முள்ளிவாய்க்கால் அழிப்பில் குண்டுகளைச் சுமந்த ஆயிரக்கணக்கான சிறுவர்கள் வாழ்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் உட்படப் பலர் கருத்துத் தெரிவித்திருந்தனர். இலங்கையில் தொலைக்காட்சி ஒன்று இது தொடர்பான ஆவணப் படம் ஒன்றையும் வெளியிட்டது.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குண்டுகள் துருப்பிடிக்காத உலோகங்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படுவதால் அவற்றைச் சுமந்த சிறுவர்களுக்குப் பாதிப்பில்லை எனக் கருக்துத் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளின் உடலில் காணப்படும் துப்பாக்கி மற்றும் குண்டுச் சன்னங்கள் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சியில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
போர் தின்ற எதிர்கால சந்ததியை மேலும் அவலத்துள் அமிழ்த்தி வருகிறது இலங்கைப் பேரினவாத அரசு.