கூடங்குளம் அணு உலை – வெள்ளை அறிக்கை – ஏன் தேவை ?கூடங்குளம் அணு உலையில் வால்வுகள் பழுதடைந்து விட்டன. அதில் சிலவால்வுகள் மாற்றப்பட்டுள்ளன. பழுது பார்க்கப்பட்டன, சில வால்வுகள் புதிதாக மாற்றப்பட்டன. கடந்த 2012 டிசம்பர் மாதம் கூடங்குளம் அணு உலையில் நடந்த சோதனையில், வால்வுகளை தயாரித்த நிறுவனத்தின் கணிப்புப்படி/ அவர்கள் சான்றளித்தப்படி
அந்த வால்வுகள் சரியாக செயல்படவில்லை. வால்வுகள் திறக்கப்பட்டன. ஒன்றுக்கும் மேற்பட்ட, புதியதாக பொருத்தப்பட்ட வால்வுகள் முறையாக செயல்படாத காரணத்தால், அவற்றின் தயாரிப்பை,அவற்றின் தரத்தை சந்தேகப்பட வேண்டியுள்ளது. அணு உலையை இயக்கப்போகும் நேரத்தில் இத்தகைய தரமற்ற வாழ்வுகளின் செயல்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன, அங்கே பொருத்தப்பட்டுள்ள ஒவ்வொரு உதிரிபாகங்களின் தரமும் தரக்குறைவாகவே இருப்பதை நாம் அறியமுடிகிறது. ஒட்டு மொத்தமாக பார்கின்ற போது, இந்த அணு உலையின் பாகங்களை விற்றவர் மீதும், அவற்றை வாங்கியவர்கள் மீதும் மிகவும் மோசமான, ஆழமான பிரச்சனைகள்
,சிக்கல்கள், தவறுகள் நடந்திருப்பதாகவே தெரிகிறது. ரஷ்யாவின் அணுசக்தி நிறுவனங்கள் மீது தற்போது நடந்து கொண்டிருக்கும் ஊழல் குற்றச் சாட்டு புலன் விசாரணை, கூடங்குளம் அணு உலையின் கோளாறுகளுக்கு, குற்றச் சாட்டு களுக்கு புதிய திருப்பத்தை, விளக்கத்தை கொடுக்கும். கடந்த பிப்ரவரி 2012, ஆம் ஆண்டு KGB யின் கீழ் இயங்கும் (FSB – Federal Security Service) உளவுத்துறை அதிகாரிகள் ஷியோ போடோல்ச்க் (Zio–Podolsk) என்ற ரோசாட்டம் நிறுவனத்தின் கிளை அமைப்பின் கொள்முதல் செய்யும் இயக்குனர் திரு.செர்கை ஷுடோவ்வை ஊழல், திருட்டுத்தனம் மற்றும் ஏமாற்றுதல் போன்ற குற்றச் சாட்டுக்காக கைது செய்துள்ளது. ஷியா போடோல்ச்க் என்பது உலகெங்கும் இருக்கும்/ஓடிக்கொண்டிருக்கும் ரஷ்ய அணு உலை களுக்கு தேவைப்படும் நீராவி இயந்திரங்களையும் (Steam Generators) இன்னும் சில முக்கிய அணு உலை பாகங்களையும் தயாரித்து விற்பனை செய்யும் ரஷ்யக் கம்பெனி. ரஷ்யாவின் (FSB – Federal Security Service) உளவுத்துறை அதிகாரிகள் தரம் குறைந்த இரும்புத் தகடுகளை விற்றதாக திரு. செர்கை ஷுடோவ்வின் மீது பகிரங்க குற்றம் சாட்டியுள்ளனர். ரஷ்யாவின் ஊடகச் செய்திகள் குறிப்பாக ஊடக நிறுவனமான ரோஸ்பால்ட் (Rosbalt) குறிப்பிடுவது போல, பல்கேரியா, ஈரான், சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் கட்டப் பட்டுள்ள ரஷ்ய அணு உலைகளுக்கு உக்ரேனியாவில் கிடைக்கும் தரமற்ற, விலை குறைந்த இரும்புத் தகடுகளினால் தயாரிக்கப்பட்ட இயந்திரங்களை விற்றதாக ஷியா போடோல்ச் கம்பெனியின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கூடங்குளம் அணு உலையில் பழுதடைந்த இந்த வால்வுகள் ஷியா போடோல்ச்க் நிறுவனத்தின் மூலம் ரஷ்யாவில் இருந்து நமக்கு விற்பனை செய்யப்பட்டதா? அல்லது இந்தியாவிலே வாங்கப்பட்டதா என்பது உடனடியாகத் நமக்குத் தெரிய வில்லை. இத்தகைய தரமில்லாத பழுதடைந்த வால்வுகள் மற்றும் பிற (உதிரி) பாகங்கள் ஷியோ போடோல்ச்க் (Zio–Podolsk) என்ற ரோசாட்டம் நிறுவனத்தின் mகிளை அமைப்பின் மூலமாக வாங்கப்பட்டனவையா என்பதை இந்திய அணுசக்திக் கழகம் (NPCIL) ஒளிவு மறைவின்றி, வெளிப்படையாக அதன் உண்மையை நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும். தெளிவுபடுத்த வேண்டும். ரஷ்யா நாட்டின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ள இத்தகைய மோசமான ஆபத்தான, மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கக்கூடிய, பாதிப்புஏற்படுத்தக்கூடிய உண்மை நிலவரங்களை, நாட்டு மக்களுக்கு சொல்லாமல் இந்தியஅணுசக்திக் கழகம் (NPCIL) வேண்டுமென்றே, திட்டமிட்டே மூடி மறைப்பதாகவே தெரிகிறது.
