09.01.2009.
இலங்கையின் வடக்கே கேந்திர முக்கியத்துவம் மிக்க இராணுவத் தளமாக விளங்கிய ஆனையிறவு பகுதியை கடும் சண்டைகளுக்குப் பிறகு இன்று இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதாக இலங்கை ஜனாதிபதி அறிவித்தள்ளார்.
யாழ்-கண்டி வீதியான ஏ9 சாலையை முழுமையும் தற்போது இராணுவத்தினர் வசம் வந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
23 வருடங்களில் முதற் தடவையாக யாழ்ப்பாணம்-கண்டியூடான ஏ9 பாதை முற்றுமுழுதாகக் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தனது செய்தியில் குறிப்பிட்டார்.