இந்தியப் பெருங்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய தமிழ் மீனவர்களை, தங்கள் நாட்டு கடல் எல்லையில் நுழைந்ததாகக் குற்றம்சாட்டி கைது செய்தது இலங்கை ராணுவம். இவர்கள் அனைவரும் விசாரணைக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்த செய்தி இந்திய தமிழ் மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த நிலையில், கைது செய்யப்பட்ட இந்திய தமிழ் மீனவர்கள் அனைவரும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் இன்று காலை தமிழகம் வந்து சேர்ந்தனர்.
யாழ்ப்பாணம்: ரூ 1.15 லட்ச ரூபாய் மதிப்புள்ள கடல் வளத்தை அழித்த தமிழக மீனவர்கள் 136 பேரை இலங்கை அரசு விடுவித்தது தவறு என்ற ஆர்ப்பாட்டங்களை வடபகுதி மீனவர் சங்கம் என்ற அரசு சார் அமைப்பும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி சார்ந்தோரும் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் என்ன அபாய அரசியல்? இந்தியாவிடம் அடிபணிந்து கடல் வளத்தை இழப்பதா அதற்கு எதிராகப் போராடுவதா எது அபாய அரசியல்?