இந்திய அரசாங்கம் ஷியோ போடோல்ச்க் (Zio–Podolsk) என்ற ரோசாட்டம் நிறுவனத்தின் கிளை அமைப்பின் மூலம் கூடங்குளம் அணு உலைக்கு வாங்கப்பட்ட இயந்திரங்கள், மற்ற பாகங்கள் மீது கண்டிப்பாக ஒரு புலன் விசாரணை நடத்தியிருக்கவேண்டும். ஆனால், அப்படி விசாரணை செய்வதற்குப் பதிலாக, இந்திய பிரதமர் அலுவலகம், ரஷ்ய உதவி மூலம் கட்டப்பட்டு வரும் கூடங்குளம் அணு உலையில் விபத்துகள், பேரிடர்கள் எதுவும் நடந்தால், அதற்கு ஏற்படும் செலவை, இழப்பீட்டை இந்திய அரசாங்கமே பொறுப்பேற்றுக் கொள்ளும் என்ற
உத்தரவாதத் தை ரஷ்யாவிற்கு தொடர்ந்து கொடுத்து வருகிறது. இத்தகைய ஷியோ போடோல்ச்க் நிறுவனத்தின் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ரஷ்யாவின் செய்தி ஊடகமான ரோஸ்பால்ட் (Rosbalt) மட்டுமே தொடந்து ரஷ்யமொழியில் சொல்லி வருகிறது. உலகத்தில் உள்ள வேறு எந்த ஆங்கில ஊடகங்களும் இந்த ஊழல் குறித்து பேச மறுக்கின்றன என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. இது தவிர, இந்திய அணு சக்தி துறையில் ( DAE) பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகளால் சொல்லப்பட்டு 2011 இல் PTI செய்தி நிறுவனத்தின் வழியாக, வெளிவந்த செய்திகள் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கூடங்குளம் அணு உலை 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதத் திலே செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால்,அணு உலைக்கு பல கிலோ மீட்டர் தூரத்திற்கு மின் இணைப்பை கொடுக்கும்கேபிள்கள் பதிக்கப்பட்ட பிறகு, அணு உலையை சுற்றி இரண்டு மடங்கு அணுஉலையின் மையப்பகுதியை மூடும் பணிகள் நடந்து முடிந்த பிறகு, அவைகள்காணாமல் போனதாக கூடங்குளம் அணு உலையை வடிவமைத்தவர்கள் கண்டுபிடித்துள்ளனர் என்று அந்த PTI செய்தி குறிப்பிடுகிறது. அணு உலையின் முக்கியமான பாகங்கள் ரஷ்யாவில் இருந்து சரியான நேரத்திற்கு பெறப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டாலும், முன்னரே நீண்ட தொலைவுக்கு பதிக்கப்பட்ட மின் கேபிள்களை தொலைந்து போன காரணத்தால், அதை சமாளிப்பதற்காக, கூடங்குளம் அணு உலைபாகங்களை வரிசையாகப் பெறுவதற்கு பிரச்சனைகள் இருந்ததாக பின்னாளில் சொல்லப்பட்டது என்று அந்த பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர். அதனால், அந்த டோம்கள் (கூண்டுப்பகுதி) முதலில் பெறப்பட்டதாகவும், பின்னர் கேபிள்கள் கிடைக்கப் பெற்றதாகவும் சொல்லப்பட்டது. அதே, PTI செய்தி நிறுவனத்தின் செய்திகளை மேற்கோள் காட்டி, இந்த பிரச்சனையானது, அணு உலையின் மையக் கருவில் (Dome – கூண்டு) இருந்து அணு உலையின் பிற பகுதி கட்டிடங்களுக்கு, கட்டுப்பாட்டு