கூடங்குளம் அணுஉலை ஆய்வு செய்த அரசின் வல்லுநர் குழு தமிழக அரசிடம் இன்று அறிக்கை தாக்கல் செய்கிறது.
நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஆய்வு செய்த தமிழக அரசு வல்லுநர் குழு ஒன்றை அமைத்தது.இந்த குழு கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஆய்வு செய்த பின்னர், போராட்டக்காரர்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து பேசியது.
அபிவிருத்தி என்ற பெயரில் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் குறிப்பாக மூன்றாம் உலகநாடுகள் அழிக்கப்படுகின்றன. உலகம் முழுவதும் அழிவுக்குரியது என்று வெளிப்படையாகக் கணிக்கப்படும் அணு மின்சார நிலையங்கள் தமிழ்நாட்டில் மக்கள் குடியிருப்புக்களுக்கு அருகாமையில்நிறுவப்பட்டுள்ளது.இவ்வாறான அழிவுகளை ஆராய்வதற்கு புதிதாகக் குழுக்கள் தேவையற்றவை என்பது வெளிப்படையான போதிலும் கூடங்குளம் அணு மின்நிலையத்திற்கு என குழுக்கள் சாரமாரியாக அமைக்கப்படுகின்றன.
வல்லுநர் குழு தமிழக அரசிடம் இன்று அறிக்கை தாக்கல் செய்கிறது.
suggestion not required guys….. Just give the proper news…