Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

குருதியில் உறைந்த தேசம் : இதயச்சந்திரன்

இனியொரு... by இனியொரு...
05/15/2011
in ஆக்கங்கள், இலக்கியம்/சினிமா, கவிதைகள்
0 0
10
Home ஆக்கங்கள்

மே 18 … தமிழின அழிப்பினைக் குறிக்கும் நாள்.
போர்க்குற்றங்களை உலகிற்கு உணர்த்தும் நாள்.

கொண்ட இலட்சியத்தினை மறுபரிசீலனைக்கு உட்படுத்தாமல்
இறுதிவரை போராடிய மைந்தர்களை நினைவுகூரும் நாள்.

தமது விருப்பத்தின் வழியே அவர்கள் பயணித்திருக்கின்றார்கள்.
இறுதிக் கணத்திலும் , அசாத்தியமான மனவுறுதியோடு நின்று,
”நீ அழக்கூடாது” என்கிற ஆறுதல் வார்த்தையை
கூறிச் சென்றிருக்கின்றார்கள்.

இறப்பின் வலி புரிந்த,
மனவிரிவுள்ள ஆளுமையின்
சொந்தக்காரர்கள் அவர்கள்.

விழுப்புண் அடைந்த போராளிகளையும்,
பொதுமக்களையும் காப்பாற்ற,
அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கங்கள் வருமென்றுகாத்திருந்தார்கள்.

வரவில்லை.
சிங்களப் பேரினவாதம் அவர்களை வரவிடவில்லை.

முள்ளிவாய்க்கால்….
தமிழின அழிப்பின் அடையாளமா?……குறியீடா?
வலிசுமந்த மேனியர் கழித்த இறுதிக் கணங்களைத்
தாங்கி நின்ற வணங்கா மண்ணா?

அறம் சார்ந்த பொறுப்புக் குறித்து,
வார்த்தைகளை அள்ளி வீசும் மானுடர்கள் தலைகுனியும்,
நெருப்பாற்றின் இறுதிப் புள்ளிதான்
முள்ளிவாய்க்கால்.

சொந்த மண்ணில்,
வேற்று மனிதரால் கொல்லப்படுதல்
மனித உரிமை மீறலாம்.
அது ஒரு இனப்படுகொலை என்று விளிப்பதற்கு,
இந்த ஜனநாயகத்தின் காவலர்களுக்குத் தயக்கம்.

இழந்த இறைமையை மீட்க,
அரசியல் வாழ்வுரிமைப் போரை நடாத்துவோரை,
பயங்கரவாதிகள் என்று அழைப்பதில்
இவர்களுக்கு ஒரு மகிழ்வு.

போருக்குக்கூட தர்மங்கள், நியதிகள், நியாயங்களைவகுத்துவிட்டது இப்பூமி.

போர் நிகழும்போது,சிறிதளவு மக்கள் கொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ளலாம்
என்கிறது உலக யுத்த தர்மம்.

பெருமளவு மக்கள் கொல்லப்படுகையில்,
இத் தர்மங்கள் மீறப்படுவதாகக் கூறும் இவ்வுலகம்,
நல்லிணக்கத்தை உருவாக்கப்பாடுபடுங்கள் என்றுதமிழ் மக்களுக்கு அறிவுரை கூறுவது அபத்தமானது.

பாதுகாப்புவலயங்கள் ,கொலைக்களமாக மாறியதென,
உலகப் பொதுச்சபையின் அறிக்கை கூறினாலும்,
சிங்களப் பேரினவாதம் அதனைஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

வல்லரசு வல்லூறுகளின் துணையோடு,
வஞ்சகப் போர்புரிந்த சிங்கள தேசம்,
முள்ளிவாய்க்காலில், தான் நிகழ்த்தியது
மனிதாபிமானப் போரென்று நியாயப்படுத்துகிறது.

இந்த வன்மத்தின் ஊற்றுக்கண் ,
மகாவம்ச மயக்கத்திலிருந்து தோன்றுவதுதான் நிஜம்.

அதிகார ஆசையைத் துறந்த பௌத்தம்,
அதிகாரத்தை தக்கவைக்கும் கருவியாகக்கையாளப்படுவதே கொடுமை.

போர் முடிந்துவிட்டது..இனி செஞ்சிலுவைச் சங்கங்கள் தேவையற்றதென
மே 17 இல் பொய்யுரைத்தான் கோத்தபாய.

