கிழக்கு மாகாணத்தில் அதிகரித்துவரும் வெளிநாட்டுத் தலையீடுகளைக் கண்டித்தும் இங்கு நிலை கொண்டுள்ள வெளிநாட்டவர்களை உடனடியாக வெளியேற்றக்கோரியும் மக்கள் விடுதலை முன்னணியின் கிழக்கு மக்கள் பேரவை கடந்த புதன்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளது.
சம்பூரில் அமைக்கப்படும் அனல்மின் நிலையம் மற்றும் புல்மோட்டை இல்மனைட் கனியமணலும் இந்தியாவுக்கு விற்கப்பட்டுள்ளன. இதன் மூலமான இவர்களது ஊடுருவல் எமது மண்ணில் ஆதிக்கம் செலுத்தவும் பாரிய பிளவுகளை ஏற்படுத்தவும் வழிவகுப்பதாக அமையுமாதலால் அரசாங்கம் அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டுமெனவும் புல்மோட்டையில் அமைக்கப்பட்டுள்ள தள வைத்திசாலைக்கு எதிராகவும் வர்ஷாவின் படுகொலையைக் கண்டித்தும் அபேபுர சிங்கள மக்களின் குடியிருப்பை உறுதிப்படுத்த காணி உறுதிப்பத்திரம் வழங்கக்கோரியும் இவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் திருகோணமலை மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு முன்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.







