கூடங்குளம் அணுக்களிவுகளை கோலார் தங்கவயலில் கொட்டுவது என மத்திய அரசு நீதிமன்றத்திற்கு தெரிவித்த பின்னர், கர்நாடக மக்களும் அணு உலைக்கு எதிராகத் திரும்பியிருந்தனர்.
கூடங்குளம் அணுக்கழிவுகளை கோலார் சுரங்கத்தில் கொட்டும் திட்டம் இல்லை என்று மத்திய மந்திரி நாராயணசாமி கூறியுள்ளார். மத்திய மந்திரி நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உள்ள யுரேனியம் கழிவுகளை கோலார் சுரங்கத்திற்கு கொண்டு செல்லும் திட்டம் எதுவும் இல்லை. மத்திய மந்திரியும், கோலார் தொகுதி எம்.பி.யுமான முனியப்பாவும் இதைப்பற்றி பேசினார். அதுகுறித்து எங்கள் அலுவலகத்தில் விவாதித்தோம். அணுக்கழிவு மிகவும் நாட்டின் எந்த பகுதிக்கும் கொண்டு செல்லப்படாது எனக் குறிப்பிட்டார். ஆக, அணுக்களிவுகள் அனைத்தும் கூடங்குளத்திலேயே கொட்டப்படும் என்பது தெளிவாகிறது.
கூடங்குளத்திலேயே பாதுகாக்கப்படும் இந்தக் களிவுகள் இலங்கை வரை பாதிப்புக்களை ஏற்படுத்தவல்லது.