புரட்சிவாதியும் லெனின்மனைவியுமான குறூப்ஸ்காயா ( (Nadeshda Konstantinowa Krubskaja) ) வின் எழுபதாவது இறந்த தினம் இவ்வருடமாகும். அவர் போல்சவிக் கட்சித் தோழர்களால் நாட்யா( (Nadja) என்று பெருமதிப்போடும் தோழமையோடும் அழைக்கப்பட்டார். 1869 பெப்ரவரி 14 இல் பீட்டர்பேர்க்கில் சார் மன்னனின் இராணுவ அதிகாரி ஒருவரின் மகளாகப் பிறந்தார். இவரின்தாயார் ஓர் ஆசிரியை. குறூப்ஸ்காயா தன் கல்வியை முடித்துக் கொண்டு ஆசிரியையாகப் பணியாற்றிய சமயத்தில் மார்க்ஸ்சியக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டுத் தொழிற்சங்க இயக்கங்களில் பணியேற்றார். இவர் 1894 இல் லெனினைச் சந்திப்பதற்கு முன்பாகவே லெனின் மாக்ஸ்சியவாதி ஆவதற்கு முன்பாகவே புரட்சி இயக்கத்தில் செயற்படத் தொடங்கியிருந்தார். இருவரும் அரசியல் நடவடிக்கைகளுக்காகக் கைது செய்யப் பட்டு சைபீரியாவில் கடூழியச் சிறைவாசம் அனுபவித்து பின் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றனர். இவர் எழுதிய “உழைக்கும் பெண்கள”; என்ற நூல் 1901 ஆம் ஆண்டில்ஜேர்மனியின் முன்னிச் நகரில் அச்சிடப்பட்டு வெளியிடப் பட்டது. இந்த நூல் அன்றய ஜேர்மனியின் சமூகஜனனாயகவாதியான ஓகஸ்ட் பேபெல் எழுதிய பெண்களும் சோஷலிசமும்” என்ற நூலுக்குச் சமமானது. நாடு கடத்தப்பட்டு வாழ்ந்தபோது றஸ்ய சமூகஜனனாயகக் கட்சிக்காகத் தொடங்கப் பட்ட ஸ்க்ரா பத்திரிகையின் முழுநிர்வாகத்தையும் முன்னிச் நகரிலிருந்து குறூப்ஸ்கயாவே நிர்வகித்து வந்தார். அத்துடன் அதே நகரில் இயங்கிய சமூகஜனனாயகக் கட்சியின் அலுவலகத்திலும் இவரே முக்கியமாக வேலைசெய்து வந்தார். குறூப்ஸ்காயா றஸ்ய மொழியுடன் போலந்து ஆங்கிலம ,பிரெஞ்சு, ஜேர்மன் மொழிகளையும் அறிந்தவராக இருந்தார். நீண்டகாலம் ஜேர்மனி பிரான்ஸ் சுவிற்சலாந்து போலந்து போன்ற நாடுகளில் குடிபெயர்ந்து வாழ்ந்து ஒக்டோபர் புரட்சிச் சமயத்தில் றஸ்யாவுக்குச் சென்றார்.
‘நான்மாபெரும் ஒக்டோபர் புரட்சியின் உலகுக்கான சாட்சியாக வாழ்கிறேன” என்று புரட்சிக்காலம் பற்றி அவர் எழுதினார். கிளாரா செற்கின், அலெக்ஸ்சாண்டிறா கொலந்தாய் உட்படப் பல பல பெண்ணியவாதிகளிடம் நெருங்கிய அரசியல் உறவு கொண்டிருந்தார். “சுதந்திரக் காதல்” போன்ற தீவிரப் பெண்ணியக் கருத்தியல்களை அவர் ஒத்துக் கொள்ளவில்லை. இது திட்டமிட்டுக் கொண்டுவரக் கூடிய ஒன்றல்ல. சமூகத்தின் இயற்கையான வளர்ச்சிப் போக்கில் பாலியல், தனது கட்டுக்களை அறுக்கும் என்று அவர் கருதினார். 1917 முதல் கல்வித்துறைக் கொமிசாராகச் செயற்பட்டு எழுத்தறிவின்மையை ஒழிக்கவும் பெண்கள் மத்தியில் கல்வியை எடுத்துச் செல்லவும் செயற்பட்டார். போதனாவியல் சம்பந்தமாக மிகப்பெரிய 11 தொகுதி நூல்களை அவர் எழுதினார். 1924 இல் லெனின் இறந்தபோது அவர் உடலை லெனின் விருப்பப்படி அவரின் தாயாரின் உடலுக்கு அருகே புதைக்க வேண்டுமெனவும் லெனினுக்கு பெரும் நினைவுச் சின்னங்கள் அமைப்பதும் எல்லா இடங்களுக்கும் அவரின் பேரைச் சூட்டுவதின் பின்பான ஸ்டாலின் அரசியலைச் சந்தேகித்து அவர் இந்தத் தனிமனித வழிபாட்டின் நிலையைக் கடுமையாக எதிர்த்தார். ஸ்டாலினிச அதிகாரத்துவ இயக்கத்திற்கு எதிராக கட்சியின் மிகச் சிறந்த மார்க்ஸ்சிய சிந்தனையாளரான ரொட்ஸ்கி கட்சியில் போராடியபோது குறூப்ஸ்காய அவரைத் தீவிரமாக ஆதரித்தார். ரொட்ஸ்கிக்கும் லெனினுக்கும் இடையே ஏதோ பெரும்அரசியல் முரண்பாடுகள் இருந்ததாக ஸ்டாலின் கருத்துருவாக்கம் செய்தபோது குறூப்ஸ்கயா ரொட்ஸ்கியைப் பாதுகாத்தார்.
