ஜயலத் ஜெயவர்த்தன மீது குற்றம்சுமத்துவதை விடுத்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
புலிகளின் அதிகாரம் சார் அரசியலை ரனில் விக்கிரமசிங்க மற்றும் மகிந்த ராஜபக்ச போன்ற பேரினவாதிகள் அவ்வப்போது பயன்படுத்திக்கொண்டுள்ளனர். பேரினவாத அரச பாசிசம் கட்டவிழ்த்துவிட்டுள்ள இனச் சுத்திகரிப்பிற்கு எதிரான உறுதியான அரசியலை முன்வைக்க வேண்டிய காலகட்டத்துள் நாம் தள்ளப்பட்டுள்ளோம். ரனில், மகிந்த, சரத், சஜித் போன்ற அனைத்துப் பேரினவாதப் பாசிஸ்டுக்களுகளின் அரசியலை அவசரமாக எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இலங்கையில் தமிழ்ப் பேசும்மக்கள் மீதான இனச்சுத்திகரிப்பிற்கு எதிரான அரசியல் இன்னும் வெற்றிடமாகவே காணப்படுகின்றது.
புலிப்பாசிசம் கொடிபிடித்தாடும் வரை யாரும் அந்த வெற்றிடத்தை நிரப்ப வரப்போவதில்லை.
பேரினவாதத்தின் எம் இனச்சுத்திகரிப்பிற்கு முன் தாம் ஒன்றும் சளைத்தவரல்லர் எனப் புலிக்கொடிப் புல்லுருவிகள் போட்டி போட்டு எம் இனத்தைச் சுத்திகரிக்கையில் மாற்றானை நாம் நொந்து என்ன பலன் !!??
அபேரினவாதி ரனில் விக்கிரமசிங்க அப்ப பிரபாகரன் என்ன மகாத்மாவா
உங்கள் வசனத்தின் கருத்துப் புரியவில்லை.