பாஜக கட்சியின் தேசிய பொதுச் செயலாளர்களில் ஒருவர் கே டி ராகவன் இவர் ஒரு பெண்ணுடன் விடியோ சாட்டில் சுய இன்பம் அனுபவிப்பது போன்ற விடியோ காட்சிகளை பாஜக பிரமுகரான மதன் ரவிச்சந்திரன் வெளியிட்டார்.
மேலும், 15 பேரின் விடியோ தன்னிடம் இருப்பதாகவும் அதையும் வெளியிடுவேன் என்றும் கூறினார். இந்நிலையில் மதன் டயரி என்ற அவருடைய யு டியூப் சானல் முடக்கப்பட்டது. ஆனால் அவர் வெளியிட்ட விடியோக்கள் வைரலாக பரவி விட்டது என்பது வேறு கதை என்றாலும். இதை வைத்து பலரும் பல்வேறு கேள்விகளை எழுப்பி வந்தனர்.
கட்சி ராகவன் மீது நடவடிக்கை எடுக்குமா மதன் மீது நடவடிக்கை என்று கேள்வி கேட்டு வந்தனர். ராகவன் தன் பதவியை ராஜிநாமா செய்துள்ளதோடு இந்த பிரச்சனை முடிந்து விடவில்லை. ஆனால், இப்போது பாஜகவின் கட்சியிலிருந்து மதன் ரவிச்சந்திரன், வெண்பா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளார்கள். இது தொடர்பாக கரு. நாகராஜன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“பாஜகவின் கட்சிக் கொள்கைகளுக்கு முரணாக வீடியோ பதிவில் கருத்துகளை தெரிவித்துள்ள மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்கள். அவர்களுடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது,” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.