“1902இல் ரொட்ஸ்கி சைபீரியாவிலிருந்து முதன் முதலில் லண்டனில் லெனினைச் சந்தித்தபோது எத்தகைய மதிப்பையும் தத்துவம்சார்ந்த தனி இடத்தையும் ரொட்ஸ்கிக்கு லெனின் வழங்கினாரோ அதை அவர் தனது சாகும் காலம்வரை கொண்டிருந்தார்’ என்று குறூப்ஸ்காயா ரொட்ஸ்சிக்கு எழுதினார்.
லெனின் மரணமாகி ஒரு கிழமையின் பின்பு லெனினது விதவை மனைவியான குறூப்ஸ்கயாவிடமிருந்து ரொட்ஸ்கிக்கு ஒரு கடிதம் வந்தது.
அன்புள்ள லியொன் டாவிடோவிசு, லெனின் மரணமாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் உங்களுடைய புத்தகத்தை நான் எனது கணவரின் வேண்டுகோளின்பேரில் அவருக்கு வாசித்துக் கொண்டிருக்கும் பொழுது நீங்கள் மாக்ஸ்சினதும் லெனினதும் குணாம்சங்களை ஒப்புநோக்கிக் கூறுமிடத்து, என்னைத் தொடர்ந்து வாசிப்பதை நிறுத்தும்படி சொல்லி, மீண்டும் மீண்டும் அவ்வரிகளை வாசிக்கும்படி கேட்டதோடு, அதைக் கவனமாகக் கிரகித்ததோடு, அந்த வரிகளைத் தானும் மீண்டும் மீண்டும் வாசித்துப் பார்த்தார் என்பதை நான் உங்களுக்குச் சொல்வேன். இதனோடு சேர்த்து நான் இதையும் உங்களுக்குச் சொல்வேன். நீங்கள் சைபீரியாவிலிருந்து லண்டனுக்கு வந்தபொழுது விளாடிமீர் இலிச்சுக்கும் உங்களுக்கும் என்ன உறவு ஏற்பட்டதோ அந்த உணர்வானது அவர் சாகும் தறுவாயிலும் அவரிடமிருந்து அகலவில்லை.
லியொன் டாவிடோவிச், நீங்கள் ஆரோக்கியமாகவும் தைரியமாகவும் இருக்க வாழ்த்தி உங்களைக் கட்டி அணைக்கிறேன்.
N.குறூப்ஸ்கயா-
இறுதிக்காலத்தில் லெனினையும் குறூப்ஸ்காயாவையும் ஒன்றுசேர எதிர்த்துத் தனிமைப் படுத்தி வந்த ஸ்டாலின் லெனின் முன்பாகவே குறூப்ஸ்காயாவைக் கெட்ட சொற்களால் நிந்தனை செய்ததைப் பொறுக்காத லெனின் குறுப்ஸ்காயாவுக்கு இழைக்கப்பட்ட அநீதி தனக்கெதிராக இழைக்கப்பட்ட அநீதி எனவும் இதற்காக உடனடியாக ஸ்டாலின் மன்னிப்புக் கேட்க வேண்டுமெனவும, இல்லாவிட்டால் தனிப்பட்ட உறவுகள் உட்பட சகல ஸ்டாலினினுடனான உறவுகளைத் துண்டிக்கப் போவதாகவும் லெனின் ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதினார். ஆனால் வன்மமும் அதீத தனிமனிதப் பகையுணர்வும் கொண்ட ஸ்டாலின் லெனினிடமும் குறூப்ஸ்காயாவிடமும் மன்னிப்புக் கேட்கவோ தவறுக்கு வருந்தவோ தயாராக இருக்கவில்லை. 1922 இல் குறூப்ஸ்காயா அரசியல்குழு உறுப்பினரான கமனோவுக்கு எழுதிய கடிதத்தில் ‘தன்னுடைய தனிப்பட்டவாழ்வில் கூட ஸ்டாலின் தலையிடுவதாகவும் அவமானப்படுத்தியதாகவும் பயமுறுத்தியதாகவும்” தெரியப் படுத்தினார்.
