கிழக்கு மாகாணசபையில ஆளும்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அதிகப்படியான வாக்குகளைப் பெற்று 2 போனஸ் ஆசனங்கள் உட்பட மொத்தம் 14 ஆசனங்களைப் பெற்று முன்னிலையில் உள்ளது.
அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய இம்மாகாண சபைக்கான தேர்தலில் ஒவ்வொரு கட்சிகளும் பெற்ற மொத்த வாக்குகள் மற்றும் ஆசனங்கள் வருமாறு:
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 200, 044 வாக்குகளைப் பெற்று 14 ஆசனங்களையும்,
இலங்கைத் தமிழரசுக் கட்சி 193,827 வாக்குகளைப் பெற்று 11 ஆசனங்களையும்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 132,917 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களையும்,
ஐக்கிய தேசியக் கட்சி 74,901 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களையும்,
விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி 9,522 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.