குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதைப் பற்றி உலக நாடுகள் கியூபாவிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டுமென்று யுனிசெப் அமைப்பின் கியூ பாவுக்கான பிரதிநிதி ஜோஸ் ஜுவான் ஆர்டிஸ் கூறியுள்ளார்.
வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற பிரபஞ்ச குழந்தைகள் தின விழாவில் கியூ பாவில் யுனிசெப் பிரதிநிதியாகவிருக்கும் ஜோஸ் ஜுவான் ஆர்டிஸ் பேசினார். அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத்தடைகளால் கியூபா வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி நிகழும் இயற்கைப் பேரழிவுகளால் கடுமையான சோதனைக்கு ஆளாகிறது. இருப்பினும் குழந்தை இறப்பு விகிதம் குறைந்துள்ளது. குழந்தை களுக்கு ஊட்டச்சத்து அதிகரித்துள்ளது என்று அவர் தம் உரையில் குறிப்பிட்டார்.
குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பில் முன்னோடியாக உள்ள கியூபாவைக் கண்டு வளர்ந்த நாடுகள் பொறாமைப்பட வேண்டும் என்று ஜோஸ் கூறினார். கியூபாவின் இந்த அரிய சாத னைக்கு அரசின் அரசியல் உறுதிதான் காரணம் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
கியூபாவின் முன்மாதிரியை மற்ற நாடுகளும் பின்பற்ற வேண்டும் .நீதியியல் மற்றும் சமூக நலத்துறைக ளில் குழந்தைகளுக்கு சாதகமான நிலையை உருவாக்க அவை பாடுபட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். கியூபாவைப் பின்பற்றி மற்ற நாடுகளும் செயல்பட் டால் குழந்தைகள் உரிமை குறித்த ஐ.நா. சாசனம் நிர்ணயித்த இலக்குகளை மற்ற நாடுகளும் அடைய முடியும் என்று ஜோஸ் கூறினார்.
1989-ம் ஆண்டில் நிறை வேற்றப்பட்ட ஐ.நா.வின் குழந்தைகள் உரிமை சாச னத்துக்கு இரு நாடுகள் பின் ஒப்புதல் அளிக்கவில்லை. உலகின் செல்வந்த நாடு என்று கருதப்படும் அமெரிக்காவும், கொடிய வறுமையில் உழலும் சோமாலி யாவும் பின் ஒப்புதல் அளிக்காத இரு நாடுகளாகும்.