ஏதோ கட்டிடத்தில் தொட்டால் உதிர்கிறது, பூச்சுப் பிரச்சனை என்று அதுமட்டும்தான் கேசவ பிள்ளை பூங்கா பார்க்கில் கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரியத்தின் phase-1 மற்றும் Phase -2 பகுதியின் பிரச்சினையாக அரசும் அரசியல்வாதிகளும், சில நண்பர்களும் திரிகின்றனர்.
கட்டிடத்தின் தரம் என்பது பிரச்சனையின் ஒரு அம்சம் மட்டுமே. கேசவ பிள்ளை பூங்கா குடிசை மாற்று வாரியக் கட்டிடங்களில் பிரச்சனைகள் ஏராளம். இது இதே காலகட்டத்தில் கட்டப்பட்ட பல குடிசை மாற்று வாரிய 9, 11 மற்றும் 13 மாடி கட்டிடங்களிலும் இப்போதும் காணமுடிகிறது. ஊடக நண்பர்களுக்கும் பொது வெளியில் இருக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் உதவக்கூடிய வகையில் கீழ்க்கண்ட கேள்விகளை தொகுத்துள்ளேன்.
1.முதலில் அங்கு வாழப்போகும் மக்களுக்கு எந்தவிதமான அறிவிப்பும் கலந்தாலோசிக்கும் இல்லாமல் யாரை கேட்டு 11 மற்றும் 9 மாடிக் கட்டிடங்களை கட்டினீர்கள்?
2. அன்பு சக ஊடக, அரசியல் நண்பர்கள், கட்டிடத்தின் பின்புறமுள்ள தகரக் கொட்டகைகளில் வாழும் மக்களுடன் கொஞ்சம் பேசிப்பாருங்கள். அவர்கள் எப்படி வெளியேற்றப்பட்டார்கள் என்ற கோரக் கதையும், தகரக் கொட்டகைகளில் வாழ்க்கை எப்படி நகர்கிறது என்ற நிதர்சனமான உண்மையையும் உங்களுக்கு உரைப்பார்கள்.
3.ஏதோ பிரச்சனை பூசிவிட்டால் சரியாவது அல்ல. பக்கத்தில் Phase – 2 1056 வீடுகள் உள்ளது அங்கு பூசி மொழுகப்பட்டுள்ளது. அங்கு வாழும் ஈ- பிளாக் வாசிகளை கேட்டுப்பாருங்கள். அந்தப் பூச்சுக்குப் பின் உள்ளே ஒன்றும் இல்லை. Phase -1 இன் கோலம் தான் அங்கும் (இன்னும் 1 மாதத்தில் அப்பட்டமாகிவிடும்). தற்போதைய தேவை Phase 2 வையும் சேர்த்து தரக்கட்டுப்பாட்டை செய்யுங்கள் என்ற கோரிக்கை தான்.
4. இந்தக் கட்டிடம் FSI அங்கீகாரம் மீறி கட்டப்பட்டது உடன் தீயணைப்பு சார்ந்த விதிமுறைகள் எதையும் இவர்கள் பின்பற்றவில்லை. இது தொடர்பாகவும் நமது கோரிக்கைகள் நீள வேண்டும்.
5. ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களில் வசிக்கும் அப்பகுதிக்கு குடிசை மாற்று வாரியம் ஒரு விளையாட்டு மைதானம் கூட இல்லாமல் கட்டியது என்ன வித ‘திட்டம்’?
6. அதில் உள்ள 15 லட்சம் ஆவதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. உங்களுக்கு தெரிந்த எந்த சிவில் இன்ஜினியரையும் கேளுங்கள். பிரீமியம் ரேட்டில் ஒரு ஸ்கொயர் ஃபீட் 2000 ரூபாய் என்று வைத்தாலும் என்ன தொகை வரும் என்று பாருங்கள். அங்கு கட்டப்பட்டது பிரீமியம் கட்டிடம் அல்ல மிக மோசமான தரம்கெட்ட ஒரு கட்டிடம் அது. நான் விசாரித்த வரையில் மூன்று லட்சத்திற்கும் அப்படியான ஒரு வீட்டை தாராளமாக கட்டலாம் என்று சொல்கிறார்கள்.
8. கட்டியிருக்கும் வீடுகள் Western Toilet setup கொண்டது. அங்கே நிறைய பேர் சொந்த செலவில் அதனை Indian Toilet ஆக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். தண்ணீர் பிரச்சினை அதிகமுள்ள அப்பகுதியில் யாரைக் கேட்டு Western Toilet முறையை அரசு ஏற்றது?
7. தண்ணீரே கிடைக்காத நிலத்தடி நீர் மோசமான அந்தப் பகுதியில் பதினோராவது, 9 வது மாடிக்கு எப்படி தண்ணீர் கொடுப்பீர்கள்? அதுவும் வெயில் காலங்களில்?
