பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் நியூயோர்க்கில் வைத்து அதிகாரிகள் விசாரித்தது உண்மை என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நேற்று திங்கட்கிழமை தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் செய்தியாளர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேசிய சுதந்திர முன்னணி நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச நியூயோர்க்கில் வைத்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம், “ஒரு மணித்தியாலம் விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டதிலிருந்தே சூழ்ச்சிகள் ஆரம்பமாகிவிட்டன என்று தெரிவித்துள்ளாரே… இது உண்மையா?” எனக் கேள்வி எழுப்பினர். அது உண்மைதான் என பதிலளித்த ரோஹித்த போகொல்லாகம,”அவரிடம் எவ்வாறான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன என்பது தொடர்பில் தெரியாது”