மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் பல்கலைக்கழகங்களை காவி மயமாக்கும் நிரலை வெகு வேகமாக செய்து வருகிறது. பல்கலைக்கழக துணை வேந்தர்களாக இந்துத்துவவாதிகளை நியமிப்பதும், இட ஒதுக்கீடு, பணி மூப்பு போன்றவற்றை கணக்கில் கொள்ளாமல் தங்கள் ஆதரவாளர்களை நியமிப்பதுமாக பாஜக பல்கலைக்கழகங்களை கையாண்டு வந்தது.
கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் பல்கலைக்கழகத்தில் கல்விக் கழக பாடத்திட்டக் குழு இந்துத்துவ சக்திகளான கோல்வால்கர், வீர சாவாக்கர், தீனதயாள் உபாத்யாய ஆகியோர் பற்றிய பாடங்களை இணைத்தது. இது கடும் சர்ச்சைகளை உருவாக்கிய நிலையில். இப்போது அந்த பாடத்திட்டங்கள் முழுமையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
“திராவிட தேசியம்” என்ற தலைப்பின் கீழ் தந்தை பெரியார்,ஈ,எம்.எஸ். நம்பூதிபாட்,ராம் மனோகர் லோகியா உள்ளிட்ட கேரள சமூக நீதிக்காக போராடிய தலைவர்களின் பாடத்திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும், நவீன அரசியலில் தேசமும் தேசீயமும் என்ற தலைப்பின் கீழ் சாவர்க்கர், கோல்வாகர்,முகமது அலி ஜின்னா, மௌலானா அபுல் கலாம் ஆசாத் போன்றோர் பற்றிய பாடங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.