8. வீடுகளின் அளவு 400 சதுர அடி என்று உள்ளது. உண்மையான வீட்டின் உள் அளவை அளந்து பாருங்கள். 360க்கும் – அதற்கும் குறைவே. நபார்டில் ஒரு மாட்டைப் பராமரிக்க 230 சதுரடி கேட்கிறார்கள். அங்குள்ள பெரும்பாலான குடும்பங்கள் வீட்டிற்கு 4 பேருக்கு மேல்.
9. வீடுகளுக்கான sunshade இல்லாமலேயே ஒவ்வொரு வீடுகளும் கட்டப்பட்டுள்ளன. மழை, வெயிலுக்கு அது இன்றியமையாதது என்பது அடிப்படை புரிதல்.
10. லிப்ட்கள் அங்கு ஒவ்வொரு பிளாக்கிலும் இருந்தாலும். அந்த லிப்ட் கம்பெனியின் பெயரை நீங்கள் எங்காவது பார்துள்ளீர்களா? அந்த லிப்டை பயன்படுத்திவிட்டு பின் அதில் போட்டிருக்கும் கொள்ளலவில் நபர்களை ஏற்ற முடியுமா என்று நீங்களே சொல்லுங்கள்.
இன்னும் கட்டிடத்தைப் பற்றி சொல்ல இன்னமும் நிறைய உள்ளது. வேறு ஒரு தருணத்தில் இன்னும் விரிவாக.
புளியந்தோப்பில் தகரக் கொட்டகைகளில் வாழும் மக்களிடம் ஒன்றரை லட்சம் பணம் கேட்கும் அரசை குடிசை மாற்று வாரியத்தை நோக்கி சில கேள்விகள் :
1. 2016இல் வீடு இடிக்கப்பட்டு புதிய வீடுகள் கட்டித் தருவோம் என்று வாக்குறுதி கொடுத்த இம்மக்களுக்கு 2020ல் பத்தாம் மாதம் போட்ட ஒரு அரசானையை காட்டி பணம் கேட்பது எந்த விதத்தில் சரியானது?
2. கே.பி. பார்க் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் தற்போது இந்த 2020 அரசானையை காட்டி பயனீட்டாளர்கள் தொகை என்று ஒன்றரை லட்சம் ரூபாய் கேட்கின்றனர் இது என்னவிதமான அணுகுமுறை?
3. குடிசையில் வாழும் தினக் கூலிகளாக இருக்கக்கூடிய மக்களுக்கு வீடு கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட குடிசை மாற்று வாரியம் இப்படி பயனீட்டாளர்கள் தொகை என்று ஒன்றரை லட்சம் என்றும் பராமரிப்பு கட்டணம் என்று மாதம் 700 ரூபாயும் வசூலித்தால் அவர்களால் எப்படி அதை கட்ட முடியும்?
4. இந்த நியாயமான கேள்விகளை கேட்கும் மக்களை விஷமத்தனம் செய்பவர்கள், சில்மிஷம் செய்பவர்கள், புரளிகளை பரப்புபவர்கள் என்று பொறுப்பற்ற முறையில் மனசாட்சியற்ற விதத்தில் ஏழை மக்களை நேற்று அமைச்சர் தா மோ அன்பரசன் மற்றும் அமைச்சர் சேகர் பாபு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டது எந்த அடிப்படையில் நியாயமாகும்?
5. மேலும், அமைச்சர் உங்களுக்கு வேண்டுமானால் கடனாக தனியார் வங்கியில் இருந்து வாங்கித் தருகிறோம் என்கிறார். அன்றாடங்காய்ச்சி மக்களுக்கு கடனாக வாங்கி கொடுக்கும் பொழுது அதற்கான வட்டியே அதிகமாக வரும். இதற்காக தனியார் வங்கியில் லோன் வாங்கி தர முன் வரக்கூடிய இந்த அணுகுமுறையை எப்படிப் பார்ப்பது?
6. இதற்காக திமுகவின் பகுதி வாரியான தலைவர்கள் முனைப்போடு தனியார் வங்கிகளுடன் கூட்டு சேர்ந்து மாதம் 2500 அல்லது மாதம் 1800 என்ற scheme களை அடுத்த ஏழு முதல் பத்து வருடம் கட்ட நிர்ப்பந்திக்கிறார்கள்? இதைவிடக் கொடுமையான விஷயம் வேறு என்ன உள்ளது?
7. ஒருவேளை கடனாக இந்த தொகையை மக்களுக்கு வாங்கிக் கொடுத்தால் அதற்கு ஆகும் செலவையும் அவர்களால் சமாளிக்க முடியாது என்ற எதார்த்த நிலையை வட்டி அதிகமானால் கட்டத் தவறாமல் தவணையை விட்டுவிட்டால் என்ன கதியாகும் கடன் சேர்ந்தாள் மக்கள் எந்த கதிக்கு தள்ளப்படுவார்கள் என்பது அங்குள்ள மக்களிடம் ஓட்டு கேட்டு சென்ற ஒவ்வோர் அரசியல்வாதிக்கும் தெரியாதா?