மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணிக்கு, கொழும்பு மாநகர சபையில் 6 ஆசனங்களும், தெஹிவளை கல்கிஸை மற்றும் கொலன்னாவையில் தலா ஒரு ஆசனமும் கிடைத்துள்ளன.
கொழும்பில் வெற்றி பெற்ற ஐக்கிய தேசியக் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால், மனோ கணேசனிடமுள்ள ஆறு ஆசனங்களைப் பெறுவதில் அக்கட்சி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக செய்திகள் கூறுகின்றன.
அத்தோடு நிபந்தனைகள் விதித்தால், ஜனநாயக மக்கள் முன்னணியின் ஆதரவு தேவையில்லை என்கின்ற வகையில் அறிக்கைகளை வெளியிடுகிறது ஐ.தே.க.
ஆனாலும் இத் தேர்தலின் ஊடாக கொழும்பு வாழ் தமிழ் மக்கள் சொன்ன செய்திகளை ஆளும் தரப்பும், ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.
வடக்கில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் வெளிப்படுத்திய செய்தியையும், இப் பெரும்பான்மையினக் கட்சிகள் உணரவில்லை போல் தெரிகின்றது.
தேர்தலின் போது மோதிக் கொள்வதும், தேர்தல் முடிவடைந்ததும், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக கூட்டுச் சேர்வதை ஜனநாயக பண்பாக ஏற்றுக் கொள்ளும் அபத்தம் நிகழ்வதைக் காணலாம்.
மத்திய அரசியல் கூட்டுச் சேர்ந்துள்ள ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரஸும் இத் தேர்தலில் பிரிந்து நின்றே போட்டியிட்டன.
ஆகவே, இத்தகைய முரண்பட்ட நிலைப்பாடுகளால் மக்கள் குழப்பமடைவதும், நடைபெறுவது அதிகார நிலை நிறுத்தலிற்கான போட்டியா? அல்லது உண்மையிலேயே இவர்கள் தாம் சார்ந்த மக்களின் நலனிற்காக அரசியல் களத்தில் செயற்படுகிறார்களா? என்கிற கேள்வி எழுவது நியாயமானது.
இத்தகைய முரண் நிலைகள் பிரித்தானிய ஆட்சியாளர்கள் மத்தியிலும் தற்போது தோற்றம் பெற்றிருப்பதை காணலாம்.
இறுதிப் போரில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக சுயாதீன விசாரணை யொன்று நடைபெற வேண்டுமென பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் நாடாளுமன்றில் வேண்டுகோள் விடுக்கின்றார்.
அதேவேளை, பாதுகாப்புச் செயலாளர் லியம் பொக்ஸ் இலங்கை ஆட்சியாளர்களுடன் சுமுகமான உறவொன்றைப் பேணி வருகின்றார்.
இருப்பினும் லியம்பொக்ஸ் வெளிநாடுகளுக்கு தனது உத்தியோகபூர்வ பயணங்களை மேற்கொள்ளும் போது, அவருடைய நண்பர் அடம் வெற்றிரி (ADAM WERRITTY) கூட விருப்பதுதான் இராஜ தந்திர வட்டாரங்களில் பெரும் சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.
லியம்பொக்ஸின் ஆலோசகர் என்று குறிப்பிடப்பட்ட அறிமுக அட்டையோடு வலம் வரும் வெற்றிரி ஒரு சாதாரண பிரஜை.
ஆனாலும் கடந்த ஒன்றரை வருடங்களில் 14 தடவை பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு அலுவலகத்துள் அவர் பிரவேசித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இவர் அரச உத்தியோகத்தரோ அல்லது பெரும் பழைமைவாதக் கட்சியைச் சேர்ந்தவரோ அல்லர்.
இரண்டு விதமான சந்திப்புகளை மேற்கோள் காட்டி இவ்விவகாரம் கிளப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூனில், வர்த்தகரான ஹாவே பௌல்டர் (HARVEY BOULTER) உடனான, லியம் பொக்ஸின் துபாய் சந்திப்பிற்கு இடைத் தரகராக வெறிரி தொழிற்பட்டாரென்கிற குற்றச்சாட்டு முதன்மையானது.
