31.12.2008.
குடும்ப வன்முறை சட் டம் குறித்து ஊடகங்களில் விளம்பரப்படுத்த வேண்டும் என மகளிர் சட்ட உதவி மன்றம் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது. மன்றத் தின் 18வது ஆண்டு பேர வைக் கூட்டம் டிசம்பர் 27 அன்று சென்னையில் வழக் கறிஞர் பி.பிரசாத் தலை மையில் நடைபெற்றது.
மாதர் சங்கத்தின் புரவலர் பாப்பா உமாநாத், மாநிலத் தலைவர் என். அமிர்தம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்க ளாகக் கலந்து கொண்டனர். மருத்துவரீதியான ஆலோ சனைகள் குறித்து டாக்டர் பி.ஆனந்த் கருத்துரையாற்றி னார்.
இப்பேரவைக்கூட்டத்தில் வேலை அறிக்கை, வரவு செலவு அறிக்கை, தீர்மானங் கள் புதிய நிர்வாகிகள், எதிர்கால கடமைகள் முன் வைக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
மன்றத்தின் தலைவராக வழக்கறிஞர் ஆர்.வைகை, துணைத்தலைவர்களாக பி.பிரசாத், சுதா ராமலிங் கம், டி.சரஸ்வதி, செயலாள ராக பி.ஜான்சிராணி, துணை செயலாளர்களாக பி.பிரபாவதி, எஸ்.உஷா ராணி, எஸ்.மனோன்மணி, பொருளாளர் எஸ்.லட்சுமி ஆகியோர் புதிய நிர்வாகி களாக தேர்ந்தெடுக்கப்பட் டனர். டாக்டர் காமராஜ், விஜயா ஜானகிராமன், ஆர்.சந்திரா, ஆர்.சசிரேகா, பாமிதா, பூங்குழலி ஆகி யோர் செயற்குழு உறுப்பி னர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
குடும்ப வன்முறை தடுப் புச் சட்டத்தை பரவலாக ஊடகங்கள் மூலம் விளம் பரம் செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. மேலும் உரிய அதிகாரிகள் நியமனம், தனி அலுவலகம், நிதி ஆதாரம், தேவையான ஊழியர் நியமனம், சம்பந்தப் பட்டோருக்கான பயிற்சி கள் அளிப்பது ஆகியவற் றையும் உடனடியாக செய்து தர வேண்டும் என்றும் தமி ழக அரசை வலியுறுத்துவ தாகவும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
தமிழக மகளிர் ஆணை யம் சட்ட அந்தஸ்துடன் கூடிய சிவில் அதிகாரம் படைத்த ஆணையமாக இயக்கிட தமிழக அரசு அறிவித்திட வேண்டும் என்றும் தீர்மானம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
மகளிர் சட்ட உதவி மன்ற அலுவலகம் அண் ணா நகர், எண்.113, எஸ்.பிளாக், 6வது மெயின் ரோடு என்ற புதிய முகவரி யில் இடமாற்றம் செய்து இயங்கிடவும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.