லெனின் குறூப்ஸ்காயா இவர்களின் ஏனைய கட்சித் தோழர்களோடான தொடர்புகள் பேசப்படும் விடயங்கள் போன்றவற்றை தனது உளவுத்துறைமூலம் ஸ்டாலின் வேவு பார்த்து வந்தார். சோவியத் புரட்சியின் தந்தையான லெனியையே வேவுபார்க்குமளவு ஸ்டாலினிசம் வளரத்தொடங்கிய சமயமாக அது இருந்தது. லெனின் இறப்பின் பின்பு குறூப்ஸ்காயா அவரது அரசியற்தொடர்புகளிலிருந்து துண்டித்துத் தனிமைப்படுத்தப்பட்டவுடன் ஸ்டாலினால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயமுறுத்துப்பட்டார். ஒழுங்காக நடந்து கொள்ளாவிட்டால் “வேறுரொரு பெண்ணை லெனினின் விதவையென்று தன்னால் ஆக்க முடியும்” என்று இகழ்ச்சியாக குறூப்ஸ்கயாவை ஸ்டாலின் அவமானப் படுத்தியதாக குருசேவ் தனது நினைவு நூலில் எழுதியுள்ளார். 1937 1938 1939 களில் லெனினால் கட்சிக்குக் கொண்டுவரப்பட்டுப் பயிற்றப்பட்ட புரட்சியின் மிகச் சிறந்த தலைவர்களான சினோவேவ், கமனேவ் ;> karl Radeck, Yuri Piatokov, Grigory Sokolnikov, Nikolai Bukhrin, Alexi Rykov. Christian Rakovsky, Nikolai Krestisky, kw;Wk; nrk;gilapd; n[duyhf ,Ue;j Mikhail Tukhachevsky மற்றும் செம்படையின் ஜெனரலாக இருந்த Mikhail Tukhachevskyஎன்பர்களை தனது கழையெடுப்பின்போதும் பொய்வழக்கின்போதும் ஒப்புதல் வாக்கு மூலம் வாங்கிச் சித்திரவதை செய்து கொன்றொழித்தார். லெனினது மத்திய குழு அங்கத்தவர்களுள் லெனினும் ஸ்டாலினும் கலினின் மாத்திரமே இயற்கை மரணம் எய்தியவர்களாகும். ஓன்றரை மில்லியன் போல்சவிக்குகளை ஸ்டாலினிஸ்டுகள் கொன்று குவித்தனர் என்பது இன்று ஆவணமாக்கப்பட்டுள்ளது.
1931 மார்ச் 17 இல் ஸ்டாலின் குறூப்ஸ்கயாவை மத்தியகுழுவிலிருந்து விலக்கினார்.
1939 இல் மயாகோவ்ஸ்கியின் தற்கொலை நடந்தது. இதே வருடம் மாக்ஸ்சிம் கோர்க்கி இறந்தார். இச்சமயத்திலேயே குறூப்ஸ்காயா திடீரென மரணமடைந்தார். மார்க்சிம் கோர்க்கி மற்றும் ,குறூப்ஸ்காயா ஆகிய இருவரது மரணங்களும் ஸ்டாலினால் நஞ்சூட்டப்பட்டே நிகழந்ததென்று நம்புமளவு ஆதாரங்கள் இருந்தன. சோவியத் புரட்சியின் மிகச் சிறந்த கொடைகளில் ஒருவரான புரட்சியாளர் குறூப்ஸ்கயா 1939 பெப்ரவரி 27இல் இறந்தார். எதிகாலத்தில் உலகில் சோஷலிசப் புரட்சிகள் எழும் ஒவ்வொரு பொழுதிலும் லெனினைப் போல் ரொட்ஸ்கியைப்போல் குறூப்ஸ்காயாவையும் புரட்சியாளர்கள் புதுவார்ப்புச் செய்வார்கள். உலகப் புரட்சியின்கொடியோடு அவர்களின் பெயர்களும் இணைக்கப்படும்.
தமிழரசன்
பேர்ளின்
02.03.2009
தமிழரசன் போன்ற நான்காம் அகிலக்காரர்களுக்கு ட்ரொஃக்கி கடவுள்! ள்டாலின் பிசாசுமாதிரி! ள்டாலின் என்றால் சிதம்பரசக்கரத்தை பெய் பார்த்தமாதிரி >அப்பிடியொரு வெருட்சி! இவர்களின்தாகம் மார்க்சிச விரோதம்! அது சரி மார்க்சிம் கோர்க்கி குறூப்ள்காயா போன்றவர்களுக்கு ள்டாலினால் நஞ்சூட்டப்பட்டு இறந்தற்கான ஆதாரங்கள் இருந்தன. என்றில்லாமல் ஆதாரங்கள் உண்டென் எழுதலாமே! சாத்தான் வேதம் ஓத நாங்கள் படிக்கவேண்டயநிலை!