இவை தவிர இலங்கை ஜனாதிபதியை லியம் பொக்ஸ் சந்தித்த வேளையிலும் இவர் உடனிருந்ததாக புகைப்பட ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதேவேளை, இலங்கை அரசின் மீது சர்வதேச மனித உரிமை அமைப்புகள் பாரியளவில் போர்க் குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் இத் தருணத்தில், இலங்கை ஆட்சியாளர்களோடு லியம் பொக்ஸும் அவரது நண்பர் அடம் வெரிறியும் உறவு கொண்டுள்ள விவகாரத்தை சனல் 4 தொலைக்காட்சியும் அம்பலப்படுத்தியுள்ளது.
ஆகவே அரசியல்வாதிகளின் இரட்டை நிலைப்பாடுகள் வெளிப்படும் இவ்வேளையில், எந்த நிலைப்பாட்டினை எடுக்க வேண்டுமென்பதை அறியாமல் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் தடுமாறுவதையும் காணலாம்.
நிபுணர் குழு அறிக்கை தொடர்பாக இலங்கை அரசின் பதிலை நீண்ட நாட்களாக எதிர் பார்த்துக் காத்திருப்பதை சலிப்புறாமல் சொல்கிறார் பான் கீ மூன்.
ஆனாலும் பான் கீ மூனிற்கு பதிலளிக்காமல், சொந்த ஆவணப்படமொன்றைத் தயாரித்து, சனல் 4 தொலைக்காட்சிக்கு பதிலளித்துக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு.
பயங்கரவாதத்தை முறியடித்த தமது நாட்டிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு ஏராளமான விடயங்கள் இருந்தும், போர்க்குற்ற விசாரணை தேவையென்று சர்வதேசம் அடம் பிடிப்பது தவறாதென பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய கவலையடைகிறார் போல் தெரிகிறது.
ஆவணப் படப் போட்டிகள் ஒரு புறமிருக்க, புதிய சில மாற்றங்கள் இலங்கை தொடர்பாக நிகழ்வதை அவதானிக்கக் கூடியதாகவிருக்கிறது.
அதாவது தேசிய இனப் பிரச்சினை குறித்து கலந்துரையாட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்துள்ளது அமெரிக்கõ இராஜாங்கத் திணைக்களம்.
தெற்காசிய விவகாரங்களிற்கான உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் இச் சந்திப்பினை ஏற்பாடு செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் இஸ்ரேல் பலஸ்தீன பிரச்சினை தொடர்பாக பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யசீர் அரபாத்தை, அமெரிக்க அரசு முன்பு வெள்ளை மாளிகைக்கு அழைத்து பேசிய விடயமும் தற்போது நினைவிற்கு வருகிறது.
இலங்கைக்கு அடிக்கடி செல்லும் அமெரிக்க அரசின் பிரதி நிதிகள், அண்மைக் காலமாக கூட்டமைப்போடு பேசுவதற்கு அதிக முன்னுரிமை கொடுத்து வரும் விடயத்தையும் சேர்த்துப் பார்க்க வேண்டும்.
அரசியல் தீர்விற்கான பேச்சுவார்த்தைக் களம் இலங்கையை விட்டு வெளியே இடம் மாறக் கூடாதென்பதை விரும்பும் இந்தியா, கூட்டமைப்பின் அமெரிக்கப் பயணத்தை எவ்வாறு நோக்கும் என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.
ஆனாலும் இது காலவரை டெல்லிக்கு மட்டுமே அரசியல் பயணங்களை மேற்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர் மட்ட குழுவினர், முதன் முதலாக மேற்குலகின் நாயகனாக விளங்கும் ஐக்கிய அமெரிக்க இராச்சியத்திற்கு பயணிப்பது, பல செய்திகளைச் சொல்லப் போகிறது.
அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு சர்வதேச அங்கீகாரம் ஒன்றினை வழங்குவதோடு, அவர்களை ஈழத் தமிழ் மக்களின் அரசியல் பிரதி நிதிகளாக காட்ட மேற்குலகம் முனைவதாகவும் கொள்ளலாம்.
