துனிசியாவின் அதிபர் சென் அல் அப்டீன் பென் அலி மக்களின் போராட்டங்களுக்கு முகம்கொடுக்க இயலாது நாட்டைவிட்டுத் தப்பியோடியுள்ளார். மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களின் பின்னர் அதிகாரத்தை இழந்து தப்பியோடியுள்ள சம்பவம் எதிர்பார்க்கப்படாத ஒன்று என பிரித்தானிய அமரிக்கப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
கோபம் கொண்ட மக்களின் போராட்டங்கள் ஆரம்பித்த போது அப் போராட்டங்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் வரை நகர்த்தப்படும் என யாரும் எதிர்பார்க்கவில்லை என்கிறது கார்டியன் பத்திரிகை.
குடும்ப ஆட்சியை நடத்திவந்த பென் அலி தனது குடும்ப
அதிகாரத்தினுள் நாட்டின் வளங்களையும் வியாபார நிறுவனங்களையும் உட்படுத்தியிருந்தார்.
சமூக மாற்றத்திற்கான் புரட்சியாக மக்கள் போராட்டங்களின் வெற்றி கருதப்பட முடியாவிடினும் அரபு உலகில் சிந்தனை மாற்றம் ஒன்று ஏற்படுவதற்கான ஆரம்பமாக அமையும் என பரவலாகக் கருத்துத் தெரிவிக்கப்படுகிறது.
மக்களின் ஆர்ப்பாட்டங்களின் மீது பென் அலிக்கு விசுவாசமான இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல்களில் பலர் உயிரிழந்ததனர்.
சில நாட்களின் முன்னர் முகமட் பூவாசிசி என்ற வேலையற்ற மாணவன் தங்கியிருந்த தெரு அங்காடியொன்றை பொலீசார் கையகப்படுத்தி முகமட்டை வெளியேற்றினர். முகமட் தனக்குத் தானே தீ மூட்டித் தற்கொலை செய்து கொண்டார். அரசின் மீதான கோபத்தைத் தற்கொலையாக வெளிப்படுத்தியதிலிருந்து மக்கள் தெருவிற்கு வந்து போராட்டங்களை ஆரம்பித்தனர்.
உலகமயமாதலின் மறுவிளைவாக இளைஞர்களின் வேலையின்மை 30 வீதமாக அதிகரித்திருந்தது. வேலையற்றோரில் பெரும் பகுதியினர் பட்டதாரி மாணவர்கள்.
அல்ஜீரியா, துனிசியா மற்றும் மரோக்கோ போன்ற மக்ரேபியன் நாடுகளில் துனிசியப் போராட்டத்தின் வெற்றி எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் உணவுப் பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக அல்ஜீரியாவில் பெருந்த்தொகையான மக்களின் போராட்டம் நடந்துள்ளது.
அரசிற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட எந்தக் குழுக்களும் இஸ்லாமிய அடையாளத்தையோ அடிப்படை வாதத்தையோ முன்வைக்கவில்லை. பென் அலி எதிர்ப்பாளர்களை இஸ்லாமியப் பயங்கரவாதிகள் எனப் பிரசாரம் மேற்கொண்டிருந்தாலும் அது வலுப்பெறவில்லை.
பிரஞ்சு அரசாங்கம் இறுதி நிமிடம் வரை பென் அலிக்கு ஆதரவான நிலையிலிருந்தது. பிரஞ்சு அமைச்சர் பென் அலிக்கு ஆதரவாகப் பாதுகாப்புப் படைகளை அனுப்பவும் தயார்நிலையிலிருப்பதாக வெளிப்படையாக அறிவித்திருந்தார்.
இன்று துனிசியப் பாராளுமன்றத்தின் சபா நாயகர் ஆட்சியைப் பொறுபேற்றுள்ளார். தற்காலிகமாக மக்களின் போராட்டம் இடை நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எது எவ்வாறாயினும் இருப்பிலுள்ள சமூக அமைப்பினால் மக்களின் கோரிக்கைகளை திருப்த்திப்படுத்தும் எந்த முன்மொழிவுகளையும் முன்வைக்கப்பட முடியாத நிலையே காணப்படுகிறது என்றும் மக்களின் எதிப்புப் போராட்டங்கள் தொடரும் எனவும் எதிர்வுகூறப்படுகிறது. மக்களின் போராட்டம் நிறுவனமயபடுத்தப்பட்ட வகையில் ஆரம்பமாவதற்கான ஆரம்பக் கூறுகளைப் பல வழிகளில் காணலாம்.
துனிசியாவின் அதிபர் சென் அல் அப்டீன் பென் அலி மக்களின் போராட்டங்களுக்கு முகம்கொடுக்க இயலாது நாட்டைவிட்டுத் தப்பியோடியுள்ள செய்தி தமிழக முதல்வர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைத்திருக்கும். ஆனாலும் காங்கிரஸ் தலைகள் ஆறுதல் கூறியிருக்கும். தமிழர்கள் துனிசியர்களல்ல. பெரும்பாலான தமிழர்கள் துண்டுக்காக அலைபவர்கள். வருகிற தேர்த்தலில் இலவச அரிசிபோல், கைத்தொலைபேசி அல்லது ஏதாவதொன்றை இலவசம், அன்பளிப்பு என்று அறிவித்துவிடு. மக்கள் உன்பின்னே வாலாட்டி வந்து காலை நக்கி உனக்கே ஓட்டுப்போடுவார்கள்.
இலங்கை அதிபர் மகிந்தவுக்கும் அவரது தேசம் சார்ந்த குழுக்களூக்கும் இது ஒரு பாடம் இங்கு இருந்து எதையாவது படிக்க வேண்டும் அல்லா வந்து அருளாசி வழங்குவார் எனும் அறூவையை விட வேண்டும்.அடுத்து எதற்கெடுத்தாலும் இந்தியாவில் இருக்கும் தமிழகத்த காட்டி கொட்டாவி விடுவதை சிலர் விடுவது நல்லது