கொலம்பியா மாகாணத்திலும் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கிடைத்துள்ளது. பெண் ஓரின சேர்க்கையாளர்கள் இருவர் நேற்றுத் திருமணம் முடித்தனர்.
அமெரிக்காவில் கானக்டிகட், லோவா, மாசாசூசெட்ஸ், நியூ ஹாம்ஸ் பயர், எவர்மோண்ட் ஆகிய மாகாணங்களில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள சட்டப்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது போன்று கொலம்பியா மாகாணத்திலும் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதைக் கொலம்பியாவில் உள்ள வாஷிங்டன் சிட்டி கவுன்சில் ஏற்றுக் கொண்டு சட்டப்பூர்வ அனுமதி வழங்கியது. இதற்குப் பலர் எதிர்ப்புத் தெரிவித்து, மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை நீதிபதி ஜோன் ரோபர்ட்ஸ் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கொலம்பியா மாகாணத்திலும் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டனில் பெண் ஓரின சேர்க்கையாளர்கள், ஏஞ்சலினாயங், சிஞ் ஜாய்லா டவுன் சென்ட் ஆகியோர் திருமணம் நேற்று சட்டப்படி நடந்தது. திருமணம் முடிந்ததும் இருவரும் கட்டித்தழுவி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். அமெரிக்காவில் கொலம்பியா மாகாணத்தில் முதன் முதலாக நடந்த ஓரின சேர்க்கையாளர் திருமணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.