புலம்பெயர் நாடுகளில், உலகத் தமிழர் பேரவை மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் போன்ற அமைப்புகள் இருந்தாலும், பேரவையின் உருவாக்கத்தின் போது பிரித்தானிய அரச உயர் மட்டத்தினர் கலந்து கொண்ட நிகழ்வு, மற்றும் அண்மையில் ரொபேர்ட் ஓ பிளேக்கின் அமெரிக்காவிற்கு பேரவையை அழைத்துப் பேசிய விடயமும் பலரால் அவதானிக்கப்பட்டது.
டெல்லி இராஜதந்திர வட்டாரத்தில் உலகத் தமிழர் பேரவை மேற்கொண்ட தொடர்பாடல்கள், இவர்கள் குறித்த மேற்குலகின் மென் போக்கிற்கு காரணியாக அமைந்தெனக் கணிப்பிடலாம்.
ஆயினும் கடந்த செவ்வாயன்று தமிழ் நாடு சென்ற உலகத் தமிழர் பேரவையின் (GLOBAL TAMIL FORUM) தலைவர் இமானுவல் அடிகளார், சென்னை விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் பிறிதொரு செய்தியை வெளிப்படுத்துகிறதெனலாம்.
அதாவது டெல்லியைத் தாண்டி தமிழ் நாட்டுக்கு நேரடியாகச் செல்லும் புலம்பெயர் அமைப்பின் நகர்வினை இந்திய மத்திய அரசு விரும்பவில்லை போல் தெரிகிறது.
அத்தோடு இந்தியாவும் மேற்குலகமும், புலம் பெயர் அமைப்புகளின் செயற்பாடுகள் குறித்து ஒரு எல்லைக் கோட்டினை வரையறுத்துச் செயற்படுகிறார்களா? என்கிற சந்தேகமும் எழுகிறது.
இலங்கை மீதான அழுத்த அரசியலிற்கு, போர்க்குற்ற விசாரணை குறித்து அதிக கரிசனையோடு செயற்படும் புலம்பெயர் அமைப்புகளின் பங்களிப்பினை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, அரசியல் தீர்வு என்கிற விவகாரம் வரும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே இந்தியாவும் மேற்குலமும் ஏற்றுக் கொள்வது போலுள்ளது.
ஆகவே, அழுத்த அரசியலிற்குத் தேவையான இரு வேறுபட்ட பரிமாணங்களை எவர் ஊடாக நகர்த்த வேண்டுமென்பதை மேற்குலகம் உணர்ந்து கொள்வதால், கூட்டமைப்பினரை இராஜதந்திர அந்தஸ்தோடு அமெரிக்கா அழைக்கிறதெனக் கூறலாம்.
இந்தியாவைப் பொறுத்தவரை, இலங்கை மீது பிரயோகிக்கும் அழுத்த அரசியலில், போர்க் குற்ற விசாரணை என்கிற பரிமாணத்தை முதன்மைப்படுத்தவில்லை.
மாறாக கூட்டமைப்பினூடாக, அரசியல் தீர்வு என்கிற அழுத்த அரசியல் பரிமாணத்தை மட்டுமே கையாள்கிறது.
இலங்கை மீது இந்தியா பிரயோகிக்கும் அழுத்தங்களுக்கும் ஓர் எல்லை உண்டு. அதிகம் அழுத்தினால் உறவு முறியும் சாத்தியப்பாடுகள் இருப்பதால் மேற்குலகம் கொடுக்கும் போர்க்குற்ற அழுத்தங்களையும் தனக்குச் சாதகமõன விடயமாக இந்தியா கருதுகிறது.
இவற்றுக்கு அப்பால், அடுத்த நிதியாண்டின் மொத்த வருமானம் 1,11,500 கோடி ரூபாவாகவும், அரசின் மொத்த செலவீனம் இதன் இருமடங்காக இருப்பதாகவும் கணிப்பிடப்படுகின்றது.
