சிறைக் கைதிகளைப் பரிமாற்றம் செய் வது தொடர்பாக இலங்கைக்கும், இந்தியா வுக்கும் இடையில் விரைவில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட உள்ளது என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சின் மேலதிகச் செயலாளர் பிரசாத் காரியவசம் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடை யில் கைதிகளைப் பரிமாற்றம் செய்வது தொடர்பான உடன்படிக்கை அடுத்த இரு மாதங்களுக்கு இடையில் கைச்சாத்திடப் படும் என்று தெரிவித்துள்ளார்.
அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், இந்த உடன்படிக்கைக்கான பூர்வாங்க வேலைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இலங் கையில் சட்டமா அதிபர் திணைக்களம், இந்த உடன்படிக்கையின் நகலை தயாரிக் கும் சட்ட வேலையில் ஈடுபட்டுள்ளது. உடன்படிக்கையை எங்கே, எப்போது கைச்சாத்திடுவது என்று இன்னமும் முடிவாகவில்லை.
ஆனால், இந்த உடன்படிக்கை அடுத்த இரு மாதங்களுக்கு இடையில் கைச்சாத்திடப்படும் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு நம்புகிறது.
இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் இந்திய நீதிமன்றங்களால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் இலங்கையர்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு, இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் தமது மிகுதித் தண்டனைக்காலம் வரை தடுத்து வைக்கப்படுவர். இதே நடைமுறையை இலங்கை நீதிமன்றங்களால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் இந்தியர்கள் விடயத்தில் இந்தியா பின்பற்றும் என்றார்.