தோழர் லீலாவதியைக் கொன்ற கொலை பாதகர்களுக்கு அண்ணாதுரை பிறந்த நாளில் விடுதலை, அதுவும் நன்னடத்தை விதிகளின் கீழ்…… தினகரன் அலுவலகத்திற்குள் நுழைந்து மூன்று ஊழியர்களை உயிரோடு எரித்துக் கொன்ற அட்டாக் பாண்டி என்னும் திமுக ரௌடிக்கும் விடுதலை. விடுதலை மட்டுமல்ல மதுரை மாவட்ட விவசாயத்துறை ஆலோசனைக் குழு வாரியப் பதவி. தா.கிருட்டிணனை அழகிரி கொல்லவில்லை என்று நீதிமன்றம் அவரை நிரபராதி என்று விடுதலை செய்து விட்டது. அப்படியானால் தா.கிருட்டினனை கொன்றது யார்? ஆமாம் யார்தான் கொன்றார்கள்? இந்தக் குற்றவாளிகள் எல்லாம் வெளியே வந்தபின்பு கெடாத சட்டம் ஒழுங்கு, நளினி என்ற பெண் வெளிவருவதால் கெட்டு விடப்போகிறாதா?” – யாழ்மகன்
நளினி விடுதலை – அரசியல் சிக்கலும் சட்ட சிக்கலும்: ஒரு விவாதம்
நாள்: 04-04-2010, ஞாயிறு மாலை 5 மணி,
இடம்: தெய்வநாயகம் பள்ளி, தி.நகர், சென்னை
வரவேற்புரை : பிரபாகரன், கீற்று.காம்
கருத்துரை
எழுத்தாளர் பூங்குழலி
பத்திரிகையாளர் அருள் எழிலன்
ஆவணப்பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார்
பாடலாசிரியர் தாமரை
விடுதலை இராசேந்திரன் (பொதுச் செயலாளர், பெரியார் திராவிடர் கழகம்)
வழக்கறிஞர் சுந்தரராஜன்
வழக்கறிஞர் பாண்டிமாதேவி
நன்றியுரை : ப்ரியா, கீற்று.காம்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : கீற்று இணையதளம்
நீங்களும் வாருங்கள்! உங்கள் நண்பர்களுக்கும் இந்நிகழ்வு குறித்து தெரியப்படுத்துங்கள்!!
என்றும் அன்புடன்
கீற்று ஆசிரியர் குழு
தொடர்புக்கு: 98840 68321
தன்டனை என்பது திருந்துவதர்க விடுதலை கொடுக்கலாம் கொடுக்க வேன்டும்
இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்தின் போர் முயற்சிக்கு ஊக்குவிப்பு வழங்கிய காலத்தில், ப்ரியங்கா நளினியைச் சிறையில் சந்த்திதது பற்றிப் பரபரப்புச் செய்திகள் வெளிவந்ததை மறந்திருக்க மாட்டோம். அது தமிழரின் கவனத்தைத் திசை திருப்பும்நாடகம் என்று சிலர் சொன்னார்கள். தமிழ் ஊடகங்கள் கணக்கில் எடுக்கவில்லை.
நளினியை வைத்து இன்னும் எத்தனை பேர் எத்தனை நாடகங்கள் ஆடுவார்களோ!