கல்வி அமைச்சிற்கு 3326 கோடி, பாதுகாப்பு அமைச்சிற்கு 22, 994 கோடி என்கிற வகையில் உத்தேச வரவு செலவுத் திட்டம் உருவாக்கப்படுகிறது.
அதாவது அரசியல் தீர்வு, போர்க் குற்ற விசாரணை என்ற அழுத்தங்களிற்கு அப்பால், பாரிய பொருளாதார நெருக்கடிகளையும் இலங்கை அரசு எதிர்கொள்வதை இப் புள்ளி விபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
மன்னாரின் எண்ணெய்க் காசு, ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலின் மத்திய வங்கிக்கு வந்து சேர இன்னமும் 10 ஆண்டுகள் செல்லும்.
ஆசியாவின் பொருளாதார வல்லரசுகள் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில், இலங்கைக்கான இந் நாடுகளின் உதவிகளும் மட்டுப்படுத்தப்படுமென எதிர்பார்க்கலாம்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளால், கடந்த ஏழு மாதங்களில் சீனாவின் ஏற்றுமதி வர்த்தகமும் சரிவைச் சந்தித்துள்ளது.
இந்தியாவில் பண வீக்கத்தோடு, அரச வட்டி வீதமும் அதிகரித்துச் செல்கிறது. அத்தோடு சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீதான சுங்க வரி (TARIFF)யை அதிகரிக்க வேண்டுமென அமெரிக்கா செனட் சபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தால், இரு நாடுகளுக்குமிடையே வர்த்தகப் போர் (TRADE WAR) ஆரம்பமாகியுள்ளதாக பொருளியலாளர்கள் அச்சமடைகின்றனர்.
இத்தகைய சர்வதேச நெருக்கடிக்குள் ஈழத் தமிழர் விவகாரம் பந்தாடப்படுவதைக் கவனிக்க வேண்டும்.
சட்டப் போராட்டங்கள் நிரந்தரத் தீர்வினை ஏற்படுத்த உதவாதென்பதை, வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பயங்கரவாத தடைச் சட்டத்தில் இணைக்கப்பட்ட விடயங்களுக்கெதிராக கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மாவை சேனாதிராஜா தொகுத்த அடிப்படை உரிமை மீறல் மனு, உயர் நீதிமன்றத்தõல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படõமல் நிராகரிக்கப்பட்ட விடயம் உணர்த்துகிறது.
ஆகவே சர்வதேச அரங்கிற்கு அரசியல் தீர்வு விவகாரத்தைக் கொண்டு செல்வதே சரியான நகர்வாக இருக்குமென்பதை இந்த வழக்கு விவகாரம் மீண்டும் நினைவூட்டுகிறது.
மண்ணைவிட்டு விண்ணிற்கு உயர உயர செல்பவை எல்லாம் திரும்ப மண்ணுக்கே வரவேண்டும். அப்படி வருவதற்கு மறுக்கும் அதிசயமான வரத்தைப் பெற்றுள்ளவன் தமிழன் மட்டுமே. திரும்ப வருவதற்கு உலகத்தில் அவனுக்கு மண்ணே இல்லாமல் போனதுதான் அந்த அதிசயத்தின் இரகசியம். சொந்தமாக நாடில்லை, சொந்தமாக மொழியில்லை, சொந்தமாக கலைகளில்லை, சொந்தமாக கலாச்சாரமில்லை, சொந்தமாக கடவுளுமில்லை, மதமும் இல்லை. இந்நிலையில் சொந்தமாக மண்மட்டும் மிஞ்சிவிடுமா?.
மண்ணை மீட்கவேண்டும். அதற்குரிய பக்குவம் பாலர் வகுப்புகளில், புதியபாடத்திலிருந்து ஊட்டப்படவேண்டும். இன்றைய வளர்ந்துவிட்ட தலைமுறையை மாற்ற முடியாது! அது நாய்வாலை நிமிர்த்துவதற்கு சமமானது!. அபூர்வமாக மாற்றங்களை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுபவர்களை எல்லாம் அழித்துவிடுவதிலேயே இன்றைய தமிழ்பேசுவோரின் கவனம் உறுதிகொண்டுள்ளது.