இன்று, மாவிட்டபுரத்தில் நின்றவாறு,
தமது இரத்தக்கறை படிந்த கரங்களை மறைப்பதற்கு,
அதியுயர் பாதுகாப்பு வலயங்களை பேரம்பேசும் பொருளாகமாற்றியுள்ளான் மஹிந்தரின் தம்பி பசில் ராஜபக்ச.

அதாவது, போர்க்குற்றச் சாட்சியங்கள் மௌனித்தால் ,
பறிக்கப்பட்ட தமிழர் நிலங்கள் திருப்பித் தரப்படுமாம்.

முள்ளிவாய்க்காலுக்கு இது பொருந்தாது.

அதிகார மிகையுணர்ச்சி கொண்ட சிங்களதேசத்தின்,
இனஅழிப்பு வேட்டைக்காடாக மாறிய இம்மண்ணில் ,
பூர்வீக தமிழ்குடிகள் புதையுண்டு கிடக்கின்றார்.

ஆதலால் பிணம் தின்னும் சிங்கள தேசத்தின்,
இரண்டாம் பாகத்தை எழுதி முடிக்க ,
புதிய மானுடக்கவிகள் எழுந்து வரவேண்டும்.

சிரிய அதிபர் மேற்குலக எதிர்ப்பாளர் என்பதால்,
டாங்கிகளை ஏவி சொந்த மக்களை கொன்று குவிக்கும்ஒடுக்குமுறைதனை, நியாயப்படுத்தும் மயக்கப்பார்வைகளை,
இறக்கி வைக்க வேண்டும்.

யூதர்களை ஜேர்மனிய நாசிக்கள் இனப்படுகொலை செய்கையில்வெடித்துக் கிளம்பிய அதே ஆத்மாவேசம்,
பாலஸ்தீன மக்களை இஸ்ரேலியர்கள் அழிக்கும்போது
ஏற்பட வேண்டும்.

இன்று சர்வதேச அரசியலில் மட்டுமல்ல, கவிதைகளிலும் இரட்டை வேடங்கள்.

அன்று சிந்திய இரத்தம் இன்னமும் காயவில்லை.
தமிழின அடியழித்தல் பயணத்தை சிங்களம் கைவிடவில்லை.

இருப்பினும் மறக்கமுடியுமா அந்த நாளை!!

வெறியாட்டத்தை நிகழ்த்திவிட்டு, மே 18 , 2009 அன்று ,
சிங்களத்தின் ரூபவாகினி வெற்றிமுரசு கொட்டியது.
காணொளியில் காட்சிகள் விரிந்தன.
கருகியநிலையில் போராளிகளின் உடலங்கள்.
சிங்களப் பேரினவாதத்தின் நயவஞ்சகப் போரை-அதன் ஆற்றாமையை, எரிகாயங்கள் வெளிப்படுத்தின.
வரிப் புலிச் சீருடை தரித்தோர் மத்தியில்,
சிவில் உடையுடன் வீழ்த்தப்பட்டுக் கிடந்தார் ஒரு பெண்.
அவர்தான் , வான்படை தந்த கேணல் சங்கரின் துணைவி குகா அக்கா.
அந்த உணர்வற்ற உடலத்தின் சொந்தக்காரர் யாரென்பதை
சிங்களத்திடம் சொன்னான் முன்னாள் தளபதி ஒருவன்.
தன்னோடு தோளோடுதோள் நின்று களமாடிய தோழர்களின்,
வித்துடலை சுமந்து நிற்கும் பல துயிலுமில்லங்களை,
இனவெறியர்கள் சிதைக்கும்போது, மௌனத்தின் ஊடாக
அங்கீகாரம் வழங்கிய அந்த தளர்பதியின் செயலை எவர்தான் மன்னிப்பார்.

அண்ணனும், மண்ணும் தனதிரு விழிகளென ,
இறுதிவரை உறுதிபடக்கூறிய அந்த மாவீரப் பெண்ணின் முன்னால்,
இந்த முன்னாள்கள் எல்லோரும் வெறும் தூசிக்குச் சமம்.

வீழ்ந்தவர்கள் விரும்பியதோ,
எதிர்காலத்தின் மீதான தாயகக்கனவு
நிஜமாக வேண்டும் என்பதனையே…
.
பூசிமெழுகப்பட்ட முரண்கள் அவர்களின் ஆளுமையில் துளியளவும் இல்லை.

