கூடங்குளம் அணு மின் உலையை எதிர்த்து மாவட்ட மக்கள் இடிந்தகரை எனும் இடத்தில் மிகப் பெரும் போரை தொடங்கி உள்ளனர். 127 பேர் இன்று 6 வது நாளாக சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு உள்ளனர்.இவர்களுக்கு ஆதரவாக இருபது ஆயிரம் பேர் தொடர் உண்ணவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும் காலையில் வந்து இரவில் ஊருக்கு திரும்பி மீண்டும் காலையில் வந்து விடுகின்றனர்.பகல் முழுவதும் ஆறு நாட்களாக 20000 பேரும் பட்டினி கிடக்கின்றனர்.பள்ளி மாணவ,மாணவியர் சீருடையுடன் பள்ளியை புறக்கணித்து வந்து முழக்கம் போடுகின்றனர்.தமிழக வரலாற்றில் கண்டறியாத போராட்டம் இது என்று அங்கு சென்று பார்த்த பின் தான் உணர்ந்தேன்.வெளி உலகில் இப்போராட்டத்தின் பிரம்மாண்டம் மூடி மறைக்கப்பட்டுள்ளது.ஊடகங்கள் அரசுக்கு ஆதரவாக இருந்துகொண்டு சரியாக செய்தி வெளியிட வில்லை.சமூக உணர்வாளர்கள் ஒவ்வொருவரும் பங்கேற்க வேண்டிய போராட்டம் இது.இது குறித்து இணையதளம், கைபேசிகளிலும் போதுமான பிரச்சாரம் இல்லை.உடன் இச் செய்தியை அனைவருக்கும் forward செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இது கூடன்குள மக்களின்வாழ்வியல் பிரச்சனை மட்டுமல்ல,தமிழக மக்களின் உயிர் பிரச்சனை மட்டுமல்ல,மனித இனத்திற்கே சவாலான பிரச்சனை என்பதை கருத்தில் கொண்டு போராடும் மக்களுடன் உறுதியாக கை கோர்ப்போம்.அனைவரும் சென்று வருவோம்.தமிழகம் முழுவதையும் ஆதரவாக்குவோம். தொடர்புக்கு:உதயகுமார் 9865683735 ,புஷ்ப ராயன் 9842154073 ,வைபா 9443962021
கூடங்குளம் அணு மின் உலையை ஒட்டுமத தமிழ் இனதெற்கே ஆபத்து என்று சொல்லுகிறார் தமிழ் நாட்டில் வட மாவட்டத்தில் அணு மீன் நிலையம் ஒன்று உள்ளது வாடா மாவட்ட மக்கள் நங்கள் இதற்கு அஞ்சவில்லை சுமா பிதியை கேளபுகிறார் இவரு
உலகத்தில் உள்ள அணுமின்யுலை ஆலைகளை பூட்டித் திறப்பு எடுத்துவிட்டார்கள் கூட்டாம்குளம் ஒண்று தான் பாக்கியிருக்கிறது போன்று காட்சிப் படுத்தல் நகைப்புக்கிடமானது.
இந்த நவீனயுலகத்தில் தேவைகள் பெருகியிருக்கிறது.அதற்கேற்ற மாதிரி நாமும் வளர்ந்தாக வேண்டும். இல்லையேல் இன்னும்மின்னும் கீழ்நிலைக்கே எம்மைக் கொண்டு செல்லும். முடியுமான வரை பயனைப் பெறுவதும் பாதுகாப்பை உத்தரவாதம் செய்வதுவே தற்போதைய நிலைக்கு அவசியமானது. கூட்டாங்குள மின்னுலையால் தான் கூட்டாங்குளத்திற்கு ஆபத்து வருமென்று இல்லை. வேறுநாட்டில்லுள்ள மின்னுலையால் கூட ஆபத்து வரலாம்.
விவசாயிகளுக்கு போய்சேரும் தண்ணீரை கேரள-தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தமது அரசியல்நோக்கத்திற்கு எங்கோவோ கொண்டு சென்று நிறுத்துகிற மாதிரி இவற்றிக்கும் அந்தவிதி வந்துவிட வேண்டாம். தவறான வழியில் போராட்டத்தை வழிநடத்தி செல்வது. கண்டிக்கத் தக்கது.
கருத்தைக் கருத்தால் தான் அடித்து நொருக்கி வலுவிலக்கச் செய்யவேண்டுமே ஒழிய ஒருகருத்தை- எழுத்தை அழித்து இல்லாமல் செய்வதால் மட்டும் ஈயேறப்போவதில்லை. வெளியிடப்பட்ட கருத்து அழிக்கப்பட்டு இல்லாமல் செய்யப் பட்டதிற்கு “இனியொரு” வுக்கு என்ன சம்பந்தம் உடன்பாடு உண்டு என்பதை தெளிவு படுத்து வேண்டும்.இல்லை நான் தான் தப்பிதமாக கற்பனை செய்கிறேனா? எது உண்மை??.
Lal Krishna Advani – My Man – Sindhi.
I wanted you all to see how he pronounced Koodanakulam. Tamil is a Stem Language like Sanskrit and Latin. Somebody must have told him that General Rohan Daluwatte was at Mankulam.