தமிழரசன் அவர்களே இதேபோல் பல கட்டுரைகளை நாம் முன்னரே படித்துவிட்டோம்.எனவே புதிதாக ஏதும் கிடைத்தால் எழுதவும்.லெனினையும் ஸ்டாலின்தான் கொன்றார் என்று எழுதாதவரை உங்களைப் பாராட்டத்தான் வேண்டும்.பாராட்டுக்கள்+வாழ்த்துக்கள்(?)
புரட்சியின் யூதாஸ் என்று அதாவது துரோகி என்று ரொட்ஸ்கியை லெனின் அழைத்தாரே அதுகூட தமிழரசன் மொழியில் பாராட்டு என்று அர்த்தமோ?
கட்டுரையாளரின் நிலையை நோக்கும்போது பரிதாபமாக இருக்கிறது.ஸடாலின் இறந்து இத்தனைவருடமாகியும் அவர் ஆவி இவரை நிம்மதியாக இருக்கவிடவில்லை போலும்.இங்கு வேடிக்கையும் வேதனையும் என்னவென்றால் ஸ்டாலின் மீது குற்றம் சுமத்த கட்டுரையாளர் குருசேவையே துணைக்கழைக்கிறார்.அவர் இன்னும் கொஞ்சம் வெட்கத்தைவிட்டு இன்டநெற்றில் தேடியிருந்தால் யாராவது அமெரிக்க அல்லது பிரிட்டனின் கைக்கூலிகள் இதைவிட நல்லாக எழுதிய வரிகளைப் பெற்றிருக்க முடியும்.
இந்த கட்டுரையை முதன்முதலில் படிப்பவர் ஸ்டாலின் ஒரு கொலைகாரப் பேய் என்ற முடிவுக்கே வரவேண்டும்.எனவே தமிழரசன் அவர்களே இந்த ஸ்டாலின் பேய் எப்படி எல்லோரையும் கொன்று குவித்தது?இவரை ஏன் மாசேதுங் உட்பட சர்வதேச புரட்சிவாதிகள் பலரும் ஆதரித்தார்கள்? என்பதை கொஞ்சம் விளக்குவீர்களா?
கட்டுரையாளருக்கு நல்ல கனவு காணும் திறமை உண்டு. அவர் ஏன் ஒரு கற்பனைக் கதை எழுத முயற்சிக்கக்கூடாது?
/மார்க்சிம் கோர்க்கி மற்றும் இகுறூப்ஸ்காயா ஆகிய இருவரது மரணங்களும் ஸ்டாலினால் நஞ்சூட்டப்பட்டே நிகழந்ததென்று நம்புமளவு ஆதாரங்கள் இருந்தன/
என்ன ஆதாரம் இருந்தது என்பதை கூறமுடியுமா?
/சோவியத் புரட்சியின் தந்தையான லெனியையே வேவுபார்க்குமளவு ஸ்டாலினிசம் வளரத்தொடங்கிய சமயமாக அது இருந்தது. /
என்ன அடிப்படையில் இவ்வாறு எழுதப்படுகிறது?
இவ்வளவு காலமும் “அவதூறுகளின்” பிதாமகனாக சுப்பிரமணியசாமி அவர்களையே நினைத்திருந்தேன்.ஆனால் அவரையே தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு திறமையான ஒருவர் பெர்லினில் இருக்கிறார் என்பதை இக் கட்டுரையை படித்தபின்பு தெரிந்துகொண்டேன்.வாழ்க சுப்பிரமணியசிசம்?
ரொட்ஸ்கியை நியாயப்படுத்துவதற்காக ஸ்டாலின் மீது ஆதாரமற்ற அவதூறை பொழிந்து தன்னை நிர்வானமாக்கி அம்மணமாக வெட்கமின்றி நிற்கும் கட்டுரையாளர்.
இடையிடையே இப்படி வேண்டிக் கட்ட வேண்டும் என்பதற்காகவே கட்டுரை எழுதுகின்றீர்களா தோழர்? ஏனிந்த வேலை? …………………………………………………………………..