எழுத்தின் திசையில் போராடிச் செல்லும்
மனவுறுதி கொண்ட மானுடக்கவி போல,
வாழ்வியல் நெருக்கடிகள் கடுமையாக முடக்கினாலும்இருப்பிற்காய் போராடும் விளிம்புநிலை மனிதர்கள் போல,
விடுதலை வேட்கையோடு,
தலை வணங்கா வன்னி மண்ணில்,
இறுதிவரை போராடினார்கள் அம் மாமனிதர்கள்.

தொடரும் வாழ்க்கைப் பயணம்,
முடியும்போது தொடங்கும் என்கிற எதார்த்த நிலையை,
முள்ளிவாய்க்கால் முடிவல்ல என்பது உணர்த்துகிறது.

நிபுணர் குழுவின் அறிக்கை,
உலகின் வாசல்களை திறந்திருக்கிறது.
பலமாகத் தட்டியபோது மூடியிருந்த கதவுகள்,
நிரந்தரமாக மூடப்பட்டு விட்டதோவென்றுசோர்வுற்று இருந்த மக்கள்,
விழிப்படையும் காலம் இதுதான்.

–

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

நான்காவது தமிழாராய்ச்சி மாநாடு தொடர்பாக கைலாசபதி மதிப்பீடு : லெனின் மதிவானம்

Comments 10

  1. புவி says:
    15 years ago

    மக்களை பற்றி கிஞ்சித்தும் சிந்திக்காத புலிகளுக்காக ஏன் இந்த வீணான ஒப்பாரி.
    இறப்பின் வலி புரிந்த,
    மனவிரிவுள்ள ஆளுமையின்
    சொந்தக்காரர்கள் அவர்கள்.

    ஆனால் தலைவர் மட்டும் சாகாமல் இருக்க சரணடைந்தார்,
    குப்பியை மறந்தார்.
    மக்களை நம்பாததால் மண்ணும் பறி போனது !

    மெல்ல மெல்ல ” இனிஒரு ” இணையதளமும் “ஆள் காட்டி “களின் வலைக்குள் சிக்கி விட்டதா என என்ன தோன்றுகிறது.

  2. Thevan 2 says:
    15 years ago

    தமிழரின் குருதியும் சதையும் விற்றாவது புலி அண்ணனை காப்பாற்ற இனவெறி பிடித்த சிங்கத்திற்கு தமிழரை இரையாக்கி இனப்படு கொலைக்கு சிங்கதிட்கு வழி காட்டிய குற்ற உணர்வு இருக்கும் என்று இவர்களிடம் இருந்து எதிர் பார்ப்பது முட்டாள் தனம். இவர்களை மக்கள் திருத்தும் நாட்கள் நெருங்குகிறது.

    நாடு(நட்டு) கழண்ட அரசின் ( இன்றும் புலிக்கொடி கட்டி) இனப்படுகொலை நினைவு நாளிட்கான அழைபிட்க்கு மக்கள் நல்ல பதில் கொடுத்துள்ளார்கள்.

  3. புதியவன் says:
    15 years ago

    கலைஞர் ,அறிஞர் ,கழகம் ,தம்பிமார் ,அண்ணர்மார் ,
    புறநானூற்று வீரம் , மானம்,கடமை ,கண்ணியம்,கட்டுப்பாடு
    போன்ற சொற் சிலம்பங்கள் மக்களை ஏமாற்ற
    தி.மு.க வினரால் எவ்வாறு பயன் பட்டதோ
    அவ்வாறே …
    மண்,தேசம் ,வீரம் ,தேசியத்தலைவர்,களம் ,மாவீரர் ,மாமனிதர்
    லெப்டினன் ,கேணல் என்று புலிகளின்
    சொற் சிலம்பங்கள் மிக வேகமாக சுழற்றப் பட்டன.
    உலக நாட்டு அரசியலை புகுப்பாய்வு செய்யும்
    இதயச்சந்திரன் இன்னும் ஏன்
    அதையே சுழற்றி கொண்டிருக்கிறார் ?!
    கொச்சை படுத்தப்பட்ட அந்த சொற்களை
    எழுதவே வெட்கமாய் இருக்கிறது.

    முதலில் தேசிய தலைவருக்கு
    ஒழுங்கான அஞ்சலியை செய்யுங்கள்.!!!!

    யாரும் செய்ததாக தெரியவில்லையே !!!
    இதுவா நீங்கள் தலைவனுக்கு காட்டும்
    விசுவாசம் !!!!!….