அதிசயமாக கிடைத்த ஒரு தலைவனிடம் இந்தமாற்றங்களை ஏற்படுத்தும் குணாதிசயங்கள் காணப்பட்டது. சொந்தமண்ணில் அந்தமாற்றங்களை ஏற்படுத்துவதற்கு பாரிய தடைகளை அவன் எதிர்கொண்டான். புலம்பெயர் நாடுகளில் அவ்வாறான தடைகள் மிகக்குறைவு. ஆனாலும் அந்தத் தலைவனின் அடியொற்றி நடப்பதாக செயற்பட்ட செயற்பாட்டாளர்களே மாற்றத்தை விரும்பவில்லை என்பதற்கு உதாரணமாக கீழ்வரும் செய்தியும் சாட்சியாகவுள்ளது.
புலம்பெயர் நாடுகளில் தமிழாலயங்கள் தொடங்கப்பட்டன. பாலர் வகுப்புகளிலிருந்து புதியபாடத்திட்டங்கள் கற்பிக்கப்பட்டன. ஆனால் கலை, கலாச்சார, கடவுள், மத வழிபாடுகள் எந்த மாற்றமுமின்றி ஊட்டப்பட்டன. இந்து, சைவ மதங்களை பின்பற்றி வளர்வதற்கு பயின்று வளர்ந்த பாலகர்களுக்கு தமிழாலயங்கள் கற்றுக்கொடுத்த முதல்பாடம் தில்லைவாழ் அந்தணர்க்கு அடியார்க்கும் அடியேன்……..
தமிழனிடம் திறமையுண்டு. அமெரிக்கா என்ன! ஆத்திரேலியா என்ன! அகில உலகமுமே தமிழனை வானுயர தூக்கிவிடும் அளவிற்கு இராசதந்திர அங்கீகாரம் வழங்கப்பட்டாலும்…. தமிழன் திரும்பிவர உலகில் மண்ணில்லை. அடிமைக்கு மண்ணிலாமல் போவதில் வியப்பில்லையல்லவா!.
“தமிழனாக வாழ் பின்பு போராடு”.
அதிசயமாக கிடைத்த ஒரு தலைவனிடம் இந்தமாற்றங்களை ஏற்படுத்தும் குணாதிசயங்கள் காணப்பட்டதுநகைப்புக்கிடமன கருத்து, அவன் தான் ஒழிந்து கொண்டு மற்றவர்க்ளை கொலை செய்த கொலை கார பாவி, அவன் தலைவனா, வேதனை வெட்லம் அவமனம்,
தமிழனின் “எத்தன்” தனப்போக்கு கடந்த முப்பது ஆண்டுக்குள் அம்பலப் பட்டது போல் எந்த காலத்திலும் அம்பலப் படவில்லை.
தனக்கு மண்வேண்டுமென்று சொன்னவன் உலகம் பூராவும் கால்லூண்டி நிற்கிறான்.
உலகச்சமுத்திரத்தில் இருபதிற்கும் மேற்பட்ட கப்பலை ஓடவிட்டவன் தீவுபகுதி மக்களுக்கு ஒரு பயணிகள் படகைத் தன்னும் சேவைகளில் ஈடுபடுத்த முடியாத எத்தனப்போக்கு கொண்டவனாக காட்சி தருகிறான். ஒவ்வொரு தேவைகளுக்கும் அது அரசின் கடமை என்று சொல்லி வசூலாகிய பணத்துடன் தப்பிவிடுகிறான். இல்லை தலைமறைவாகி விடுகிறான்.
மண்கேட்கிற இந்த மகேந்திரா என்கிற தமிழன் யார்? தமிழன் என்று சொல்வாரா? இழிசாதிகளையும் மலையகமக்களையும் ஏன்? கிழக்குமக்களையும் இழிவு படுத்தியவன் தமிழனே!. இது எந்த தமிழன் என்பதை மகேந்திரா உச்சரிப்பாரா?
