ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்கூட்டமைப்பின் முடிவு பெரும்பாலும் இன்று நண்பகல் அளவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது அநேகமாக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாகவே அமையும் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் தமிழ்கூட்டமைப்பின் ஐந்துக்கும் குறையாத நடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த முடிவை எதிர்ப்பார்கள் என்று அறியப்படுகின்றது.
ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக் கும் முடிவைத் தமிழ்க் கூட்டமைப்பு இன்று எடுத்து அறிவித்தாலும், அது தொடர்பில் கூட்டமைப்புக்குள் உள்முரண்பாடு நீடிக்கும் என்று தெரிகின்றது.
இதற்கிடையில் நேற்று மதியம் தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சென்று எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத்பொன் சேகாவை சந்தித்தமையை அடுத்து, தமிழ்க் கூட்டமைப்பு பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவை எடுத்துவிட்டது என்ற செய்தியை பொன்சேகாவின் தேர்தல் அலுவலகம் பகிரங்கமாக வெளியிட்டுப் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. பல இணையத்தளங்கள் இச்செய்தியை விசேட தகவலாக அறிவித்தன. எனினும் தமிழ்க் கூட்டமைப்பின் தலைமைகள், இவ்விடயத்தில் இறுதி முடிவு இன்று நடக்கும் கூட்டமைப்பின் கூட்டத்தில்தான் எட்டப்படும் எனத் திரும்பத் திரும்பத் தெரிவித்தன.
“எமது கூட்டமைப்பில், அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் மட்டத்தில் பொன்சேகாவையே ஆதரிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது. எனினும் நாடாளுமன்றக் குழுவில் அம்முடிவு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் வரை அதை வெளியிடுவதில்லை என்று தீர்மானித்திருக்கிறோம்.” எனக் கூட்டமைப்பின் தலைவர் ஒருவர் கூறினார். சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவைக் கூட்டமைப்பு எடுத்தாலும் கஜேந்திரகுமார், கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன், சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோர் அந்த முடிவை எதிர்ப்பதில் தீர்க்கமாக இருக்கின்றனர் எனத் தெரியவந்தது.தமிழ்க் கூட்டமைப்பின் நேற்றைய காலை அமர்வில் கஜேந்திரகுமார், பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரன் ஆகிய எம்.பிக்கள் இந்தத் தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என வாதிட்டபோதும் அதை மறுத்து தமிழ் வேட்டபாளரான சிவாஜிலிங்கத்தை ஆதரிக்கும்படி ஸ்ரீகாந்தா வற்புறுத்தினார்.
எனினும் தமிழ் வேட்பாளரை ஆதரிக்கும் தனது திட்டத்துக்கு பிறரின் ஒத்துழைப்பு ஏதும் இல்லை என்பது அங்கு அவருக்கு ஓரளவு புரிந்தும், மாலையில் கூட்டத்துக்கு வந்து சேர்ந்து கொண்ட சிவாஜிலிங்கத்தையும் ஒன்று சேர்த்து, தேர்தலைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்ற அணிக்குத் தாவினார் ஸ்ரீகாந்தா எனக் கூறப்பட்டது.
ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம் போன்றோரின் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை வயதில் மூத்தவரான கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுத்தலைவர் சம்பந்தன் பெரும் பொறுமையுடன் சகித்துக் கொண்டமை தம்மை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது என்றார் கூட்டத்தில் கலந்து கொண்ட மற்றொரு எம்.பி ஒருவர்.
“தம்மீது சுமத்தப்பட்ட வரலாற்றுப் பொறுப்பை எப்படியும் ஒப்பேற்றித் தமது இனத்துக்குரிய கடமையை செவ்வனே செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவு அவமான, அவமதிப்புக்களையும் சம்பந்தர் பொறுமையாகத் தாங்கிக் கொண்டார் என நினைக்கிறேன்” என்றார் இந்த எம்.பி. “ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம் போன்றோரை இந்தக் கூட்டத்துக்கு அனுமதித்த தமது தவறுக்காக அவர் இப்படி வாங்கிக் கட்டிக் கொண்டார்” என்றும் அந்த எம்.பி. கூறினார். “கூட்டமைப்பின் வரலாற்றுக் கடமையை இப்படிக் குழப்ப முயன்றவர்களை தமிழ் மக்கள் உரிய முறையில் கவனிப்பார்கள்” என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டார்.