சுரேஸ் டபுள் எம்.ஏ
Two militant Trotskyist parties have, during the past, two years got addicted to NGO funding so that their agenda is dictated by their NGO sponsors. Recently, the two parties moved close to the UNP in a ‘broad-based front to defend democracy’.- Pro.Sivasegaram (tamilnet-01.03.09)
ருசியா ஆய்வு மையம் லெனின் பற்றி ஆய்வு ஒன்றை அண்மையில் செய்தது. அதன் போது, 65 சதவீதமான மக்கள் லெனின் அடிப்படை நோக்கத்தை அங்கிகரித்ததுடன், அவை சரியானவை என்று எற்றுக் கொண்டதை 17.4.2003 பாரிஸ் லிபரேசன் பத்திரிகை செய்தியாக வெளியிட்டு இருந்தது. 5.3.2003 லிபரேசன் பத்திரிகை ருசியாவில் 42 சதவீதமானோர் ஸ்ராலினை ஏற்று ஆதாரிக்கின்றனர் என்ற செய்தியை வெளியிட்டது. மிதமுள்ளவாகளில் 36 சதவீதம் பேர் ஸ்ராலின் நன்மையே கூடுதலாக செய்தார் என்பதை அங்கிகரித்து ஆதாரவாக இருப்பதை வெளியிட்டு அதையே தூற்றியது. தூற்றம் அதே பத்திரிகை 1937-1938 இல் 40 ஆயிரம் பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக புதிய புள்ளிவிபரத்தை வெளியிட்டது. லெனின், ஸ்ராலின் பற்றிய சரியான மதிப்பீடுகள் உலகளவில் உருவாகின்றது. மார்க்சியம் மீண்டும் உலகை மாற்றும் ஒரே தத்துவமாக தலை நிமிர்ந்து வருகின்றது. இதை அடுத்து ஸ்ராலின் மரணமடைந்து 50 வது ஆண்டில் உலகெங்கும் மீண்டும் பெரியளவில் அரசியலற்ற வெற்று அவதூறுகள் மீளவும் உயிர்ப்பிக்கப்பட்டன. ஸ்ராலின் மீதான அரசியல் ரீதியான மதிப்பும், மக்களிடையே செயல்ப+ர்வமாக நடைமுறை ரீதியாக அதிகாரித்து வரும் பாட்டாளி வர்க்;க செல்வாக்கையும் கொச்சைப்படுத்துவது மூலதனத்தக்கு நிபந்தனையாகிவிட்டது. பாட்டாளி வர்க்கதின் வர்க்க கண்ணோட்டத்தை கொச்சபை;படுத்தவே, தம்மை தாம் ஸ்ராலின் அவதூறுகள் மூலம் அலங்கரிக்கின்றனர். மூலதனத்தின் நெம்பாக செயற்படும் வலது இடது சுதந்திர செய்தி அமைப்புகள், பலபக்க அவதூறுகளை 5.03.2003 வெளியிட்டன, வெளியிட்டு வருகின்றன. ஏகாதிபத்திய மூலதனத்தின் ஆதாரவுடன, கடந்த கால ஆவணங்களை தூசி தட்டி எடுத்து ஆய்வுகள் என்ற பெயரில், அரசியலற்ற அவதூறுகளை நூலாக்கியும் டாக்டர் பட்டம் பெறும் ஒரு கும்பல் பிழைக்கின்றது. இந்த நூல்களையே மேயும் ட்ராட்ஸ்க்;சியம் முதல் ஏகாதிபத்தியம் வரை, புல்லரிக்கும் மர்மக் கதைகளை உலாவவிடுகின்றனர். கடந்த 70 வருடமாக ஸ்ராலின் மீது இவர்கள் கட்டியமைத்த பொய்களும், அதை மெருகு ஊட்டிய ஆதாரங்களும் உண்மையற்று போன போது, இதை செய்தியாக்கிய எந்தப் பன்றியும் நேர்மையாக சுயவிமர்சனம் செய்ததில்லை. இப்படி அப்பட்டமாக ஆதாரம் என்ற பெயரில் கட்டமைத்த தரவுகள் அனைத்தும் விதிவிலக்கின்றி பொய்யாகியுள்ளது. இப்படி ஆய்வுகள் என்ற பெயரில் எழுதியவர்கள் பலர் ஏகாதிபத்திய உளவாளிகளாகவும், அவர்களிடம் கையூட்டுப் பெற்று இருந்ததும் அம்பலமாகியுள்ளது. அவர்கள் வழங்கிய தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்பது நிறுவப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்படி தகவல்களை வழங்கியவர்களுக்கும், ஏகாதிபத்தியத்துக்கும் இடையிலான தொடர்புகள் கூட இன்று ஆதாரபூர்வமாக அம்பலமாகியுள்ளது.
1917 ஆம் பிப்ரவரி 19 திகதி லெனின் எழுதினார் ~~ட்ராட்ஸ்கி வந்த சேர்ந்தார். வந்த சேர்ந்த உடனேயே இந்த அயோக்கியர் இடது ஸிம்மர்வால்டினருக்கு எதிராக ~நோவிமிர்| பத்திரிகையில் இருந்த வலதுசாரியுடன் கோஸ்டி சேர்ந்து கொண்டார்!! இது தான் ட்ராட்ஸ்கி.!! பார்த்துக் கொள்ளுங்கள்!! அவர் தனது சுயரூபத்தை எப்போதும் வெளிப்படுத்துகிறார் – திரிபுகள்இ மோசடிகள்இ இடது சாரியாக வேடம் போடுவதுஇ வலது சாரிகளுக்கு உதவுவதுஇ தன்னால் இயன்ற வரை இதைச் செய்வது…|| என்று லெனின் சோவியத் புரட்சிக்கான சூழல் நிலவிய காலத்தில் திரோஸ்கியின் மோசடிகளை அம்பலம் செய்தார்.
