இடிந்தகரை கூடங்குளம் கடற்கரையில் போலீசு நடத்திய தடியடித் தாக்குதலைக் கண்டித்து கூடங்குளத்தில் இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. சுமார் 5000த்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடங்குளம் நகரில் போராடி வருகின்றனர். இவர்களை ஒடுக்க வந்த போலீசு தற்போது துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். துப்பாக்கி சூட்டையும் மீறி மக்கள் போலீசை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிகிறது. தூத்துக்குடியில் பாசிச ஜெயா ஆட்சியின் கொடுர தாக்குதலைக் கண்டித்து சில பேருந்துகள் எரிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. அதே போன்று தென்மாவட்டங்களில் உள்ள அனைத்து மீனவக் கிராமங்களிலும் பெரும் கலவரம் எழுந்திருக்கிறது. அடக்குமுறைக்கு அஞ்சாத மக்கள் சக்தி இந்த அணுமின்நிலையத்தை விரைவில் மூடப்போவது உறுதி.
______________________________
– வினவு செய்தியாளர்கள், கூடங்குளம்
___________________________________________
சீமான் திருமுருகன் போன்ற இனவாதிகள் எங்கே?
மக்கள் அணு மின் நிலையத்தை மூடிவிட்டு அப்புறம் என்ன செய்வார்களாம்?
தமிழகத்தில் மின்சாரம் இல்லை என்று போராடுவார்களா?
அனல் மின் நிலையம் இல்லை.புணல் மின் நிலையம் இல்லை.எதிர்காலத்தில் இவை இரண்டும் நமக்கு தமிழகத்திற்கு சாத்தியமில்லாத திட்டங்கள்.அப்படி இருக்க வேறு என்ன மாற்று யோசனை என்ன தருகிறீர்கள்.?
கடந்த இருபது வருடமாக நடந்து கொண்டிருந்த கட்டுமான பணிகளின் போது இந்த தியாகிகள் எங்கே போயிருந்தார்கள்.
வாழ்க வளமுடன்.
கொச்சின் தேவதாஸ்
முள்ளிவாய்க்காலில் விட்டதவறை இடிந்தகரையில் இட்டு நிரப்புங்கள்..
இப் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துவதை தவிர வேறு ஒரு வக்குமில்லை எம்மிடம்.
வாழ்க… வெல்க…
மக்கள் போராட்டம் நிச்சயம் வெல்லும், இவ் வெற்றியின் ஊடாக பிரியாணி அரசியல்,ஜிகினா சினிமா,பிதற்றல் ஊடகங்கள்,ஈழக்காவடிகள்,தேவலோக கனவுகள் எல்லாம் தவுடு பொடியாகும்.
Sinnachchi, only in Terre Haute, Indiana, USA, there is a Federal Prison for Capital Punishment in the whole of the United States of America.