சீன உதவியுடன் தனி கொரோனா தடுப்பூசியை பாகிஸ்தான் தயாரித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா கோவேக்சின் என்ற தடுப்பூசியை தயாரித்த நிலையில் பாகிஸ்தான் சுகாதாரத்துறை சீனாவிடம் இருந்து மூலப் பொருட்களைப் பெற்று தடுப்பூசி தயாரித்துள்ளது இதற்கு ‘பாக் வேக்’ என்றும் பெயரிட்டுள்ளது. .
இப்போது சீனாவின் உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை அறிமுகம் செய்யும் போது ‘இன்குலாப்’ என்ற வார்த்தையை பாகிஸ்தான் திட்ட அமைச்சர் அசத் உமர் பயன்படுத்தினார்.
சீனா தயாரித்துள்ள சினோஃபார்ம் தடுப்பூசிகளுக்கே பாகிஸ்தானில் முன்னுரிமை கொடுக்கப் போவதாகவும் மேற்கத்திய நாடுகள் தயாரிக்கும் ஊசிகளுக்கு முன்னுரிமை கிடையாது என்பதோடு, பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டுள்ள பாக் வேக் தடுப்பூசியும் மக்களுக்கு செலுத்தப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
சீனாவின் அரசு மருந்து நிறுவனமான கேன்சினோவால் உருவாக்கப்பட்டு செறிவூட்டப்பட்ட வடிவத்தில் இஸ்லாமாபாத்திற்கு கொண்டு வந்து அங்குள்ள பாகிஸ்தான் தேசிய சுகாதார நிறுவனத்தில் தடுப்பூசியாக தயாரிக்கப்படுகிறது.
பாகிஸ்தானின் இந்த தடுப்பூசி தயாரிப்பு தற்சார்பு பொருளாதாரத்தில் ஒரு மைல் கல் என பாகிஸ்தான் கூறியுள்ளது.
இந்தியா மீதுள்ள முரண்பாடுகள் காரணமாக சீனா பாகிஸ்தானோடு மிக நெருக்கமாக உள்ளது. பாகிஸ்தானின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதோடு சுகாதாரத்துறையிலும் சீனா பெருமளவு முதலீடுகள் செய்துள்ளது.