இலங்கையின் இனவாதக் கட்சிகளில் ஒன்றான ஜே.வி.பி இலிருந்து பிளவடைந்த முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் இலங்கை சென்றுள்ளார். அவுஸ்திரேலியாவில் வசித்துவரும் குமார் குணரத்தினம் இலங்கையிலிருந்து நாடுகடத்தப்பட்ட பின்னர் இலங்கையின் எல்லைக்குள் அனுமதிக்காத இலங்கை அரசு இப்போது அனுமதித்துள்ளது.
மைத்திரிபால சிரிசேனவிற்கு எதிராகப் பிரச்சாரம் மேற்கொள்ளும் நோக்குடனேயே குமார் குணரத்தினம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவலக்ள் தெரிவிக்கின்றன.
ஜே.வி.பி இற்கும் மைத்திரிபாலவிற்கு இரகசிய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் அதனை அம்பலப்படுத்தப் போவதாகவும் முன்னிலை சோசலிசக் கட்சி கூறிவருகிறது.
தமிழ்ப் பேசும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை அங்கீகரிக்காத பேரினவாத வாக்குப் பொறுக்கும் கட்சியான முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரத்தினம் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலுக்கு ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் இலங்கையில் அனைத்து முயற்சிகளும் இரண்டு தரப்பிலும் மேற்கொள்ளப்படுகின்றன. இடதுசாரிகள் என்ற பெயரில் வாக்குப் பொறுக்கும் அனைத்துக் கட்சிகளும் தமது எதிர்காலத் பிழைப்புவாத நலன்களைக் கருத்தில் கொண்டு தேர்தலில் மக்களை மந்தைகளாக்க முயற்சிக்கின்றன.
All are expected…
When he came here to Canada, we saw his background…
May be he think, like cat he drink milk…
‘Capitalist country’ Australia based ‘ Socialist’ Kumar Gunaratnam must made a good deal…
தமிழர் பிரச்சினைக்கு சுயாட்சியே ஒரே தீர்வு
http://euthayan.com/paperviews.php?id=32079&thrus=4