வடக்கில் சுன்னாகம் அனல் மின்நிலையத்திலிருந்து திட்டமிட்டு வெளியேற்றப்படும் கழிவு எண்ணையால் யாழ்ப்பாணக் குடாநாட்டின் நிர் வளமும் நில வளமும் அழிந்து வருகிறது. இலங்கையில் வாழும் ஆய்வாளர்கள், பொறியியலாளர்கள், விஞ்ஞானிகள், சமூக ஆர்வலர்கள், மக்கள் பற்றுளவர்கள், சட்ட நிபுணர்கள் என்று பல்வேறு தரப்பிலும் யாழ்ப்பாணத்தை நீரற்ற வரண்ட பிரதேசமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே எண்ணைக் கழிவுகளை மக்கள் குடியிருப்புக்களில் வெளியேற்றி நீரை மாசுபடுத்தி நிலத்தை உற்பத்திற்கு ஒவ்வாததாக மாற்றுகின்றனர். சுன்னாகத்திலிருந்து பல மைல் சுற்றளவில் திராட்சைப் பயிர்ச்செய்கை நிரந்தரமாக நிறுத்தப்பட்டுள்ளது. நீரை உட்கொண்ட பலர் சிகிச்சை பெறுகின்றனர். பதினொரு பேரின் உடலில் புற்று நோய் பரவியுள்ளது. சில பகுதிகளில் குடியிருந்தவர்கள் வீடுகளை விட்டுச் சென்றுள்ளனர்.
2012 ஆம் ஆண்டிலிருந்கு இப் பேரழிவிற்கு எதிரான ஆதாரங்களைப் பலர் முன்வைத்துள்ளனர். நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. வழக்குத் தொடர்ந்தவர்களை மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனம் பயங்கரவாதிகள் எனப் போலிக் குற்றம் சுமத்தி மிரட்டுகிறது. சிலர் புலனாய்வுத் துறையால் மிரட்டப்பட்டுள்ளனர். பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பிரனரான நிர்ஜ் தேவா என்பவர் மின்னுற்பத்தி செய்யும் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர்.
மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தில் அங்கு அதிக மின்சாரத்தை வழங்கியது தாமே எனக் குறிப்பாகக் தனது உரையில் கூறியுள்ளார்.(மின்சாரம் தொடர்பாக 6:50 நிமிடத்தில் மகிந்த கூறுகிறார்; பார்க்க: இணைப்பு)
இதனூடாக வடக்கில் நீரை நச்சாக்கும் சமூகவிரோதச் செயலில் தான் பின்புலத்தில் செயற்பட்ட குற்றத்தை மகிந்த வெளிப்படையாக ஒத்துக்கொள்கிறார்.
மகிந்த பகிரங்கமாக தனது குற்றத்திற்கு ஒப்புதல் வாக்குமூலம் வழங்கும் போது எதிரணிப் பேரினவாதக் கட்சியன மைத்திரிபால அணி இது குறித்து மூச்சுக்கூட விடவில்லை என்பது வியப்பிற்கு உரியதல்ல. இடதுசாரி அணிகள் என்று கூறிக்கொண்டு சீரழிந்த முதலாளித்துவ ஜனநாயகத்தில் வாக்குப் பொறுக்க தயாராகியிருக்கும் இடதுசாரிக் கட்சிகளும் இது குறித்து எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக, வாக்குப் பொறுக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பது தெளிவாகின்றது.
அதே 6:50 அளவின் அரட்டையின் தொடர்ச்சியாக மக்களை நோக்கி எல்லா அபிவிருத்தித் திட்டங்களுக்கும் டக்லஸ் தேவானந்தா சம்பத்தப்படுவதை சாதுர்யமாக வெளித்தள்ளுகிறான்.