    • THAMIL MARAN says:
      15 years ago

      புதினம் ராஜகோபாலும் இதையேதான் எழுதுகிறார் ஆனால் அவர் விளங்கிக் கொண்டது அந்த விளம்பர வருமானம்தான் அதையும் தாண்டி புதினம் யோசிப்பது பழம் பத்திரிகையாளர்.யாரும் யாரையும் இன்புற வைப்பதற்காக எதையும் செய்வதில்லை.

  4. anusha says:
    15 years ago

    தேசியத்தலைவர்> லெப்டினன்ட் கேணல் என்றெல்லாம் வித்தை காட்டினவங்கள் இப்போ பிரதமர்> துணைப்பிரதமர்> அமைச்சர் என்றல்லோ விளையாட்டு விடுகினம்.  

    • Thevan 2 says:
      15 years ago

      anusha!!! எப்போ நீங்கள் இனவெறி பிடித்த சிங்கத்திற்கு உங்கள் கண்டனத்தை தெரிவிப்பீரோ தெரியவில்லை. மக்களிற்கு எதிரான எல்லாவற்றையும் கண்டிக்கும் துணிவிருந்தால் மட்டும் எதிரானவர்களை கண்டியுங்கள். இல்லையேல் உங்கள் கண்டனம் காழ்ப்புணர்ச்சி, தனிப்பட்ட விரோதம் மற்றும் மக்கள் விரோத எதிர்மறை கருத்தாகவே இருக்கும்.

      நாம் ஒரு மெல்லிய நூலின் மேல் நடக்கவேண்டியுளது, கவனமாக கருத்துக்களை தெரிவுயுங்கள்

      • THAMIL MARAN says:
        15 years ago

        நண்பனை நண்பந்தான் கண்டிக்க முடியும் அது நாம் அதிகமாக எடுத்துக் கொள்ளூம் உரிமை அதற்காக எதிரியிடம் விலைபோக மாட்டோம் அது தமிழராகிய நாம் தமிழர் மீது வைத்திருக்கும் ஆழமான அன்பின் உண்மை.இதுதான் யதார்த்தம்.

      • thurai says:
        15 years ago

        இன வெறி பிடித்தயாவரையும் கண்டிக்கத்தான் வேண்டும்.
        அவ்ர்களைக் கண்டிக்கு முன் நம்மிடம் இன பற்று உள்ளதா
        என்பதை சீர் தூக்கி பார்க்க வேண்டும். நம் இனத்தை அழித்து வாழ்பவன்
        எம்முடன் கூடியிருக்கும் போது சிங்களவ்ர்களையும்
        பகைவர்களாக்கி இரு பகுதியினரிற்கும் இலங்கைத்தமிழர்
        இரையாகது இருப்பது அவசியமல்லவா.-துரை

        • Thevan 2 says:
          15 years ago

          ///இன வெறி பிடித்தயாவரையும் கண்டிக்கத்தான் வேண்டும்.//
          வாழ்த்துகள்
          /அவ்ர்களைக் கண்டிக்கு முன் நம்மிடம் “இன பற்று” உள்ளதா
          என்பதை சீர் தூக்கி பார்க்க வேண்டும்/
          மிக மிக சரியான கருத்து. வாழ்த்துகள். சிறு திருத்தம் “இன பற்று” என்பதிற்கு பதிலாக “தவறுகள்” என உங்கள் அனுமதியுடன்.

          ///நம் இனத்தை அழித்து வாழ்பவன்
          எம்முடன் கூடியிருக்கும் போது சிங்களவ்ர்களையும்
          பகைவர்களாக்கி இரு பகுதியினரிற்கும் இலங்கைத்தமிழர்
          இரையாகது இருப்பது அவசியமல்லவா ////

          இந்தக் கருத்து மிகவும் பிற்போக்கானது.உங்கள் பக்கமும் காரணங்கள் இருக்கலாம், திருத்துவது நன்றாக இருக்கும்.

          முதல் பேயை(இன வெறி அரசு) கலைக்க நாமே எம் பலவீனங்களால்(கூட்டுப் பொறுப்பு ) நம்மிடம் இருந்து ஒரு பிசாசை(அரசியல் அற்ற ஆயுதம் ) உருவாக்கி அந்தப் பிசாசின் தொல்லை தீர்க்க முதல்ப்பேயிடமே தஞ்சமடையக் கூறுவது, மிகவும் பிற்போக்கானது.

  5. Muthukumar says:
    15 years ago

    தமிழனின் பரம்பரை குணம் ஒற்றுமை இன்மை அது இங்கே வெளிப்படுகிறது .

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...