இரண்டாம் அலை கொரோனா பரவல் இந்தியாவை குறிப்பாக வட இந்திய மாநிலங்களை மிக மோசமாக முடக்கியுள்ளது. இன்று ஒரே நாளில் 3,498 பேர் 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்கள்.
இன்று ஒரே நாளில் 3.86 லட்சம் பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டிருப்பதாகவும் இந்திய சுகாதார அமைச்சகம் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட தரவுகள் கூறுகின்றன.
இதன் மூலம் அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்ட கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 2.08 லட்சமாக அதிகரித்துள்ளது. மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 1.87 கோடியாக உயர்ந்துள்ளது.
இன்னும் குணமடையாமல் சிகிச்சை பெற்று வருகிறவர்களின் எண்ணிக்கை நாட்டில் மொத்தம் 31,70,228 என்கிறது அரசு தரவு. அதைப் போலவே தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை சுமார் 15.22 கோடி.
இதனிடையே, இந்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரலும், இந்தியாவின் மிக மூத்த வழக்குரைஞருமான சோலி சொராப்ஜி தனது 91-ஆவது வயதில் கொரோனா தொற்றுக்குப் பலியானார்.
இதனிடையே கொரோனா பலிகளும் வட இந்தியாவில் எரியூட்டப்படும் பல்லாயிரம் பிணங்கள் தொடர்பான படங்களும் சர்வதேச அளவில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள நிலையில் பாஜக ஆளும் பல மாநில அரசுகள் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆக்சிஜன் கேட்டு பதிவிட்டவர்கள் மீது வழக்குகளைப் பதிந்து வருவது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது. இப்படி பதிவிட்ட பலரும் இறந்தும் உள்ளார்கள். பாஜக பிரமுகர்களே பதிவிட்டு உதவி கிடைக்காமல் இறந்திருக்கிறார்கள்.
இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் இது தொடர்பான வழக்கை தாமாக முன் வந்து விசாரித்து அரசுக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளார் முக்கியமாக உதவி கேட்டு சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை குற்றமாக கருதக் கூடாது என்றும். அப்படி பதிவிடுவோர் மீது வழக்குப் பதிவதி நீதிமன்ற அவமதிப்பும் ஆகும் என்றார்.
அதே போன்று மத்திய அரசு மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கும் ஆக்சிஜன் அளவு பற்றி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். தடுப்பூசிகளை விற்பனை செய்வதில் விலை நிர்ணயம் செய்வதில் தனியார் நிறுவனங்களுக்கு அதிகாரம் வழங்கக் கூடாது. அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பது உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
இருந்து ஓய்வு பெற்ற அலுவலர்களை சிறப்புப் பணியாக வேலை செய்ய ஏன் நியமிக்கக்கூடாது? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
நான் ஒரு நீதிபதியோ குடிமகனோ – இந்த நாட்டில் எனது குறைகளை வெளிப்படுத்த சமூக ஊடகத்தை பயன்படுத்த விடாமல் தடுப்பது மிகப்பெரிய கவலை தரக்கூடிய விஷயம். ஒரு குடிமகனுக்கு படுக்கை வசதியோ, ஆக்சிஜன் வசதியோ தராமல் இருந்தால் அவரை நாம் அவமதிப்பதாகவே கருத வேண்டும். இந்த நிலை மனிதாபிமான நெருக்கடியின் அடையாளம் என்று நீதிபதி சந்திரசூட் குறிப்பிட்டார்.ஆனால் இவைகளை அரசு பொருட்படுத்துவதாக இல்லை. நாள் தோறும் நிலமை மிக மோசமடைந்து வருகிறது.