பலஇனக்கலவரங்களில் அழிந்தொழிந்த சொத்துக்கும் உயிர்களையும் விட தமிழன் மண்கேட்டு அழிந்தொழிந்தவை தான் விகிதாசாரத்தில் பலமடங்கு எணணிக்கை உடையவை என்பதை இந்த காசிகவிதை பாணி மகிந்திரா அறிவாரா?
என்னைத் தேடுமுன் உங்களை வெளிக்காட்டிய நீங்கள் உங்களை தேடுங்கள். தமிழினத்திற்கு ஒரு தலைவன் தோன்றிவிடாமல் உங்கள் வளங்கள் அத்தனையும் பாவித்து வெற்றிகொண்டீர்கள் இன்றுவரையில் அந்த வெற்றியை கொண்டாடத் தவறியதுமில்லை. அந்த வெற்றியால் தமிழினத்திற்கு எந்த விடிவையும் நீங்கள் கண்டதும் இல்லை. பயங்கரமான குற்றச்சாட்டுகளை சுமக்காது ஒருவன் தலைவனாக முடியாது. உலகின் முதல்தர பயங்கரவாதியாக குற்றம்சாட்டப்பட்ட நெல்சன் மண்டேலா அவர்களைத்தான் இன்று பெரும் தலைவனாக உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது. தமிழன் வீரத்தை இன்றைய நிலையிலும் உலகுக்கு அறிவித்த மாபெரும் வீரனான மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனையே நானுட்பட பலரும் தமிழினத் தலைவனாக ஏற்றுக்கொண்டுள்ளோம். அவன் இருந்தாலும் இல்லையென்றாலும் அவன் வழியிலேயே ஒரு தலைமையை தேட விளைகிறோம். இதனை நீங்கள் மறுத்தால் தமிழினத்திற்காக நீங்கள் கண்டுள்ள தலைவன் யார் என்பதையாவது அறியத்தாருங்கள்.
உங்களுக்கு உண்டியல் வறண்டதால் இன்னுமொரு மாயக்கண்ணன்
தேவைப் படுகிறது. இலங்கை மக்கள் அமைதி விரும்பியதால் செல்லடியும் குண்டுவீச்சு
விமானங்களும் இல்லாதுதொழிந்து போயிற்று. தமிழன் என்கிற பெயரில் அரசியல் கதைக்காமல் இருப்பதே தமிழனுக்கு அழகு. இலங்கையரசியலில் தலையிடுவதற்கு புலம்பெயர் தமிழ்புண்ணாக்குகளுக்கு எந்த அருகதையும் இல்லை.
அப்படி ஏதாவது கதையிருக்குமென கருதினால் நீங்கள் குடியிருக்கும் உள்ஊர் அரசுடன் மோதிப்பாருங்கள்!. அது தான் முடியாதே! உண்டியல் தான் குலுக்க முடியாதே! கொத்துரொட்டி தான் கொத்த முடியாதே!!.
ஈழத்தமிழனின் வாழ்வை கடைப்பண்டமாக்கி தெருவில் போட்டு விற்பனை செய்தவன் புலம்பெயர்தமிழனே! இவர்கள் ஒரு தலைவனை தேடுகிறார்களாம்? இந்த கதையை யாருக்கு சொல்லி அழுவது?.
BBCSinhala.com | Sandeshaya | US grants GSP with retroactive effectwww.bbc.co.uk/sinhala/…/111022_us_gsp.shtml
பொறியில் பாலாடைக்கட்டியை வைத்தால் பதுங்கியிருக்கும் எலிகள் அதனை உண்பதற்கு மறைவிடத்திலிருந்து வெளியே வருவதுபோலவே இனியொருவில் தலைவன் பிரபாகரன் பெயரை இட்டவுடன் தமிழினத்தைக் கருவறுக்கும் இனத்துரோகிகள் தங்களை இனம்காட்டி வெளியே வருகிறார்கள்.