இது குறித்து கட்டுரையாளர் தமிழரசன் என்ன சொல்லப்போகிறார்?
ட்ராட்ஸ்கி சதிக் குழுவில் இருந்த சிரஸ்டின்ஸ்கி 1930இல் சோவியத் வெளிநாட்டு மந்திரியாக இருந்தவன். இவன் 1930 கள் வரை ஜேர்மனிய அரசிடம் இருந்து உள்நாட்டு சதிக்காக 20இ00இ000 தங்க மார்க்குகளை பெற்றிருந்தான். இந்த உதவி 1930இல் நிறுத்தப்படுமளவுக்கு நாசிய நெருக்கடிகள் உருவாகியது. இதைத் தொடர்ந்து ட்ராட்ஸ்கி ஜேர்மனிய வேவு இலாகாவுடன் புதிய ஒப்பந்தம் செய்தான். இந்த உதவிக்காக சோவியத் இராணுவ இரகசியங்கள் கையளிக்கப்பட்டன. 1931 இல் ட்ராட்ஸ்கியின் மகன் லியோன் செடோவ் “பெர்லினுக்குப் போனான். அவன் ஒரு மாணவன் என பிரயாணச் சீட்டில் ஜெர்மன் விஞ்ஞான கழகத்தில் சேரப் போவதாக எழுதப்பட்டிருந்தது. ஆனால் அவன் தலைநகரில் சதிவேலைகளில் ஈடுபட்டிருந்தான். சோவியத் வர்த்தக கமிட்டியில் ட்ராட்ஸ்கிய சதியாளர்களும் பெர்லினுக்கு வந்திருந்தனர். அவர்கள் சுமிர்நோவ்இ பயாட்டக்கோவ் ஆகியோர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். சுமிர்நோவ் 1931இல் ட்ராட்ஸ்கிக்கு சாதகமாக சதிசெய்ததையும்இ அவன் பெர்லினில் ட்ராட்ஸ்கியின் மகனைச் சந்தித்ததையும் ட்ராட்ஸ்கிய பத்திரிகை ஒத்துக் கொண்டுள்ளதை கவனமாக நாம் இங்கு குறித்துக் கொள்ள வேண்டும். ட்ராட்ஸ்கியின் மகன் செடோவ் அவர்களுடன் சந்தித்துஇ சதி எப்படி நடத்துவது என ஆராய்தனர்.”
அன்று ரொட்ஸ்கியின் மகன் செய்த பணியை தற்போது இந்த கட்டுரையாளர் அதே பெர்லினில் இருந்து செய்ய முற்படுகிறார் போலும்.ஆனால் அவர் காணும் கனவு ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்க ஸ்டாலினின் நடத்திய பேராட்டத்தில் சரியையும் தவறுகளையும் ஆராயும் போது, அவதூறுகளையும் இவ்வாய்வுரை தரைமட்டமாக்கின்றது. ஸ்டாலின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு பாத்திரம், அவர் நேர்மையாக வர்க்கத்துக்காக போராடினார், ஸ்டாலினால் இதை விட எதுவும் செய்ய முடியாது என்று கூறி அனுதாபம் அல்லது வரலாற்றை விளக்கும் எல்லா அடிப்படையின் பின்பும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிட்டுச் செல்வதை கோருகின்றது. ஸ்டாலின் காலம் அதிகார வர்க்க ஆட்சி, அது கம்யூனிசத்தை நோக்கிச் செல்லும் சோசலிசம் அல்ல, என்ற அனைத்து விளக்கமும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை மறுக்கின்றது. இவைகளை முன் வைப்போர் ஏன்?, எப்படி? இவை என்பதை முன்வைப்பதில்லை. இதை முன்வைக்க முடியாத போது அவதூற்றை விரும்பியவாறு வைப்பது நிகழ்கின்றது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், அங்கு தொடரும் வர்க்கப் போராட்டம், அதில் வன்முறை, மரணதண்டனை போன்றவற்றை வர்க்க சமுதாயத்தில் மறுப்பதில் இருந்து, முதலாளித்துவ ஜனநாயகம் பற்றிய பிரமைகளை விதைப்பதில் இருந்தே, இடதுசாரி முகமூடிகளின் பின்பு அவதூறு கட்டமைக்கப்படுகின்றது. இதன் பின்பு தமது வர்க்க நலனை மூடிமறைப்பதில் மிகுந்த சந்தர்ப்பவாத அக்கறை எடுத்துக் கொண்டு, மார்க்சியம் மீது பொறுக்கியெடுத்த தாக்குதலை நடத்துகின்றனர். ஒட்டுமொத்த சமுதாயத்தில் இருந்து பிரச்சனைகளை பகுத்தாய்வதற்கு பதில், குறிப்பானதை முழுமையானதாக காட்டி, தமது வர்க்க நலன்களை தக்க வைப்பதில் ஏகாதிபத்தியத்தின் வளர்ப்பு நாய்களாக இருக்கின்றனர்.
