25.09.2008.
பந்தாரா:
நாட்டையே அதிர்ச்சிக் குள்ளாக்கிய கெயிர்லாஞ்சி தலித் மக்கள் படுகொலை வழக்கில் 6 பேருக்கு தூக்கு தண்டனையும், 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக் கப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலம் பந்தாரா செசன்ஸ் நீதிமன்றம் இந்த தீர்ப்பை புதனன்று வழங்கியது.
2006ம்ஆண்டு செப்டம் பர் 29ம்தேதி மராட்டிய மாநிலம் கெயிர்லாஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பையாலால் போட்மாங்கே. இவரது மனைவி சுரேகா, மகள் பிரியங்கா, இரு மகன்கள் சுதீர், ரோசன் ஆகியோர் ஜாதி ஆதிக்க வெறியர்களால் படு கொலை செய்யப்பட்டனர். காவல்துறையினரை தாக் கிய ஆதிக்க சாதியைச் சேர்ந்த சிலர் குறித்து பை லால் போலீசாருக்கு தகவல் கொடுத்ததால் ஆத்திர மடைந்த ஆதிக்க சக்திகள் தலித் குடும்பத்தினரை அடித்து படுகொலை செய்தனர்.
இம்மாதம் 15ந்தேதி இவ் வழக்கில் 8 பேர் குற்றவாளி கள் என்று அமர்வு நீதிமன் றம் தீர்ப்பளித்துள்ளது. இவர்களுக்கான தண் டனை புதனன்று வழங்கப் பட்டது. 36 பேர் வழக்கி லிருந்து விடுவிக்கப்பட்டனர்.
சக்ரூ பிஞ்சேவர், சத்ரு கன் தாண்டே, விஸ்வநாத் தாண்டே, ராமு தாண்டே, ஜெகதீஷ் மன்லேக்கர், பிர பாகர் மன்லேக்கர், ஆகியோ ருக்கு தூக்கு தண்டனையும், ஜிஜுபால் தாண்டே, கோபால் பினேஷ்வர் ஆகி யோருக்கு ஆயுள் தண்ட னையும் வழங்கி நீதிபதி எஸ்.எஸ்.தாஸ் தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில்6 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டிருந்த போதும் சாதி ஆதிக்கவெறி யின் அடிப்படையில் நடந்த படுகொலை என்ற அடிப் படையில் அல்லாமல் நில விவகாரத்தில் நடந்த படு கொலையில் தீர்ப்பு வழங் கப்பட்டுள்ளதாக நீதிபதி கூறியுள்ளார். வன் கொடுமை தடுப்பு சட்டத் தின் கீழ் இவர்களுக்கு தண் டனை வழங்கப்படவில்லை.
தலித் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை அடித்து படுகொலை செய்த ஆதிக்க சாதியினர் அவர்களது உடல்களை வாய்க்கால் ஒன்றில் தூக்கியெறிந்தனர். இந்த கொடூர சம்பவம் மூடி மறைக்கப்பட்டபோதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாதர் சங்கம் உள் ளிட்ட பல்வேறு அமைப்பு கள் தொடர்ந்து போராடி யதன் காரணமாகவே இந்த கொடூரக் கொலை குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டது.
மராட்டிய மாநில முதல் வர் ஆர்.ஆர்.பட்டேல், கெயிர்லாஞ்சி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு வர லாற்று சிறப்புமிக்கது என்று குறிப்பிட்டுள்ளார். தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு எதிராக உறுதிமிக்க தீர்ப்பாக இது விளங்குகிறது என்று கூறிய அவர், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 36 பேர் விடு விக்கப்பட்டுள்ளது குறித் தும் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட புகார்கள் நிரூ பிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது குறித்தும் சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து மேல் முறையீடு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.