சிங்களத்தில் 7:21 அளவில் மகிந்த ராஜபக்ச சொன்னது தமிழ் மொழிபெயர்ப்பில் முற்றிலும் வெளிச்சொல்லப்படவில்லை . இதுவும் சிங்களத்தில் வெளிவிடப்படுகிறது :- ” எங்களின் சகல அபிவிருத்தித் திடங்கள் சம்பந்தமாகவும் உங்கள் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா அவர்கள், எங்களிடம் வந்து உங்களது பிரச்சனைகள் பற்றி எங்களுக்கு எடுத்துரை”
அதே 6:50 அளவின் அரட்டையின் தொடர்ச்சியாக மக்களை நோக்கி எல்லா அபிவிருத்தித் திட்டங்களுக்கும் டக்லஸ் தேவானந்தா சம்பத்தப்படுவதை சாதுர்யமாக வெளித்தள்ளுகிறான்.
சிங்களத்தில் 7:21 அளவில் மகிந்த ராஜபக்ச சொன்னது தமிழ் மொழிபெயர்ப்பில் முற்றிலும் வெளிச்சொல்லப்படவில்லை . இதுவும் சிங்களத்தில் வெளிவிடப்படுகிறது :- ” எங்களின் சகல அபிவிருத்தித் திடங்கள் சம்பந்தமாகவும் உங்கள் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா அவர்கள், எங்களிடம் வந்து உங்களது பிரச்சனைகள் பற்றி எங்களுக்கு எடுத்துரைக்கிறார். அவர் உங்களுக்கு ஒன்றைச் சொல்லி எனக்கு இன்னொன்றைச் சொல்வதில்லை. டக்லஸ் அன்றும் ஒன்று சொன்னார், இன்றும் சொல்கிறார், நாளையும் உங்களைப் பற்றி கதைக்கிறார்… லக்லஸின் அந்தச் செயலுக்கு நாங்கள் பலமளிப்போம் எனக் கூற விரும்புகிறோம்,,,, ”
11:40 அளவில் “இன்று நீரைக் கொண்டு வர எத்தனிக்க” என்று தொடங்கி “உங்களுக்கு வழங்கும் நீர்” கொண்டுவந்து வழங்கவே தயாராகிறோம் என்று 12:20 அளவில் முடிக்கும் சொற்கள் யாழ் குடாநாட்டின் அதிமுக்கியமானவை.
இரணைமடுவுக்கு மொரகஹாகந்த திட்டத்தில் இருந்து நீர் கொண்டு வருவது என்பதை சொல்லாமல் சொல்கிறான் மகிந்த ராஜபக்ச. ஒரு சில முன்னோடி தமிழ் பிரதிநிதிகளே இங்கே பலவழிகளில் வடக்கு வாழ் தமிழர் ஏமாற்றப் படுவதை அறிவர். இத்தந்திரோபாயத்தை நன்கு உணர்ந்தவர் பாராளுமன்ற உறுப்பிவர் சிறீதரன் என நினைக்கிறேன்.
சுமார் 100 கிலோமீற்றருக்கும் லேலாக இரனைமடுவுக்கும் பின்பு அங்கிருந்து யாழ் குடாநாட்டுக்கும் எனக்கூறி, தண்ணீர்ப்ப் பற்றாக்குறையால் தொடங்க முன்னரே அழிந்த திட்டமே மொரகஹாகந்த-களுகங்கை பாரிய அணைக்கட்டுமான விளையாட்டு. இந்தியாவோ அமெரிக்காவோ வேறொருவரோ திருகோணமலையில் மேலும் கால் உன்றினால் மொரகஹாகந்த நீரே அபிவிருத்தியைக் கட்டுப்படுத்தும். மாத்தளை, பொலநறுவை மாவட்டங்களில் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கடைசிக்கட்டமாக சீன அரச தனீயார் நிறுவனமான் சீனோஹைட்றோ மகாவலி கங்கையின் கிளையான அம்பன் கங்கையையும் களுகங்கை எனும் ஒரு சிற்றாரையும் பலவிடங்களில் ஐந்து வருடங்களுக்கு மேலாக, அதுவும் ஒருவிதத்தில் ரகசியமாகவே, பாரிய ஒரு திட்டமாக தடபுடலென எழுப்பி வருகிறது.
