தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழக அரசு தனது மொத்த பலத்தையும் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் செலவழித்து வரும் நிலையில் அலோபதி மருத்துவமே கொரோனா சிகிச்சையில் பிரதானமான ஒன்றாக இருக்கிறது. ஆனால் அதன் ஒரு பகுதியாக சித்த மருத்துவ மையங்களையும் அரசு திறந்துள்ளது. அதாவது மென்மையான கொரோனா பாதிப்புள்ளவர்களுக்கு அது போன்ற மையங்களில் சிகிச்சை அளிக்கலாம் என்பது தமிழக அரசின் முடிவு.
அதன் ஒரு பகுதியாக நீராவி பிடிப்பதையும் ஒரு சிகிச்சையாக பாவித்து பொது இடங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக ஆவி பிடிக்கும் விடியோக்கள் வெளியான நிலையில் திமுக சார்பானவர்களே அரசின் இந்த நடவடிக்கையை விமர்சித்தார்கள். திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் மிக முக்கியமான திமுக பிரமுகர்,. தருமபுரி நடப்பு நாடாளுமன்ற எம்.பியாக இருக்கி|றார். அவர் தன் முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில்,
தருமபுரி நாடாளுமன்ற எம்.பி டாக்டர் செந்தில்குமார்,
திமுக ஒரு முற்போக்கு பகுத்தறிவு கட்சி,
அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத மருத்துவ சோதனைகளை அரசாங்கம் COVID சிகிச்சைக்கு சித்த மருத்துவம் போன்ற சோதனைகளை ஈடுபடுத்துவதைப் பார்ப்பது மிகவும் வருத்தமளிக்கிறது.அல்லது நிரூபிக்கப்பட்ட நீராவி உள்ளிழுப்புக்கான ஆதாரங்கள் எதுவும் செய்யப்படுவதில்லை, அவை இந்த தொற்றுநோய் மனித வளங்களை வீணாக்கும் நேரத்தில்@CMOTamilnadu அரசு மற்றும் IMA-ல் இருந்து முக்கிய மருத்துவர்கள் குழு அமைத்து நவீன அறிவியல் ஆராய்ச்சி சார்ந்த மருத்துவத்தின் அடிப்படையில் அறிவியல் முறையில் காரியங்களை செய்ய ஆலோசனை குழுவை வைக்க வேண்டும்.
என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.