கூடங்குளம் அணு உலையை செயல்பட விடமாட்டோம் என்றும், அணு மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாகவும் போராட்டக்காரர்கள் அறிவித்திருந்தனர். இதனை அடுத்து கூடங்குளத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய நான்கு மாநில போலீசார், மற்றும் மத்திய அதிரடிப் படையினர் குவிக்கப் பட்டுள்ளனர். இடிந்த கரை ராதாபுரம் செல்லும் சாலை சீல் வைக்கப்பட்டது.
‘ஈழத்தாய்’ என தமிழ் இனவாதிகள் போற்றும் ஜெயலலிதா ஜெயராமின் போலிஸ்படை உட்பட ஏனைய மாநிலங்களின் போலிஸ்படை மக்களின் அமைதிப் போராட்டத்தின் மீது முப்படைகளையும் ஏவி தாக்குதல் நடத்துகிறது.
மக்களைச் சுற்றிவளைத்த யுத்தகளமாக கூடங்குளம் காட்சிதருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடற்கரையில் பல்லாயிரக்கணக்கில் குவிந்திருக்கும் எதிர்ப்பாளர்களிடம் அரசுத் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
ஆர்ப்பாட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். ஆனால் அறிவித்த பாதையில் வராமல் இடிந்தகரையில் இருந்து கடற்கரை வழியாக சென்று கூடங்குளத்தின் பின்பகுதி வழியாக முற்றுகையிட பேரணியின் பாதை திடீரென மாற்றப்பட்டது. இதனையடுத்து படையினரின் முற்றுகை அங்கும் இடம்பெற்றது.
‘கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியிறுத்தி இன்று முற்றுகை போராட்டம் நடத்துகிறோம். இந்த போராட்டம் அறவழி போராட்டம். ஆயுதமின்றி நிராயுதபாணியாக காந்திய வழியில் போராடுகிறோம். இதன்மூலம் எந்தவித அரசு சொத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தப்பட மாட்டாது. வன்முறையில் ஈடுபட மாட்டோம். போராட்டத்தில் அசம்பாவிதம் ஏற்பட்டால் நான்தான் பொறுப்பு என்று நெல்லை மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார்.
சமீபத்தில் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு 60க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். சிவகாசி வெடி விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள். 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கிட்டில் 1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது. இதற்கெல்லாம் யார் காரணம்? எனவே இந்த முற்றுகை போராட்டத்தில் அசம்பாவிதம் ஏற்பட்டால் நெல்லை மாவட்ட காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும், அரசும்தான் முழு பொறுப்பு.’ என அணுமின் நிலையத்துக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் இன்று நிருபர்களிடம் கூறினார்.
புணல் மின்,அனல் மின் ஆகிய இரண்டும் இப்பொதும் இல்லை.வரும் காலத்தில் அதற்கான சாத்தியகூறுகளும் இல்லை.சரி அணுமின் வேண்டாம் என்றால் வேறு என்ன மாற்று வழி. அணு உலை வேண்டாம் என்று விட்டுவிட்டால் நாளையே மின்சாரம் இல்லை என இதே .உதயகுமார் போராடுவார்.கிட்டதட்ட இருபது வருடங்களாக கூடங்குளம் அணுமின் திட்டம் கட்டுமான பணிகளைச் செய்து வந்ததே அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் எங்கே இருந்தீர்கள்.
வாழ்க வளமுடன்.
கொச்சின் தேவதாஸ்