இதற்கிடையில், சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவை தமிழ்க் கூட்டமைப்பு எடுத்தால், தமிழர்களுக்கு அது இழைத்த வரலாற்றுத் தவறாகிவிடும் என்றுஆளும் தரப்பு குறை சொல்லியிருக்கிறது. இந்த வரலாற்றுத் தவறுக்காகக் கூட்டமைப்பு பின்னர் அதிகம் வருந்த வேண்டியிருக்கும் என்று ஆளும் தரப்பின் தலைவர் ஒருவர் குறிப்பிட்டார். அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் பிரேரணை குறித்து ஆராய்வதற்காக நாடாளுமன்றம் இன்று கூடவிருக்கையில் கூட்டமைப்பின் தீர்மானம் பற்றிய விவகாரம் அங்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
We have seen those who promised to end corruption end up as corrupt. It is up to a competent court to convict a wrongdoer and it is not the intention of this series of articles to call anyone corrupt and make decisions. Instead what is intended is to shed some light based on third party generated, non-political evidence, widely available to readers, on possible corruption and collusion in military purchases. This evidence is not the creation of any interested party trying to defame anyone. In fact it has been created in most instances by the actors themselves! That means the accuracy, objectivity and relevance of these pieces of evidence remain very high. Same goes for third party evidence. Readers are free to do their own investigations into these independent sources. Newspapers may be burnt, media men may be killed, they can be assaulted and intimidated, they can be silenced, they can be given false news; but internet based evidence cannot be so easily erased.
Soliciting donations from suppliers is not considered good practice even for a customer of that supplier. In the case of suppliers of the Ministry of Defence or the Sri Lanka Army, the customer is either the Ministry of Defence or the Sri Lanka Army. Officers of the Army are not even customers and soliciting donations from the suppliers of the Ministry of Defence or the Sri Lanka Army is a corrupt act in itself. That’s not all. If they beg for donations for their own projects not directly owned by either the Ministry of Defence or the Sri Lanka Army, from suppliers of the Ministry of Defence or the Sri Lanka Army, it is an even lower act of corruption.
The Army Commander has a say in direct purchasing up to a limit. In addition he also holds a high position in Lanka Logistics and Technologies (Pvt) Ltd. Unfortunately Sarath Fonseka had both these privileges and he exploited it for unscrupulous ends.
Senehasa Special School
Senehasa Special School for special needs children is a project pioneered by Sarath Fonseka and Anoma Fonseka while the former was the army commander and when the latter was holding high office in the Army Seva Vanitha Unit (SVU). They approached a Pakistani supplier to the Sri Lanka Army for donations. And they succeeded in getting a donation of a million rupees. Obviously a supplier to Sri Lanka Army would make a donation if he is pre-selected for future business. Otherwise there is absolutely no reason why a Pakistani defence supplier would donate for a charitable project in Sri Lanka.
The following has been quoted from the website.
http://www.senehasa.org/projects.php
“As an initiative taken by Brigadier N.U.M.M.W. Senanayake, the Gulf Maritime Services Pakistan (Pvt) Ltd of Karachchi, donated Rs one million to the Seva Vanitha Army Branch to be utilised for the Senehasa Special School.
The cheque was handed over to Mrs Anoma Fonseka at the presence of the Commander of the Army Lieutenant General Sarath Fonseka by the special representative of the company Mr. Nisal Yousuf Ahmed 20th February 2009at the Army Headquarter. Brigadier N.U.M.M.W. Senanayake and Colonel A.K. Suraweera were also present on the occasion. The representative of the company pledged further support for the project in the future.”
Gulf Maritime Services Pakistan (Pvt) Ltd
Established in 1984 as shipping agents and then gradually developed into trade, chartering and transportation projects and defense cargoes. Also logistics and freight forwarding business carried out through sister company.”
http://www.tradeboss.com/default.cgi/action/viewcompanies/companyid/301787/
Along with Ceylon Shipping Corporation, Gulf Maritime Services Pakistan (Pvt) Ltd was involved in shipping weapons Sri Lanka army purchased from Pakistan. Canvassing for donations from this defence supplier is hence wrong and must be investigated.
த.தே.கூ இன் முடிவு அரசியல் அடிப்படையில் மிகவும் முட்டாள்தனமான முடிவு….