மொரகஹாகந்த திருகோணமலைக் குடாவின் அபிவிருத்தியை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் கடைசிக்கட்டங்களில் யப்பானிடமிருந்து பறிக்கப்பட்டு சீனாவுக்கு ஹம்பாந்தோட்டை அபிவிருத்தியின் அடுத்த கட்டமாக பரிசளிக்கப்பட்ட ஒரு பாரிய இயற்கை அழிவுத்திட்டம்.
மைத்திரிபால சிரிசேனவின் பொலனருவை மாவட்ட எல்லையிலேயே பாரிய அழிவுகளை உருவாக்கியவாறு மொரகஹாகந்த – களுகங்க உருவாவதை பல சிரேஷ்ட அமைச்சர்கள் நன்கறிவர். பொலநறுவை மாவட்டத்தில் பல சிங்களக் குடும்பங்களே பலவந்தமாக கலைக்கப்பட்டே இத்திட்டம் தொடங்கியது. ஆனால் வெலிவேரியா போன்றே ஒருவரும் கதைக்கத் துணியாத, ஏற்கனவே பல மனித உரிமை மீறல்கள் நிறைந்த ஒரு திட்டம்.
இத்திட்டத்தால் ஒருபுறம் கிழக்கை வடக்கில் இருந்து பிரிக்கும் தந்திரோபாயம் வாகரை, மட்டக்களப்பு வட்டத்தின் வடக்கு உள்ளூர் எல்லைகளை நிரந்தரமாக அபகரிக்க அடிகோலுகிறது. மறுபுறம் வடக்குக்கு அதுவும் எத்தனையோ கட்டுக்கதைகளைத் தாண்டி கடைசியில் யாழ் குடாநாட்டுக்கே நீர் வழங்கப்படும் என மெதுவாக கூறப்பட்டு வந்தது. இப்போ மகிந்த ராஜபக்ச அதிகாரபூர்வமாக அத்திட்டத்தை மேடையிலிருந்து கூறி தனது சேவை பூர்த்தி செய்கிறான். புளித்துப்போன மகாவலி அபிவிருத்தித் திட்ட பொய்களின் கால்வாய்கள் எழுப்பி அதன் கரைகளில் குடியேற்றங்கள் என்ற அநியாயங்களுக்கு புத்துயிர் அலிக்கப்படுகிறது. இத்தகைய கால்வாய்களின் சாட்டிலேயே மணலாறு தமிழரிடமிருந்து பறிக்கப்பட்டது. மொரகஹாகந்த திட்டத்தின் ஒரு ஆகலும் குறைந்த முக்கியத்துவம் வாய்ந்த, அதிகளவு நீர் செறிந்தால் இரணைமடுவுக்கு பாய்ச்சுவது என்ற வசனங்களை இன்று வலிகாமத்தில் நிகழும் நீர்ப்பிரச்சனையைச் சாட்டி இரணைமடுவிலிருந்து யாழ் குடாநாட்டுக்கு என எற்கனவே உள்ள தமிழரின் பிரிவை விஸ்தரிக்கும் ஒரு முயற்சி தான் யாழில் தோன்றியுள்ள சுவரொட்டிகள். மகிந்த வருமுன் சுவரொட்டிகள் வடமாகனசபை விவசாய அமைச்சுப்பதவியிலுள்ள ஐங்கரனேசனும் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனும் வெள்ள நீரை வெளியேற்ற இரனைமடுவின் வான்கதவுகளைத் திறந்த படங்களை நீர் வீண்விரயமாவது என்ற பாணியில் முதலைக் கண்ணீர் வடித்ததும் கவனிக்கப்படவேண்டியது.
கால்வாய்கள் வரும் என குடியிருப்புக்கள் அமைக்கும் திட்டங்கள் பலவும் ஆங்காங்கே வன்னி நிலப்பரப்பெங்கும் இன்னொருமுறை உதயமாகப்போகிறது.