வன்னியில் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினர் நேற்று கொக்காவிலைக் கைப்பற்றியுள்ளனர் எனப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. வன்னியில் விடுதலைப் புலிகளின் பகுதியில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள இராணுவத்தின் 57 ஆவது படைப்பிரிவே இந்தப் பகுதிக்கு சென்றிருக்கிறது.
இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர் இராணுவம் கொக்காவிலைக் கைப்பற்றியுள்ளதாகவும், கடந்த இருவாரகால கடும் மழைக்குப்பின்னர் வன்னியில் மீண்டும் இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்தது.