யாழ். நகரில் ஆயிரக்கணக்கான படையினர் நிலைகொண்டிருப்பதால் அரசாங்கத்துக்குத் தெரியாமல் உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் மீதான தாக்குதல் நடத்தப்பட்டிருக்காது என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்திருக்கின்றார்.
கொழும்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்பாக இன்று கொண்டுவரப்பட்டபோதே அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்கள் மத்தியில் சரத் பொன்சேகா இதனைத் தெரிவித்தார்.
இரண்டாவது நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக சரத் பொன்சேகா தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணைகள் இன்று மேன்முறையீ்டு நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
குகநாதன் மீதான தாக்குதல் இடம்பெற்ற பகுதிக்குப் பொறுப்பாகவுள்ள இராணுவத் தளபதி அரசாங்கத்தின் கையாளாகவே செயற்பட்டுள்ளார் எனவும் சரத் பொன்சேகா குற்றஞ்சாட்டினார்.
வெள்ளைக் கொடியோடு சரணடைய வந்தோரை சுட்டுக் கொல்லும்படி உத்தரவிட்டது கோத்தபாய தான் என்று நீங்கள் கூறியதற்கு எதிராகத் தானே இப்போது உங்கள் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது?இப்போது அப்படியொரு சம்பவமே,அதாவது வெள்ளைக் கொடியுடன் எவரும் சரணடைய வரவேயில்லை என்று அரசு கூறுகிறதே?அப்படியாயி ஏன் இந்த வழக்கு?என்று கேட்க நாதியில்லை!குகநாதன் தாக்குதலுக்கு நீலிக் கண்ணீர் வடிக்கிறீர்களோ?