வடக்கு அரசியல்வாதிகளினால் முன்வைக்கப்படும் விடுதலை புலிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று தெரிவித்தார்.
வடக்கு மற்றும் தெற்கு அரசியல் தலைவர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்ட பின்னரே வடக்கு மக்களுக்கான அரசியல் தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கொக்காவில் தொலைத்தொடர்பு நிலைய திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழர் உரிமைகளை பாதுகாக்குமாறு சர்வதேச நாடுகளிடம் கோரி வரும் எந்தவொரு புலம்பெயர் தமிழரும் இலங்கைத் தமிழர்களுக்காக ஒரு டொலரையேனும் செலவிட்டதில்லை
என இலங்கை ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார். பல மில்லியன்கள் செலவில் உருவான தொலைத்தொடர்பு கோபுரத்தைச் சூழ ஆயிரக்கணக்கான போர் அகதிகள் மீள் குடியேற்றப்படாத அவலத்துள் வாழ்கின்றனர். பல லட்சங்கள் செலவில் கோபுரம் திறந்து வைக்கப்பட்ட போது பட்டினியால் அகதிகளாக்கப்பட்ட பலர் கோபுரத்திலிருந்து கூப்பிடு தொலைவில் வாழ்கின்றனர்.
பட்டினியால் அகதிகளாக்கப்பட்ட பலர் கோபுரத்திலிருந்து கூப்பிடு தொலைவில் வாழ்கின்றனர்.இனி அந்தக் கோபுரத்தின் உதவியுடன் உலக நாடுகளுக்கு இந்த அவலங்கள் தகவல் பரிமாற்றத்தின் மூலம் கிட்டும்!(கிட்டுமா,முடக்குவார்களா?)