பிரதி ஊடகத்துறை அமைச்சராக மேர்வின் சில்வா நியமிக்கப்பட்டமைக்கு எல்லைகளற்ற சர்வதேச ஊடகவியலாளர்கள் அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.
மேர்வின் சில்வாவை அவரது அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறும் பிரதமர் டி.எம்.ஜயரட்னவிடம், சர்வதேச ஊடகவியலாளர்கள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஊடகவியலாளர்களை தாக்கியும், அவமானப்படுத்தியும் உள்ள ஒருவரை எந்த நாடு அமைச்சராக நியமிக்கும் எனவும் அந்த அமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது.
பல ஊடகவியலாளர்களின் கொலைகளுக்கும் தாக்குதல் சம்பவங்களுக்கும் வெளிப்படையாகவே உரிமை கோரியிருந்த மேர்வின் கொழும்பின் முக்கிய தாதாக்களில் ஒருவர்.