிரலுக்கும் முடிச்சு போடும் உமது சொத்தை வாதத்தை அம்பலப்படுத்ததான் .
சரி , காந்தியை ஆங்கிலேயர்களே உருவாக்கி குறுக்குநெடுக்குமாக நடக்க விட்டார்கள் , மக்கள் ஆதரவை அவருக்கு பின்னால் திரள வைத்தார்கள் . தலைவராக புரொமோட் பண்ணினார்கள் . ஆனால் உண்மையில் மக்கள் ஆதரவு அவருக்கிருக்கவில்லை . இந்திய மக்கள் எல்லோரதும் ஆதர்ச தலவர்களாக அண்டைநாட்டு , ரஷ்ய , சீன மனித குல அழிவு திலகங்களான ஸ்டாலினும் , மாவோவும் எப்போது தமது படையை இந்தியாவுக்கு அனுப்பி ர்ட்சிப்பார்கள் என காத்துக்கொண்டிருந்தார்கள் . அதனை இந்த ஆங்கிலேயே அரசும் படைகளும் தடுத்து விட்டார்கள் .
போதுமா ?
## ஆங்கிலேயா் இந்தியா என்ற நாட்டை பிடித்து அடக்கி ஆண்டிராவிட்டால் காந்தி,சுபாஸ் சந்திரபோஸ் போன்றவா்கள் தோன்றி இருக்கமாட்டாா்கள் தேவையும் இருந்திருக்காதல்லவா ##
வரலாறு அதன் போக்கில் போவது . இப்படி நடந்திருக்காவிட்டால் அது நடந்திருக்காதல்லாவா ? போன்ற கேள்விகளுக்கும் கருத்துக்களுக்கும் இங்கு இடமில்லை.நீங்கள் சொல்வதன்படியே பார்த்தாலும் ஆங்கிலேயர்களுக்கு முன் இந்தியா எனும் ஒரு நாடே இருந்ததில்லை. ஆங்கிலேயர்கள்தான் இந்திய நாட்டையே உருவாக்கினார்கள் .காந்தியை , சுபாஷை உருவாக்கினார்கள் என கூவுபவர்கள் , இந்தியாவையே அவர்கள்தான் உருவாக்கினார்கள் என்பதை வசதியாக மறந்து விடுகிறீர்கள்.மேலும் ஆங்கிலேயர்கள் இந்தியாவை கைப்பற்ற முன்னர் அது ஏதோ சுதந்திர நாடாக இருந்ததாக நினைக்கிறீர்கள் . வட இந்தியா முழ்மையும் பாரசீக , துருக்கிய , மொகலாய முஸ்லிம் மன்னர்களின் ஆளுகையிலேயே இருந்தது. ஆங்கிலேயர்கள் அந்த முஸ்லிம் அரசர்களுடன் சண்டையிட்டுத்தான் வட இந்தியாவை கைப்பற்றினார்கள் . ஆங்கிலேயர்கள் ஆண்டதனால் இந்தியாவுக்கு 150 வருடங்களில் விடுதலை கிடைத்தது . முஸ்லிம் மன்னர்களே தொடர்ந்து ஆண்டிருந்தால் வரலாறு அபபெடி இருந்திருக்கும் இப்படி இருந்திருக்கும் என கற்பனை செய்யும் உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன். முஸ்லிம் மன்னர்கள் மற்றைய நாடுகளை பிடித்து ஆண்டதற்கும் ஆணி வேரை தேடி போனால் ஏதாவது கிடைக்குமா ?
## உம்மைப்போன்றவா்கள் கூறுவதைப்போன்று மத்திய கிழக்கைச்சோ்ந்தவா்கள் ஓடுகாலிகள்##
மத்திய கிழக்கை சேர்ந்தவர்கள் ஒடுகாலிகள் என்று நான் சொல்லவில்லை . உங்களுக்கு அப்படி அவர்களை அழைக்க ஆசை இருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. ஜேர்மனியில் அந்த நாட்டு பெண்கள் மீது பாலியல் துன்புறுதல்களை நூற்றுக்கணக்கில் திரண்டு திட்டமிட்டு நிறைவேற்றியவர்களையும் அதற்கு வக்காலத்து வாங்குபவர்களையுமே அவ்வாறு கூறினேன்,