உண்ணாவிரதப் போராட்டங்கள் போன்றவற்றின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீரகுறிப்பிட்டுள்ளார்.
சில சக்திகளின் பிழையான வழிநடத்தல் காரணமாகவே வெலிக்கடை உள்ளிட்ட சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை பிழையாக வழிநடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கைதிகள் சமரசத்திற்கு மறுத்து உண்ணாவிரதத்தைத் தொடர்கின்றனர்.
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 192 பேர் கடந்த வியாழக்கிழமை முதல் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தனர். இவர்களில், 10 பேர் விசேட தேவையுடையவர்கள், ஆறு பேர் பல்வேறு நோய்களுக்கு உள்ளானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.