தமிழன் வீரத்தை இன்றைய நிலையிலும் உலகுக்கு அறிவித்த மாபெரும் வீரனான மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனையே நானுட்பட பலரும் தமிழினத் தலைவனாக ஏற்றுக்கொண்டுள்ளோம். னகைபுக்கிடமான கருத்து, அவன் மாபெரும் வீரன் என்றால் ஏன் கோவனம் கட்டி எதிரியின் காலில் விழுந்தார், அவன் மாபெரும் கிரிமினல், துரோகி, மனித இனத்தின் அவமானம், மனித்னாக பிறக்க தகுதி அற்ற பிறப்பு, தமிழினத்தின் அவமானம், அவனின் அப்பா கேரளாவில் இருந்த்திருந்தால் பிரபாகரன் கேரள சினிமாவில் வில்லன்நடிகனாக வந்திருப்பான்
அதுதானே வீரன்! துணைஇராணுவக்குழுவாக இருக்கணும் சிங்களத்திற்கும் இந்திக்கும் வாலாட்டணும். முடிந்தால் டக்ளஸ் கருணா மாதிரி சிங்களத்தின் பிரதான பெண்சப்ளையர்ஸ் ஆக இருக்கணும். சொல்லப்போனால் உங்களை மாதிரி இருக்கணும். அதுதான் வீரத்தின் (???) எடுத்துக்காட்டு.
கோமணத்தால் மறைக்க எதுவுமில்லாது நீங்கள் இருக்கிறீர்கள் போலுள்ளது. அதுதானே கோமணம் கட்டியவர்கள் மீது கடுப்பா இருக்கிறீர்கள்.
கோமணம் கட்டியவர் மேல் யாருக்கும் கடுப்பு வராது நிர்மலன். கோமணத்தை தாங்கள் விளங்கிய விதமே பிழையானது.
கோணமணம் கூட புனிதமாகத்தான் இன்றும் எம்முள்ளும் கருதப் படுகிறது. இந்த கோமணம் இல்லாது போனால் பக்தி பரவசத்தால் விளைந்த பட்டினத்தார் பாடல்கள் சுண்ணத்து பாக்கள் ஏது?. வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆரம்பம் முதல் வெள்ளைக் கொடி பிடிப்பதற்கு முன்பு பட்டினத்தார் கோவணத்தை அணித்திருந்தால் நாமும் கார்த்திகை 26-ல் தீர்த்த காவடி எடுத்திருப்போம்.
இந்த யாழ்மேட்டுகுடி அரசியல் தஞ்சம் கேட்டு வன்னிக்காட்டுக்குள் புகுந்து கொண்டு புலம்பெயர் லும்பன்குழுவின் உதவியால் வன்னிமக்களை பட்டினத்தார் நிலைக்கு கொண்டுவந்ததில் தான் நாம் தீராத வெறுப்படைகிறோம்.
எந்தநேரமும் வெடித்துசிதறும் உடம்பு. இடுப்பில் துப்பாக்கி. புடைசூழ ஆயிரம் தற்கொலைப் போராளிகள். மறைவதற்கும் பதுங்குவதற்கும் பத்துக்கு மேற்பட்ட பங்கர்கள். இந்த நிலையில் வெள்ளைக்கொடியை கண்டதும் கோவணம் கட்டியதில் எமக்கு கோவம். மற்றும் படி கோவின்… மணம்.. உயர்ந்த மணம் அதில் எமக்கு எந்த கருத்து வேறுபாடுமில்லை.
தலைவன் பிரபாகரனுக்கு கோவணம் கட்டி அழகுபார்த்த வீரனே உன் அரிய செயலைத் தமிழில்பாட ஔவைப்பிராட்டி இன்றில்லையே. உங்கள் கூட்டத்தின் தலைவன் யார் அவரை அறியத்தாருங்கள் என்று சந்திரன் ராசாவையும் கேட்டுப்பார்த்து விட்டேன், அவர் வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு என்கிறார். நீங்களாவது உங்கள் தலைவன் யார் என்று அறியத்தாருங்கள். ஒருவேளை அமெரிக்கா இராஜதந்திர அங்கீகாரத்தை வழங்கினால் அதனை ஏற்றுக்கொள்ள ஒரு தலைவன் வேண்டுமல்லவா.