15.09.2008.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (14.09.2008) ஜப்பானுக்குப் பயணமானார். இலங்கைக்கு உதவி வழங்கும் முக்கிய நாடுகளுள் ஒன்றான ஜப்பானின் உதவியுடன் கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே கிழக்கு முதலமைச்சர் ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் ஜப்பானுக்குப் பயணமான முதலமைச்சருடன் அவரது இணைப்புச் செயலாளர் ஆசாத் மௌலானா மற்றும் பிரத்தியேகச் செயலாளர் குமாரசாமி நந்தகோபன் ஆகியோரும் சென்றுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பாகவும் இந்த விஜயத்தின்போது பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.