இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றுக்கு பல்லாயிரம் பேர் மடிந்து வரும் நிலையில் இந்திய அரசு விஸ்டா என்ற திட்டத்தின் கீழ் புதிய பாராளுமன்ற கட்டடமும் பிரதமருக்கு ஆடம்பரமான வீடும் கட்டி வருகிறது. சுமார் 13 ஆயிரம் கோடிச் செலவில் கட்டப்படும் இந்த ஆடம்பர மாளிகைப் பணிகளை கொரோனா நேரத்தில் முடுக்கி விட்டுள்ளது இது தொடர்பாக சோனியா காந்தி, ஸ்டாலின். மமதா பானர்ஜி உள்ளிட்ட 12 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் 9 பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர். அவை
உள்ளூரிலுல் உலகளவிலும் மத்திய அரசின் வசம் உள்ள நிதி ஆதாரத்தை பயன்படுத்தி தடுப்பூசிகளை மொத்தமாக கொள்முதல் செய்ய வேண்டும். நாடு தழுவிய அளவில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.Compulsory licensing அதிகாரத்தை பயன்படுத்தி உள்நாட்டில் தடுப்பூசி தயாரிப்பை விரிவுபடுத்த வேண்டும்.தடுப்பூசி செலுத்துவதற்காக பட்ஜெட்டில் ஒதுக்கிய ரூ.35,000 கோடியை முழுமையாக செலவிட வேண்டும்.புதிய நாடாளுமன்றம் மற்றும் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தை நிறுத்தி அதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை ஆக்சிஜன், தடுப்பூசிகளை வாங்குவதற்காக செலவிட வேண்டும்.பி.எம்.கேர்ஸ் நிதியில் நன்கொடையாக பெறப்பட்ட அனைத்து நிதியையும் முழுமையாக கொரோனா பணிகளுக்காக செலவிட வேண்டும். வேலை இழந்தவர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.6000 வழங்க வேண்டும்.இந்திய அரசு குடோன்களில் ஒரு கோடி டன்னுக்கும் அதிகமான உணவு பொருட்கள் கிடக்கின்றன. அதனை தேவைப்படுவோருக்கு உடனடியாக வழங்க வேண்டும்.வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்.
இந்த கடிதத்திற்கு பிரதமர் மோடி உரிய பதில் அளிக்க வேண்டும் என்றும் அதில் கோரியுள்ளனர்.