குஜராத் மாநிலம் சர்தார்புரா பகுதியில் கடந்த 2002-ம் ஆண்டு கலவரத்தில் 33 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 31 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2002-ல் கோத்ராவில் ரயில் எரி்ப்பு சம்பவத்தை அடுத்து நடந்த கலவரத்தில், சர்தார்புரா பகுதியில் 33 பேர் எரித்துக் கொல்லப்பட்டார்கள். அதுதொடர்பாக நடந்த விசாரணை முடிவடைந்து, இன்று நேற்ற்ய் அறிவிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 73 பேரில், 42 பேரை விடுவித்த நீதிமன்றம், 31 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்துள்ளது. குஜராத் கலவரங்களைத் தூண்டிவிட்ட நரேந்திர மோடி இன்னும் தண்டிக்கப்படவில்லை.