இரண்து மாதங்களில் கைதிகளின் விடுதலைக்கு நடவடிக்கை எடுப்பதாக அரசு வழங்கிய உறுதி மொழியை அடுத்து , கடந்த 10 நாட்களாக தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டத்தை மேற்கொண்ட தமிழ் அரசியல் கைதிகள் தமது போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை கொழும்பு நியு மகசின் சிறைசாலைக்கு சென்ற மன்னார் ஆயர் இராயப்பு யோசப் அரசின் உறுதி மொழிகயை கைதிகளிடம் தெரிவித்ததையடுத்து இவ் உண்ணாவரதம் கைவடப்பட்டுள்ளது. இலங்கையின் சகல சிறைசாலைகளிலும் அரசியல் கைதிகளினால் மேற்கொண்ட இவ் உண்ணாவிரதம் நிலை பட்டுள்ளது. இதேவேளை அரசின் இவ்வாக்குறுதி தேர்தல் நோக்கங்களைக் கொண்டது அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.