பாலக் கொடிச்சேனை கிராமத்தின் முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.45 மணிக்கு இந்த சம்பவம் இடம்பெற்றதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
உழவு இயந்திரமொன்றில் சென்ற இனந்தெரியாத குழுவினராலேயே குறித்த பள்ளிவாசல் தீயிடப்பட்டு உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். அத்துடன் குறித்த மீள்குடியேற்ற கிராமத்திலுள்ள நான்கு தற்காலிக குடிசைகள் மற்றும் ஒரு கடை ஆகியனவும் இதன்போது இந்த இனந்தெரியாத குழுவினரால் தீயிடப்பட்டன.
உன்னிச்சைக் கிராமத்தைச் சேர்ந்த பெண் கோடரியினால் நேற்று மாலை வெட்டித் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து உன்னிச்சைக் கிராமத்தில் 03 வீடுகள், ஒரு கடை, பள்ளிவாசல் என்பன தீ மூட்டப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.
முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகளை இலங்கை அரசு ஊக்கப்படுத்துவதுகிறது. மகிந்த பாசிசத்தின் தொடர்ச்சியான இருப்புக்கு இது தேவையானதாக உள்ளது.
ஒட்டுண்ணிகளின் இறுக்கத்தை அறிய அரசு ஏழைக்கு இட்ட தீ
ரி என் ஏ கொடுத்த வோட் பிளான் காடையர்களூக்கு பணம் வேண்டும் www.tnaglobal.org
இது இறைவனின் வீடு அதற்கு அவனே பொறுப்பு.