இந்த சந்தர்ப்பவாத இடதுசாரிகளின் நோக்கங்கள் பற்றி லெனின் ||உழைக்கும் மக்களுக்கு உடனடியாக வெறுப்பூட்டும், அப்பட்டமான சந்தர்ப்பவாதம் மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதத்தைப் போன்று அபாயகரமானதும் ஊறு விளைவிக்கக் கூடியதும் அல்ல. மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதம் தனது சந்தர்ப்பவாத நடைமுறைக்கு உரிய தருணம் வரவில்லை என்றும் இன்ன பிறவாகும் நிரூபிக்க அடுக்கடுக்காக மார்க்சிய சொற்றொடர்களைப் பயன்படுத்துகிறது|| என்றார். ஸ்டாலின் பற்றிய அவதூறுகள் பற்பல விதமானவை. எல்லாவிதமான வடிவங்கள் ஊடாகவும், ஸ்ராலினை தாக்குவதன் மூலம், மார்க்சியத்தை குழி தோண்டிப் புதைக்க கனவு காண்கின்றனர். ஸ்டாலின் புதைகுழி அரசியலைக் கொண்டு இருந்ததாக, அரசியல் ரீதியாக ஆண்மை இழந்து மலடாகிப் போனவர்கள் அவதூறு பொழிந்தபடி, உண்மையில் ஸ்ராலினையும், மார்க்சியத்தையும் புதைகுழியில் புதைத்து விட தலைகீழாக சபதம் எடுத்து குதித்தெழும்புகின்றனர்.
ராபர்ட் கான்குவஸ்ட
அடுத்த அவதூற்றுpன் மூலம் ராபர்ட் கான்குவஸ்டவை அடிப்படையாக கொண்டது. ~~மாபெரும் பயங்கரம்|| (1969), ~~சோகத்தின் அறுவடை|| (1986) ஆகிய இரு நூல்கள் மூலம் பிரபலமான கம்யூனிச எதிர்ப்பு போராளியானன். இவன் 1936-1938 விசாரணையின் போதும், நிலப்பிரபுகளான குலாக்குகள் அடிப்படையாக கொண்டு உருவாக்கிய உழைப்பு முகங்களிலும், உக்ரைன் பஞ்சாத்தாலும் பல பத்து லட்சம் மக்கள் இறந்தாக பிரச்சாரம் செய்தான். இவன் இதற்கு ஆதாரமாக அமெரிக்காவில் வாழும் உக்கிரைனிய வலதுசாரிகளை (இவர்கள் நாசிகளுடன் இரண்டாம் உலக யுத்தத்தில் நேரடியாக ஒத்துலைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது) ஆதாரமாக கொண்டார். இந்த வலதுசாரிகள் 1942 இல் உக்கிரனில் வாழ்ந்த யூதர்களை படுகொலை செய்வதில் முக்கிய பங்கேற்றவர்கள். இவர்களில் ஒருவரான மைக்கேலா எலபிட் அமெரிக்காவில் இருந்து ஜெர்மனி சென்றதுடன் 1942 இல் நாசிய பொலிஸ் தலைவானான். உக்கிரனில் யூத படுகொலைக்கு தலைமையேற்றவன்;. இவன் இரண்டாம் உலக போர்க் குற்றவாளியாக பின்னால் தண்டிக்கப்பட்டவன். இவன் தான் இந்த புதிய அவதூற்றை 1949 இல் சி.ஐ.ஏ தயவில் மீண்டும் தொடங்கி வைத்தவன். இந்த எதிர்புரட்சி நாசிய பாசிச நயகர்களை அடிப்படையாக கொண்டே ராபர்ட் கான்குவஸ்ட தனது அவதூற்றுக்கு அடிப்படையாக கொண்டான். இன்றைய ஜனநாயக மற்றும் ஸ்டாலின் எதிர்ப்பு இடதுசாரிகளின் கள்ளத் தந்தையும் மூதாததையுமாவன். இவன் 1969 இல் எழுதிய நூலில் 1932 க்கும் 1933க்கும் இடையில் 50 முதல் 60 லட்சம் மக்கள் பட்டினியில் இறந்தார் என்றும், இதில் பாதி உக்கிரனில் ஏற்பட்டது என்றான். இந்த பஞ்சம் 1937 வரை நீடித்தது என்றான். பின் இவன் 140 லட்சம் பட்டினிச் சாவாக விரிவாக்கினான். இந்த கம்யூனிச எதிர்ப்பு கள்ளத் தந்தையிடமே மூலதனத்தின் தந்தையான ஐனதிபதி ரீகன், 1988 கம்யூனிச எதிர்ப்பு தேர்தல் பிரச்சாரத்தை எழுதி தர ஒப்படைத்தார். இந்த கள்ளத் தந்தை தான், ஸ்டாலின் எதிர்ப்பு இடதுசாரிகளின் ஆய்வுக்கு, சுதந்திரமான ஜனநாயகமான ஆண்மாவாக உள்ளவன்.