அறைகளுக்கு சென்றுசேரவேண்டிய, காணாமல் போன மின் கேபிள்கள், பின்னர் அதை மீண்டும்பதிப்பதற்காக, அந்த அணு உலையின் மையக்கரு அமைந்துள்ள, அந்த காங்கிரீட் சுவரில் மீண்டும் துளைகளை ஏற்படுத்தி, அவற்றை உடைத்து, சொடுக்கி அறை மையத்தில் (Switch Yard) இருந்து அணு உலையின் மையக்கருவிற்கு மீண்டும்மின் கேபிள்கள் பாதிக்கப்பட்டு மின் இணைப்பு கொடுக்கப்பட்டது என்று அந்தசெய்தி ஊடகம் தெரிவித்தது. இது மிகவும் ஆபத்தான செயல்பாடாகும்.அணுஉலையில் இரண்டாவது முறை (நீர் பரிசோதனை) மீண்டும் சோதனை என்பது வேறுஎங்கும் நடக்காத ஒன்று. அது மட்டுமல்ல, அணு உலையின் மையக்கருவை, அதன்காங்கிரீட் சுவரை இடித்து விட்டு மீண்டும் அந்த டோமை (கூண்டை) ஒட்டுப்போடுவது என்பது உலக அணுசக்தி வரலாற்றில் நடக்காத ஒன்று. கேள்விப்படாதஒன்று.கடந்த டிசம்பர் 2012 அன்று நடந்த முதல் சோதனை, தற்போது இரண்டாம் முறைமீண்டும் நடத்தப்படும் முழு ஹைட்ரோ போன்ற சோதனையின் அனைத்து உண்மைகளையும்வெளிப் படையாக அறிவித்து, அந்த சோதனை முடிவுகளின் விடைகளை இந்திய
அணுசக்தி நிறுவனம் சுதந்திரமான பொது மக்கள் ஆய்வு உட்படுத்த வேண்டும்அதன் பிறகு, மேற்சொன்ன குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் முழுமையான,முறையான புலன் விசாரணைகள் செய்யப்பட்டு மக்களுக்கு உண்மையை சொல்ல வேண்டும். ஷியோ போடோல்ச்க் (Zio–Podolsk) நிறுவனத்தின் மூலம் பெறப்பட்ட அனைத்து பாகங்களையும், அதன் தரத்தையும் ஆய்வுக்கும், விசாரணைக்கும்
உட்படுத்தி நாட்டு மக்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டும்.கூடங்குளம் முதல் அணு உலை, எங்களுக்கு ஒரு பரிசோதனைக் கூடமாக இருக்கிறது.(LAB – ஆய்வுக் கூடமாக). முதல் அணு உலையில் இருந்து, நாங்கள் இடண்டாம்அணு உலைக்கான பாடங்களை கற்றுக் கொள்கிறோம்) என்கிறார் அணுஉலையில் பெயர்வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர், இதிலிருந்து முதல் அணுஉலையின்நிலைமையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். – (IANS செய்தி நிறுவனம்
வெளியிட்ட செய்திக் குறிப்பு.)கூடங்குளம் அணு உலைகளுக்கு அதிகப்படியாக கூடுதலாக மேலும் 4000 கோடிசெலவிடப் பட்டுள்ளதாக அணுசக்திக் கழகம் சொல்லுகிறது. அணு உலைகள்இயக்கப்படும் நிலையில் இருக்கும் போது, ஏன் கூடுதலான செலவு என்றுமக்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும்.
ம.புஷ்பராயன்.
நன்றி. உதவி –
சூழல் ஆய்வாளர் , நித்தி ஜெயராமன் – தெஹெல்கா ஆங்கில இதழ், IANS ஊடக
நிறுவனச் செய்தி
It was great being in America in 1986 to witness the effect of Chernobyl (in Ukraine) on rest of the Europe.