இன்று காலை 6:30 மணிக்கு மகிந்த ராஜபக்ச தனது இருப்பிடமான அலரி மாளிகையிலிருந்து வெளியேறினார். மக்களின் முடிவுகளை ஏற்றுக்கொள்வதாகக் கூறி மகிந்த ராஜபக்ச அங்கிருந்து வெளியேறினார் அதே வேளை தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியானதும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மைத்திரிபால சிரிசேனவுடன் மகிந்த ராஜபக்ச தொலைபேசியில் உரையாடினார். நடைபெற்ற தேர்தல் வன்முறைகளின்றி வெளிப்படையானதாகவே நடத்தப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்சவிற்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது என்று மைத்திரிபால குழுவினர் உறுதி வழங்கியிருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.
மகிந்த ராஜபக்ச ஆட்சியில் வறுமை, தற்கொலை, பொருளாதார நெருக்கடி என்பனவே சிங்கள மக்கள் மத்தியில் மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஐ.எம்.எப், உலக வங்கி போன்றன இலங்கையில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு அரச செலவீனங்களைக் குறைத்து முழுமையான தனியார் பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்துமாறு மகிந்த ராஜபக்சவிற்கு அழுத்தங்களை வழங்கியது. போர்க்குற்றவாளியான மகிந்த அதனை நடைமுறைப்படுத்தினார். அதனால் வறுமையும் தற்கொலையும் தலைவிரித்தாடியது. அதே பொருளாதாரக் கொள்கையைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தவிருக்கும் மைத்திரியின் ஆட்சியில் சிங்கள மக்களுக்கு எந்த விமோசனமும் ஏற்படாது. மாறாக சிக்கல்கள் அதிகரிக்கும். ஆக, பேரினவாதக் கருத்துக்களைச் சிங்கள மக்கள் மத்தியில் இன்னும் அதிகமாக விதைக்க வேண்டிய தேவை ஏற்படும்.தேசிய இனப்பிரச்சனை கொழுந்துவிட்டெரியும். வரலாற்றில் இதுவரையில் நடைபெற்றது போன்று பேரினவாத ஆட்சியே நடைபெறும் என்பதால் இலங்கையில் தேசிய இனப்பிரச்சனை தொடரும்.
இதன் மறு விளைவாக தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலிருந்து எதிர்ப்புக்கள் தோன்றும். அந்த எதிர்ப்புக்களை எதிர்கொள்வதற்கு அரச துணைக் குழுக்களை நாடவேண்டிய தேவை ஏற்படும்.
ஆக, கருணா, பிள்ளையான், கே.பி, டக்ளஸ் தேவானந்த போன்ற தலைகள் மைத்திரியின் ஆட்சியில் பாதுகாக்கப்படுவர்.









congratulation to mr my3
மகிந்த இலகுவான வகையில் தோல்வியை பெற முயலமாட்டார் என்ற கருத்து நிலவியது. மேலும் அடக்குமுறை ஆட்சியை எவ்வழியிலாவது தொடர்வார் என்றும் நம்பப்பட்டது. எனினும் ஆட்சி மாற்றம் சனநாயக ரீதியில் இடம் பெறும் என தெரியவருகிறது. அரச நிர்வாகம் மகிந்தவிற்கு எதிர்ப்பாக இருப்பதாக – ஆதரவற்றிருப்பதாக கருதப்படுகிறது. மகிந்தவை கைவிட்டிட்டோம் (அத்தஅரணவ) என்று பல சிங்களச் சகோதரர்கள் கூறியதை செய்திருக்கிறார்கள்.
இரண்டாண்டுகளுக்கு முன் கிடைத்த சந்தர்பத்தை சிங்கள தலைவர்கள்-மக்கள் சரியாகப் பயன்படுத்த சர்வாதிகார ஆட்சியை மாற்றியமைத்திருக்கிறார்கள் என்பது ….. ! இது சர்வாதிகரத்தை ஒழிக்கும் போராட்டமாகத் தொடரவேண்டும். அதற்கு மக்கள் தயாரகவேண்டும். கடந்த கால அனுபவங்கள் இந்த ஜனாநாயக ஆட்சி மாற்றத்தின் பெறுமதியை அதிகம் உணரச் செய்கிறது. இதனை மக்கள் தக்க வைத்துக் கொள்ள போராடவேணடியிருக்கும். – விஜய்
நிலத்தில் விழுந்து உருண்டு மேலும் சிரிகிறேன்.
2005 மகிந்த சிந்தனையே ஐ.எம்.எப் எழுதவைத்தது தான். 2010 ஐந்தாண்டுத் திட்ட தேர்தல். அமெரிக்காவில் நிர்நயிக்கப்பட்டது.
2015 தேர்தல் பத்தாண்டுத் திட்டம். இதுவும் அமெரிக்காவிலேயே நிர்ணயிக்கப்பட்டது.
பிழைக்கத் தெரிந்தவனுக்கு வழியா இல்லை..
ஆவரது வா
ஆயுதமேந்தாத தமிழ் பயங்கரவாதிகள் தண்டிக்கபடுவதே முக்கியமானது.
மைத்திாி என்ன செய்யப்போகிறாா் என்பதைவிட இந்த ஒட்டுண்ணிகளின் தொல்லைகளிலிருந்து தமிழினத்திற்கு சிறிது விமோசனம் கிடைத்தால் அதுவே இப்போதைக்கு பொிய விடுதலை.
சலுகைகளுக்கு விலைபோகாத வடக்கு கிழக்கு மக்களுக்கு என் வாழ்த்துக்கள்.
Already Traditional Minister had a deal with Chandrikka…
Wait & see…
கருணா, பிள்ளையான், கே.பி, டக்ளஸ் தேவானந்த போன்ற தலைகள் மைத்திரியின் ஆட்சியில் பாதுகாக்கப்படுவர்