இந்த கம்யூனிச எதிர்ப்பு கள்ளத் தந்தை, 1978 இல் பிரித்தானிய இரகசிய உளவுத் துறையின் கம்யூனிச எதிர்ப்பு பிரச்சார ஆய்வுத் துறையில், அதாவது ஐ.ஆர்.டியின் ஒரு கைக்கூலி என்பதை 27.1.1978 பிராஞ்சு கார்டியன் பத்திரிகை அம்பலப்படுத்தியது. 1947 இல் ஸ்டாலின் எதிர்ப்பு இடதுசாரி கள்ளக் குழந்தைகளை உருவாக்க உருவாகப்பட்ட இந்த நிறுவனம், பிரித்தானிய உளவுப்படையின் பிரிவாகவே இயங்கியது. இதன் பெயர் கம்யூனிசத் தகவல் குழு. இந்த தகவல் குழுவை அடிப்படையாக கொண்டே ஸ்டாலின் அவதூறு பொலியப்பட்டது, பொழியப்படுகின்றது. இந்த அமைப்பு கலைக்கபப்பட்ட போது, பிரிட்டனில் மட்டும் 100 மேற்பட்ட செய்திப் பத்திரிகைகள் நாள்தோறும் செய்தி பெற்று வந்த, ~~கருத்துச் சுதந்திர ஜனநாயகம்|| அம்பலமானது. இந்த அமைப்பை நிறுவியது முதல் 1956 வரை ராபர்ட் கான்குவஸ்ட இணைந்து கம்யூனிச எதிர்ப்பு கட்டுக் கதைகளை உருவாக்கினான். ~~மாபெரும் பயங்காரம்|| என்ற நூல், 1937 இல் நடந்த உள்நாட்டு சதியை ஆய்வுப் பொருளாக கொண்டது. சி.ஐ.ஏ மூலதனத்தை அடிப்படையாக கொண்டு பதிப்பிக்கும் பிரேஜர், இந்த நூலில் மூன்றில் இரண்டு பகுதியை வங்கி, சகல அறிவுத் துறையினருக்கும் இடதுசாரி கள்ள குழந்தைகளை உருவாக்க பரிசு அளித்தது.
மிகவும் பாரிதாபகரமான கட்டுரை.
எந்த நோக்கத்திற்குகாக இந்த தமிழரசன் தன்னை அம்மனமாக்கி இப்படி அம்பலபட்டு நிற்கிறார்.
குறூப்ஸ்காயா பிறந்த நாள் குறித்து போகிறபோக்கில் சொல்லிவிட்டு.
குருசேவ்வின் துரோகத்தனத்திற்கும் ட்ராஸ்கின் திருகுதனத்திற்கு ஏன் இப்படி வாக்காலத்துவாங்குகிறார்.
வசை திறனாய்வு இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.
ஒருவரே திருப்பி திருப்பி வேறு பெயர்களில் எழுதுவது என்ன பிரியோசனம்? குறூப்ஸ்காயா ரொட்ஸ்க்கி இவர்களது புத்தகங்களை படிக்க முயற்சித்தால் என்ன? கடந்தகாலத்தை பேச தடைகள் இருக்கக்கூடாது. உண்மைகள் முடிவு செய்யப்பட்டதாய் நினைப்பது பிழையானது.
பிரபு
ஸ்டாலினின் பொய்பிரச்சாரம் புத்தகம் வெளியீடுகளின் புதைசேற்றில்லிருந்து வெளிவரமறுப்பது
லட்சக்கணக்கான மக்களில் “இனியொரு” வாசகர்களும் அடங்குவர்.நடந்த வரலாற்றை உண்மையான
தரிசனமாக காணாவிடில் யாருக்குத்தான் என்ன சுகம்? உழைப்பாளிகளுக்குத் தான் என்ன பயன்?.
1917-ல் என்ன நடந்தது அதில் யார் பங்கேற்றார்கள்.அந்த மாபெரும் புரட்சியை எப்படி நிறைவேற்றி வைத்தார்கள்
என்பதை “உலகத்தை குலுக்கிய பத்து நாட்கள்” என்ற புத்தகத்தை ஜான் ரீட் என்ற அமெரிக்கர்(தொழிசங்கவாதி
கம்யூனிஸ்ட்) எழுதியுள்ளார். அது இன்றும் இறவாமையுடன் இருக்கிறது. யாரும் உண்மையறிய விரும்புவர்கள்
இதை படித்து ஆய்வுக்குயுட்படுத்துவது மிகமிக பயன்படத்தக்கது.
1919-ம் ஆண்டு லெனின் அதற்கு முகவுரையும் எழுதியுள்ளார்.