காலம் காலமாக வாக்குறுதிகளை நம்பி ஏமாந்தும் இன்னும் பாடம் கற்காமல் இருப்பது மிகவும் கவலைக்கிடமானது…
இந்த “மா” மனிதர்களுக்கு “மாமனிதர்” பட்டம் கொடுக்கு அவர்களுடைய முன்னால் தேசிய தலைவர் இல்லாதாலையே இவ்வாறான ஒரு முடிவுக்குச் சென்றுள்ளனர்…
சிறிலங்காவின் இரண்டும் தேசிய கட்சிகளும் இனவாத கட்சிகளே…
இவர்களை ஆதரிப்பதால் எப்பொழுதும் ஒரு நன்மையும் யாருக்கும் கிடைக்கப்போவதில்லை…
ஒரு மாற்றத்திற்காக கூட புதிதாக சிந்திக்க மறுக்கின்றனர் இந்த பழைமைவாதிகள்….
தமிழ் பேசும் மனிதர்களின் அரசியல் உரிமைகள் தொடர்ந்தும் ஊரமாக ஓலிக்கவேண்டுமாயின்…
தமிழ் பேசும் மனிதர்கள் தமது முதல் வாக்கை சிவாஜிலிங்கத்திற்கும்
இரண்டாவது விருப்பு வாக்கை விக்கிரமபாகுவிக்கும் அளிப்பதே ….
ஒரு மாற்றம்விருப்புவோரின் தெரிவாக இருக்கும்…
இதேபோல் சிங்களம் பேசும் மனிதர்கள்….
ஒரு மாற்றத்தை விரும்புவர்களாயின்….
தமிழ் பேசும் மனிதர்களின் அரசியல் உரிமைகளை மதிப்பார்களாயின் ….
தமது முதல் வாக்கை விக்கரமபாகுவிற்கும்….
இரண்டாவது விருப்பு வாக்கை சிவாஜிலிங்கத்திற்கும் அளிக்கவேண்டும்….
இந்த வாக்குகள்…இரண்டு இனவாத தேசிய கட்சிகளை நிராகரிக்ககும் வாக்குகளாகவே கருதப்படும்…
வெல்லப்போவது மகிந்தவே என்பது உறுதியானது…
இதில் தமிழ் பேசும் மனிதர்கள் தமது அரசியல் உரிமைகளுக்காக தொடர்ந்தும் ஊறுதியுடன் நிற்கின்றார்கள் என்பதை வெளிப்படுத்துவதே இந்த தேர்தல் மூலம் நிலைநிறுத்தப்படவேண்டும்….
இல்லையேல்…
தமிழ் பேசும் மனிதர்கள் மீண்டும் அரசியல் அடிப்படையில் மண்கவ்வுவதை யாராலும தடுக்கமுடியாது….
நன்றி
மீராபாரதி
அதிகார மாற்றம் என்ற சிந்தனையை மேற்குலகம் போதித்து விட்டது மட்டுமல்ல, நடத்திக்கொண்டிருக்கிறது. வேறு வழியில்லை என்பதை விட,அந்த இளைஞர்களை காப்பாற்றுவது,முகாம்களை அகற்றுவது,மக்களை மீள்குடிஏற்றுவது,திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுப்பது போன்ற விடையங்கள் பற்றி , களத்தில் நிற்கிறவனுக்குத்தான் தெரியும் தீர்மானங்களை எடுக்க.பிழை,பிழை என வாசிப்பதை விட,அதன் முடிபில் என்ன நல்ல முனைப்பை ஏற்படுத்தலாம் என்று செயற்படுவோம்,வீழ்ந்தவனை நிமிர்த்தி விட முனைவோம்.பின்பு இலட்சியங்கள் பேசுவோம்.
இங்கிலாந்தில் இரண்டு கட்சிகலும் ஏலைகலுக்கு எதுவும் செய்வதில்லை ஆனால் மக்கல் வாக்கலிக்காமல் இருப்பதில்லை.இலங்கையில் மகிந்த வர மாட்டார் அவருக்கு மனவியாதி வர இருப்பவர் சரத் பொன்செகா.அவர் ஒன்ரும் செய்ய மாட்டார் ஆனால் மகிந்தாவை மருத்துவ மனை அனுப்புவரர் அது அவருக்கு நலம் தரும் அத்தோடு இலங்கை மக்கலுக்கும்நல்லது.
ஆகவே அன்பார்ந்தவர்கலெ அய்யா சம்பந்தர் அணை நம் வீடு வாசல்,வயல் வரப்பெல்லாம் காக்கும்.சோராதிர்.
சிவாஜி லிங்கம் மகிந்தரின் கூட்டாளி. கருணாரத்னவும் சிவாஜி லிங்கமும் பதிய கூட்டாளிகள். கணக்கின் மிகுதியை நீங்களே போட்டுக் கொள்ளுங்கள்.
வாக்குச் சீட்டுக்களைப் பழுதாக்குவது உரத்த குரலில் பேசுவதாகும்.