டொனால் ரம் அதிபராகத் தெரிவான போது கேலிக்குள்ளான அமெரிக்க முதலாளித்துவ ஜனநாயகம் மீண்டும் இன்று உலகிற்கு தனது கோமாளித்தனத்தை நிறுவியுள்ளது. அமெரிக்காவின் 46 அதிபராகத் தெரிவான ஜோ பிடன் இன் வெற்றியை சாட்சிப்படுத்தும் நிகழ்வைத் தடுப்பதற்காக கப்பிட்டல் கட்டிடத்தை முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கான ரம்ப் இன் ஆதரவாளர்களில் ஒரு பெண் இன்று – 06.01.2021 – சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். முன்னதாக இத் தேர்தல் வெற்றியைத் தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அறிவித்த ரம்ப் கப்பிடலுக்கு தமது ஆதரவாளர்களை செல்லுமாறு வேண்டுகொள் விடுத்தார். வன்முறை அதிகரித்த வேளையில், தொலைக்காட்சியில் தோன்றிய ரம், இத் தேர்தல் ஊழல் நிறைந்தது எனினும் தெரிவானவர்களின் கரங்களுக்குள் நாம் எதுவும் சாதிக்க முடியது என்பதால் வீடுகளுக்குச் செல்லுமாறு அறிவித்தார். ரிவிட்டர் ரம் இன் கணக்கை தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து பேஸ் புக், இன்ஸ்ர கிராம் ஆகியன ரம்ப்பின் கணக்கை முடக்கியுள்ளன.
இவை அனைத்தையும் மீறி தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறும் ரம்ப்பின் தேர்தல் பிரச்சாரத்திற்கு பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் நிதி வழங்கின என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டடத்தின் சுவர்கள், கதவுகள் மிது தாக்குதல் நடத்திய ஆதரவாளர்களில் சிலர் கட்டடத்தின் உள்ளே சென்றனர். வெளியிலிருந்த ஆதரவாளர்கள் காவலுக்கு நின்ற போலிசார் மீது தாக்குதல் நடத்தினர். கடந்த வருடம் கறுப்பின மக்களில் உரிமைக்கான போராட்டத்தில் பொதுச் சொத்துக்கும் பொலீசாருக்கும் சேதம் விளைவதாகக் கூறிய அதே ரம் ஆதரவாளர்களே இப்போது பொதுச் சொத்தையும் அமெரிக்க சனநாயகத்தின் இருதயம் எனக் கருதும் கட்டடத்தையும் சேதப்படுத்தினர்.
சுட்டுக் கொலை செய்யப்பட்ட ரம் ஆதரவாளரான பெண், நிகழ்வு நடபெற்ற அறைக்குள் சென்று அங்கு தலைவரின் இருக்கையை ஆக்கிரமித்துக்கொண்டார். புதிதாக தெரிவான அதிபர் பிடன் தொலைக்காட்சியில் தோன்றி, அமெரிக்காவின் சனநாயகம் இதுவரை எதிர்பாராத தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவித்தார். முன்னை நாள் ரம் இன் நண்பரான பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இன்று பாராளுமன்றத்தில் ரம்பின் குண்டர்படையைக் கண்டித்துப் பேசினார்.